Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௪௭

Qur'an Surah An-Nahl Verse 47

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௪௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَوْ يَأْخُذَهُمْ عَلٰى تَخَوُّفٍۗ فَاِنَّ رَبَّكُمْ لَرَءُوْفٌ رَّحِيْمٌ (النحل : ١٦)

aw
أَوْ
Or
அல்லது
yakhudhahum
يَأْخُذَهُمْ
that He may seize them
அவன் பிடித்துவிடுவதை/அவர்களை
ʿalā takhawwufin
عَلَىٰ تَخَوُّفٍ
with a gradual wasting
கொஞ்சம் குறைத்து
fa-inna
فَإِنَّ
But indeed
நிச்சயமாக
rabbakum
رَبَّكُمْ
your Lord
உங்கள் இறைவன்
laraūfun
لَرَءُوفٌ
(is) surely Full of Kindness
மகா இரக்கமானவன்
raḥīmun
رَّحِيمٌ
Most Merciful
மிகக் கருணையாளன்

Transliteration:

Aw yaakhuzahum 'alaa takhawwuf; fa inna Rabbakum la Ra'oofur Raheem (QS. an-Naḥl:47)

English Sahih International:

Or that He would not seize them gradually [in a state of dread]? But indeed, your Lord is Kind and Merciful. (QS. An-Nahl, Ayah ௪௭)

Abdul Hameed Baqavi:

அல்லது (இவர்களை அழித்துவிடக்கூடிய யாதொரு ஆபத்து வருமென்ற) திகிலின் மீது திகிலைக் கொடுத்து இவர்களைப் பிடித்துக் கொள்ளமாட்டான் (என்றும் அச்சமற்று இருக்கின்றனரா? அவன், தான் விரும்பிய வேதனையை இவர்களுக்கு கொடுக்க ஆற்றலுடையவன்.) எனினும், நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க இரக்கமுடையவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான். (ஆதலால், இதுவரை அவர்களை வேதனை செய்யாது விட்டு வைத்திருக்கிறான்.) (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௪௭)

Jan Trust Foundation

அல்லது. அவர்கள் அஞ்சிக் கொண்டிருக்கும் பொழுதே (அல்லாஹ்) அவர்களைப் பிடிக்கமாட்டான் (என்று அச்சமற்றவர்களாக இருக்கிறார்களா?) நிச்சயமாக உங்கள் இறைவன் இரக்கமுடையவன்; பெருங் கிருபையுடையவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லது (அவர்களது பூமியையும் செல்வத்தையும்) கொஞ்சம் (கொஞ்சமாக) குறைத்து அவர்களை அவன் பிடி(த்து அழி)த்து விடுவதை (அச்சமற்றனரா?). (மக்களே!) நிச்சயமாக உங்கள் இறைவன் மகா இரக்கமானவன், பெரும் கருணையாளன். (அதனால்தான் நீங்கள் உடனுக்குடன் தண்டிக்கப்படாமல் விட்டு வைக்கப்பட்டுள்ளீர்கள்.)