Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௬௨

Qur'an Surah An-Nahl Verse 62

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௬௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيَجْعَلُوْنَ لِلّٰهِ مَا يَكْرَهُوْنَ وَتَصِفُ اَلْسِنَتُهُمُ الْكَذِبَ اَنَّ لَهُمُ الْحُسْنٰى لَا جَرَمَ اَنَّ لَهُمُ النَّارَ وَاَنَّهُمْ مُّفْرَطُوْنَ (النحل : ١٦)

wayajʿalūna
وَيَجْعَلُونَ
And they assign
இன்னும் ஆக்குகின்றனர்
lillahi
لِلَّهِ
to Allah
அல்லாஹ்விற்கு
mā yakrahūna
مَا يَكْرَهُونَ
what they dislike
எதை/வெறுக்கின்றனர்
wataṣifu
وَتَصِفُ
and assert
இன்னும் வர்ணிக்கின்றன
alsinatuhumu
أَلْسِنَتُهُمُ
their tongues
நாவுகள்/அவர்களின்
l-kadhiba
ٱلْكَذِبَ
the lie
பொய்யை
anna
أَنَّ
that
நிச்சயமாக
lahumu
لَهُمُ
for them
தங்களுக்கு
l-ḥus'nā
ٱلْحُسْنَىٰۖ
(is) the best
சொர்க்கம், மிக அழகியது
lā jarama
لَا جَرَمَ
No doubt
கண்டிப்பாக
anna
أَنَّ
that
நிச்சயம்
lahumu
لَهُمُ
for them
இவர்களுக்கு
l-nāra
ٱلنَّارَ
(is) the Fire
நரகம்தான்
wa-annahum
وَأَنَّهُم
and that they
இன்னும் நிச்சயம் இவர்கள்
muf'raṭūna
مُّفْرَطُونَ
(will) be abandoned
விடப்படுபவர்கள்

Transliteration:

Wa yaj'aloona lillaahi maa yakrahoona wa tasifu alsinatuhumul kaziba anna lahumul husnaa laa jarama anna lahumun Naara wa annahum mufratoon (QS. an-Naḥl:62)

English Sahih International:

And they attribute to Allah that which they dislike [i.e., daughters], and their tongues assert the lie that they will have the best [from Him]. Assuredly, they will have the Fire, and they will be [therein] neglected. (QS. An-Nahl, Ayah ௬௨)

Abdul Hameed Baqavi:

தாங்கள் விரும்பாதவை(களாகிய பெண் மக்)களை அல்லாஹ்வுக்குக் கற்பிக்கும் இவர்கள் (மறுமையில்) நிச்சயமாக தங்களுக்கு நன்மைதான் கிடைக்குமென்று அவர்களின் நாவுகள் பொய்யை வர்ணிக்கின்றன. நிச்சயமாக இவர்களுக்கு நரகம்தான் என்பதிலும் நரகத்திற்கு முதலாவதாக இவர்கள்தாம் செல்வார்கள் என்பதிலும் சந்தேகமேயில்லை. (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௬௨)

Jan Trust Foundation

(இன்னும்) தாங்கள் விரும்பாதவைகளை (பெண் மக்களை) அல்லாஹ்வுக்கு உண்டென்று (கற்பனையாக) ஏற்படுத்துகிறார்கள். நிச்சயமாகத் தங்களுக்கு (இதனால்) நன்மையே கிட்டுமென அவர்களுடைய நாவுகள் பொய்யுரைக்கின்றன; நிச்சயமாக அவர்களுக்கு (நரக) நெருப்புத் தான் இருக்கிறது; இன்னும், நிச்சயமாக அவர்கள் அதில் முற்படுத்தப்படுவார்கள் என்பதிலும் சந்தேகமில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தாங்கள் வெறுப்பவற்றை அல்லாஹ்விற்கு ஆக்குகின்றனர். நிச்சயமாக தங்களுக்கு சொர்க்கம் உண்டு என்று அவர்களின் நாவுகள் பொய்யை வர்ணிக்கின்றன. கண்டிப்பாக நிச்சயம் இவர்களுக்கு நரகம்தான்; நிச்சயம் இவர்கள் (நரகத்தில் கேட்பார் இன்றி விட்டு) விடப்படுபவர்கள் ஆவர்.