குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௪௧
Qur'an Surah An-Nahl Verse 41
ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالَّذِيْنَ هَاجَرُوْا فِى اللّٰهِ مِنْۢ بَعْدِ مَا ظُلِمُوْا لَنُبَوِّئَنَّهُمْ فِى الدُّنْيَا حَسَنَةً ۗوَلَاَجْرُ الْاٰخِرَةِ اَكْبَرُۘ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَۙ (النحل : ١٦)
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- And those who
- எவர்கள்
- hājarū
- هَاجَرُوا۟
- emigrated
- நாடு துறந்தார்கள்
- fī l-lahi
- فِى ٱللَّهِ
- in (the way) (of) Allah
- அல்லாஹ்விற்காக
- min baʿdi
- مِنۢ بَعْدِ
- after after
- பின்பு
- mā ẓulimū
- مَا ظُلِمُوا۟
- [what] they were wronged
- அவர்கள் அநீதியிழைக்கப்படுதல்
- lanubawwi-annahum
- لَنُبَوِّئَنَّهُمْ
- surely We will give them position
- நிச்சயமாக அமைப்போம்/அவர்களுக்கு
- fī l-dun'yā
- فِى ٱلدُّنْيَا
- in the world
- இவ்வுலகில்
- ḥasanatan
- حَسَنَةًۖ
- good
- அழகியதை
- wala-ajru
- وَلَأَجْرُ
- but surely the reward
- கூலிதான்
- l-ākhirati
- ٱلْءَاخِرَةِ
- (of) the Hereafter
- மறுமையின்
- akbaru
- أَكْبَرُۚ
- (is) greater
- மிகப் பெரியது
- law kānū yaʿlamūna
- لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ
- if they know
- அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!
Transliteration:
Wallazeena haajaroo fil laahi mim ba'di maa zulimoo lanubawwi' annahum fiddunyaa hasanatanw wa la ajrul Aakhirati akbar; law kaanoo ya'lamoon(QS. an-Naḥl:41)
English Sahih International:
And those who emigrated for [the cause of] Allah after they had been wronged – We will surely settle them in this world in a good place; but the reward of the Hereafter is greater, if only they could know. (QS. An-Nahl, Ayah ௪௧)
Abdul Hameed Baqavi:
(நம்பிக்கையாளர்களே! உங்களில்) எவர்கள் (எதிரிகளால்) துன்புறுத்தப்பட்டு பின்னர் அல்லாஹ்வுக்காக(த் தங்கள் ஊரை விட்டு)ப் புறப்பட்டார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம் இவ்வுலகிலும் நல்ல இருப்பிடத்தையே தருவோம்; மறுமையின் கூலியோ (இதைவிட) மிகப் பெரிது. (இதனை) அவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமே! (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௪௧)
Jan Trust Foundation
கொடுமைப்படுத்தப்பட்ட பின்னர், எவர்கள் அல்லாஹ்வுக்காக நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றார்களோ, அவர்களுக்கு, நாம் நிச்சயமாக அழகான தங்குமிடத்தை இவ்வுலகத்தில் கொடுப்போம். இன்னும், அவர்கள் அறிந்து கொண்டார்களேயானால் மறுமையிலுள்ள (நற்) கூலி (இதைவிட) மிகவும் பெரிது;
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எவர்கள் தாம் அநீதியிழைக்கப்பட்ட பின்பு அல்லாஹ்விற்காக(த் தங்கள் ஊரை, நாட்டை) துறந்தார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம் இவ்வுலகில் அழகிய (இருப்பிடத்)தை அமை(த்து தந்து அதில் வசிக்க வை)ப்போம். (அவர்களுக்குரிய) மறுமையின் கூலிதான் (இதைவிட) மிகப் பெரிது. (இதை மற்றவர்கள்) அறிந்திருக்க வேண்டுமே!