Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௫௩

Qur'an Surah An-Nahl Verse 53

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௫௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا بِكُمْ مِّنْ نِّعْمَةٍ فَمِنَ اللّٰهِ ثُمَّ اِذَا مَسَّكُمُ الضُّرُّ فَاِلَيْهِ تَجْـَٔرُوْنَۚ (النحل : ١٦)

wamā bikum
وَمَا بِكُم
And whatever you have
எது/உங்களிடம்
min niʿ'matin
مِّن نِّعْمَةٍ
of favor
அருட்கொடையில்
famina l-lahi
فَمِنَ ٱللَّهِۖ
(is) from Allah
அல்லாஹ்விடமிருந்து
thumma
ثُمَّ
Then
பிறகு
idhā massakumu
إِذَا مَسَّكُمُ
when touches you
உங்களுக்கு ஏற்பட்டால்
l-ḍuru
ٱلضُّرُّ
the adversity
துன்பம், தீங்கு
fa-ilayhi
فَإِلَيْهِ
then to Him
அவனிடமே
tajarūna
تَجْـَٔرُونَ
you cry for help
கதறுகிறீர்கள்

Transliteration:

Wa maa bikum minni'matin faminal laahi summa izaa massakumud durru fa ilaihi taj'aroon (QS. an-Naḥl:53)

English Sahih International:

And whatever you have of favor – it is from Allah. Then when adversity touches you, to Him you cry for help. (QS. An-Nahl, Ayah ௫௩)

Abdul Hameed Baqavi:

உங்களுக்குக் கிடைத்துள்ள பாக்கியம் அனைத்தும் அல்லாஹ்விடமிருந்து வந்தவைதாம். உங்களை யாதொரு தீங்கு அணுகும் பட்சத்தில் அவனிடமே முறையிடுகிறீர்கள். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௫௩)

Jan Trust Foundation

மேலும், எந்த நிஃமத் (பாக்கியம்) உங்களிடம் இருந்தாலும் அது அல்லாஹ்விடமிருந்து உள்ளதேயாகும்; பின்னர் ஏதாவது ஒரு துன்பம் உங்களைத் தொட்டு விட்டால் அவனிடமே (அதை நீக்குமாறு பிரலாபித்து) நீங்கள் முறையிடுகிறீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்களிடம் அருட்கொடையில் எது உள்ளதோ அது அல்லாஹ்விடம் இருந்துதான் (உங்களுக்கு கிடைத்தது). பிறகு, உங்களுக்கு துன்பம் ஏற்பட்டால் அவனிடமே (பிரார்தித்து அதை நீக்கக் கோரி) கதறுகிறீர்கள்.