Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௪௯

Qur'an Surah An-Nahl Verse 49

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلِلّٰهِ يَسْجُدُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ مِنْ دَاۤبَّةٍ وَّالْمَلٰۤىِٕكَةُ وَهُمْ لَا يَسْتَكْبِرُوْنَ (النحل : ١٦)

walillahi
وَلِلَّهِ
And to Allah
அல்லாஹ்விற்கு
yasjudu
يَسْجُدُ
prostrate
சிரம் பணிகிறார்(கள்)
mā fī l-samāwāti
مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
whatever (is) in the heavens
வானங்களில் உள்ளவை
wamā fī l-arḍi
وَمَا فِى ٱلْأَرْضِ
and whatever (is) in the earth
இன்னும் பூமியில்உள்ளவை
min dābbatin
مِن دَآبَّةٍ
of moving creatures
எல்லா உயிரினங்கள்
wal-malāikatu
وَٱلْمَلَٰٓئِكَةُ
and the Angels
இன்னும் வானவர்கள்
wahum
وَهُمْ
and they
இன்னும் அவர்கள்
lā yastakbirūna
لَا يَسْتَكْبِرُونَ
(are) not arrogant
பெருமையடிப்பதில்லை

Transliteration:

Wa lillaahi yasjudu maa fis samaawaati wa maa fil ardi min daaabbatinw walma laaa'ikatu wa hum laa yastakbiroon (QS. an-Naḥl:49)

English Sahih International:

And to Allah prostrates whatever is in the heavens and whatever is on the earth of creatures, and the angels [as well], and they are not arrogant. (QS. An-Nahl, Ayah ௪௯)

Abdul Hameed Baqavi:

வானங்களிலும் பூமியிலும் உள்ள மற்ற உயிரினங்களும் அல்லாஹ்வையே சிரம் பணிந்து வணங்குகின்றன. மலக்குகளும் அவ்வாறே. அவர்கள் (இப்லீஸைப்போல் அவனுக்கு சிரம் பணியாது) பெருமையடிப்பதில்லை. (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௪௯)

Jan Trust Foundation

வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் - ஜீவராசிகளும், மலக்குகளும் அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்து (சிரம் பணிந்து) வணங்குகின்றன. அவர்கள் (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பதில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும் வானவர்களும் அல்லாஹ்விற்கு சிரம் பணிகிறார்கள். அ(ந்த வான)வர்கள் பெருமையடிப்பதில்லை.