குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௫௬
Qur'an Surah An-Nahl Verse 56
ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௫௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَيَجْعَلُوْنَ لِمَا لَا يَعْلَمُوْنَ نَصِيْبًا مِّمَّا رَزَقْنٰهُمْۗ تَاللّٰهِ لَتُسْـَٔلُنَّ عَمَّا كُنْتُمْ تَفْتَرُوْنَ (النحل : ١٦)
- wayajʿalūna
- وَيَجْعَلُونَ
- And they assign
- இன்னும் ஆக்குகின்றனர்
- limā lā yaʿlamūna
- لِمَا لَا يَعْلَمُونَ
- to what not they know -
- அவர்கள் அறியாதவற்றுக்கு
- naṣīban
- نَصِيبًا
- a portion
- ஒரு பாகத்தை
- mimmā
- مِّمَّا
- of what
- இருந்து
- razaqnāhum
- رَزَقْنَٰهُمْۗ
- We have provided them
- கொடுத்தோம்/அவர்களுக்கு
- tal-lahi
- تَٱللَّهِ
- By Allah
- அல்லாஹ் மீது சத்தியமாக
- latus'alunna
- لَتُسْـَٔلُنَّ
- surely you will be asked
- நிச்சயமாக விசாரிக்கப்படுவீர்கள்
- ʿammā kuntum
- عَمَّا كُنتُمْ
- about what you used (to)
- பற்றி/இருந்தீர்கள்
- taftarūna
- تَفْتَرُونَ
- invent
- இட்டுக்கட்டுகிறீர்கள்
Transliteration:
Wa yaj'aloona limaa laa ya'lamoona naseebam mimmaa razaqnnaahum; tallaahi latus'alunaa 'ammaa kuntum taftaroon(QS. an-Naḥl:56)
English Sahih International:
And they assign to what they do not know [i.e., false deities] a portion of that which We have provided them. By Allah, you will surely be questioned about what you used to invent. (QS. An-Nahl, Ayah ௫௬)
Abdul Hameed Baqavi:
நாம் அவர்களுக்குக் கொடுத்த பொருள்களில் ஒரு பாகத்தைத் தங்களுடைய தெய்வங்களுக்கென்று குறிப்பிட்டுக் கூறுகின்றனர். இதனை அவர்கள் அறிந்துகொள்ளவே முடியாது. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் கற்பனையாகக் கூறும் இப்பொய்(க் கூற்று)களைப் பற்றி (மறுமையில்) நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௫௬)
Jan Trust Foundation
இன்னும், அவர்கள் நாம் அவர்களுக்கு அளித்துள்ளதில் ஒரு பாகத்தைத் தாம் அறியாத (பொய் தெய்வங்களுக்காக) குறிப்பிட்டு வைக்கிறார்கள்; அல்லாஹ்வின் மேல் ஆணையாக! நீங்கள் இட்டுக் கட்டிக்கொண்டிருந்த (இவை) பற்றி நிச்சயமாக கேட்கப்படுவீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து ஒரு பாகத்தைத் தாம் அறியாத (கற்சிலைகள், பிசாசுகள் போன்ற)வற்றுக்கு ஆக்குகின்றனர் (-அதை வைத்து பூஜை செய்கின்றனர்). அல்லாஹ் மீது சத்தியமாக! நீங்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்ததைப் பற்றி (மறுமையில்) நிச்சயமாக விசாரிக்கப்படுவீர்கள்.