குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௪௩
Qur'an Surah An-Nahl Verse 43
ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَآ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ اِلَّا رِجَالًا نُّوْحِيْٓ اِلَيْهِمْ فَاسْـَٔلُوْٓا اَهْلَ الذِّكْرِ اِنْ كُنْتُمْ لَا تَعْلَمُوْنَۙ (النحل : ١٦)
- wamā arsalnā
- وَمَآ أَرْسَلْنَا
- And not We sent
- நாம் அனுப்பவில்லை
- min qablika
- مِن قَبْلِكَ
- before you before you
- உமக்கு முன்னர்
- illā
- إِلَّا
- except
- தவிர
- rijālan
- رِجَالًا
- men
- ஆடவர்களை
- nūḥī
- نُّوحِىٓ
- We revealed
- வஹீ அறிவிப்போம்
- ilayhim
- إِلَيْهِمْۚ
- to them
- அவர்களுக்கு
- fasalū
- فَسْـَٔلُوٓا۟
- so ask
- ஆகவே கேளுங்கள்
- ahla l-dhik'ri
- أَهْلَ ٱلذِّكْرِ
- (the) people (of) the Reminder
- ஞானமுடையவர்களை
- in kuntum
- إِن كُنتُمْ
- if you
- நீங்கள் இருந்தால்
- lā taʿlamūna
- لَا تَعْلَمُونَ
- (do) not know
- அறியாதவர்களாக
Transliteration:
Wa maaa arsalnaa min qablika illaa rijaalan nooheee ilaihim; fas'alooo ahlaz zikri in kuntum laa ta'lamoon(QS. an-Naḥl:43)
English Sahih International:
And We sent not before you except men to whom We revealed [Our message]. So ask the people of the message [i.e., former scriptures] if you do not know. (QS. An-Nahl, Ayah ௪௩)
Abdul Hameed Baqavi:
(நபியே!) உங்களுக்கு முன்னர் வஹீ கொடுத்து நாம் அவர்களிடம் அனுப்பி வைத்த தூதர்களெல்லாம் ஆடவர்கள்தாம். ஆகவே, (இவர்களை நோக்கி) "நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளாமலிருந்தால் (முந்திய வேதங்களைக்) கற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்" (என்று கூறுங்கள்.) (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௪௩)
Jan Trust Foundation
(நபியே!) இன்னும் உமக்கு முன்னர் வஹீ கொடுத்து நாம் அவர்களிடம் அனுப்பி வைத்த தூதர்கள் எல்லோரும் ஆடவரே தவிர வேறல்லர்; ஆகவே (அவர்களை நோக்கி) “நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளாமலிருந்தால். (முந்திய) வேத ஞானம் பெற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்” (என்று கூறுவீராக).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) உமக்கு முன்பு நாம் (தூதர்களாக மனித) ஆடவர்களைத் தவிர (வானவர்களை) அனுப்பவில்லை. அ(ந்த ஆட)வர்களுக்கு நாம் வஹ்யி அறிவிப்போம். ஆகவே, (இவர்களை நோக்கி) “நீங்கள் (இதை) அறியாதவர்களாக இருந்தால் (உண்மையான இறை வேதத்தின்) ஞானமுடையவர்களைக் கேளுங்கள்”(என்று கூறுவீராக!).