Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௬௧

Qur'an Surah An-Nahl Verse 61

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௬௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَوْ يُؤَاخِذُ اللّٰهُ النَّاسَ بِظُلْمِهِمْ مَّا تَرَكَ عَلَيْهَا مِنْ دَاۤبَّةٍ وَّلٰكِنْ يُّؤَخِّرُهُمْ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّىۚ فَاِذَا جَاۤءَ اَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُوْنَ سَاعَةً وَّلَا يَسْتَقْدِمُوْنَ (النحل : ١٦)

walaw yuākhidhu
وَلَوْ يُؤَاخِذُ
And if Allah were to seize
தண்டித்தால்
l-lahu l-nāsa
ٱللَّهُ ٱلنَّاسَ
Allah were to seize the mankind
அல்லாஹ்/மக்களை
biẓul'mihim
بِظُلْمِهِم
for their wrongdoing
குற்றத்தின் காரணமாக/அவர்களுடைய
mā taraka
مَّا تَرَكَ
not He (would) have left
விட்டிருக்க மாட்டான்
ʿalayhā
عَلَيْهَا
upon it
அதன் மீது
min dābbatin
مِن دَآبَّةٍ
any moving creature
ஓர் உயிரினத்தை
walākin
وَلَٰكِن
but
எனினும்
yu-akhiruhum
يُؤَخِّرُهُمْ
He defers them
பிற்படுத்துகிறான் அவர்களை
ilā
إِلَىٰٓ
for
வரை
ajalin
أَجَلٍ
a term
ஒரு தவணை
musamman
مُّسَمًّىۖ
appointed
குறிப்பிடப்பட்டது
fa-idhā jāa
فَإِذَا جَآءَ
Then when comes
வந்தால்
ajaluhum
أَجَلُهُمْ
their terms
தவணை/அவர்களுடைய
lā yastakhirūna
لَا يَسْتَـْٔخِرُونَ
not they (will) remain behind
பிந்த மாட்டார்கள்
sāʿatan
سَاعَةًۖ
an hour
ஒரு விநாடி
walā yastaqdimūna
وَلَا يَسْتَقْدِمُونَ
and not they can advance (it)
இன்னும் முந்த மாட்டார்கள்

Transliteration:

Wa law yu'aakhizul laahun naasa bizulminhim maa taraka 'alaihaa min daaabbatinw wa laakiny yu'akhkhiruhum ilaaa ajalim musamman fa izaa jaaa'a ajaluhum laa yastaakhiroona saa'atanw wa laa yastaqdimoon (QS. an-Naḥl:61)

English Sahih International:

And if Allah were to impose blame on the people for their wrongdoing, He would not have left upon it [i.e., the earth] any creature, but He defers them for a specified term. And when their term has come, they will not remain behind an hour, nor will they precede [it]. (QS. An-Nahl, Ayah ௬௧)

Abdul Hameed Baqavi:

மனிதர்கள் செய்யும் குற்றங்குறைகளைப் பற்றி அவர்களை அல்லாஹ் (உடனுக்குடன்) பிடிப்பதாக இருந்தால் (பூமியில்) ஓர் உயிரினைத்தையுமே அவன் விட்டுவைக்க மாட்டான். எனினும், ஒரு குறிப்பிட்ட தவணை வரையில் (பிடிக்காது) அவர்களைப் பிற்படுத்துகிறான். அவர்களுடைய தவணை வரும் பட்சத்தில் ஒரு விநாடியும் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௬௧)

Jan Trust Foundation

மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களுக்காக அல்லாஹ் அவர்களை உடனுக்குடன் பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் உயிர்ப்பிராணிகளில் ஒன்றையுமே பூமியில் விட்டு வைக்க மாட்டான்; ஆனால், ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களை(ப் பிடிக்காது) பிற்படுத்துகிறான் - அவர்களுடைய தவணை வந்து விட்டாலோ ஒரு கணமேனும் (தண்டனை பெறுவதில்) அவர்கள் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மக்களை அவர்களுடைய குற்றத்தின் காரணமாக அல்லாஹ் (உடனுக்குடன்) தண்டித்தால் (பூமியில்) ஓர் உயிரினத்தையுமே விட்டிருக்க மாட்டான். எனினும், ஒரு குறிப்பிடப்பட்ட தவணை வரை அவர்களைப் பிற்படுத்துகிறான். அவர்களுடைய தவணை வந்தால் ஒரு விநாடி பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.