Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௩௯

Qur'an Surah An-Nahl Verse 39

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لِيُبَيِّنَ لَهُمُ الَّذِيْ يَخْتَلِفُوْنَ فِيْهِ وَلِيَعْلَمَ الَّذِيْنَ كَفَرُوْٓا اَنَّهُمْ كَانُوْا كٰذِبِيْنَ (النحل : ١٦)

liyubayyina
لِيُبَيِّنَ
That He will make clear
தெளிவுபடுத்துவதற்காக
lahumu alladhī
لَهُمُ ٱلَّذِى
to them that
அவர்களுக்கு/எதை
yakhtalifūna
يَخْتَلِفُونَ
they differ
முரண்படுகின்றனர்
fīhi
فِيهِ
wherein
அதில்
waliyaʿlama
وَلِيَعْلَمَ
and that may know
இன்னும் அறிவதற்காக
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوٓا۟
those who disbelieved
நிராகரித்தவர்கள்
annahum kānū
أَنَّهُمْ كَانُوا۟
that they were
நிச்சயமாக அவர்கள்/இருந்தனர்
kādhibīna
كَٰذِبِينَ
liars
பொய்யர்களாக

Transliteration:

Liyubaiyina lahumul lazee yakhtalifoona feehi wa liya'lamal lazeena kafarooo annahum kaanoo kaazibeen (QS. an-Naḥl:39)

English Sahih International:

[It is] so He will make clear to them [the truth of] that wherein they differ and so those who have disbelieved may know that they were liars. (QS. An-Nahl, Ayah ௩௯)

Abdul Hameed Baqavi:

(இம்மையில்) அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருந்ததை அவர்களுக்கு அல்லாஹ் தெளிவாக அறிவிப்பதற்காகவும், நிராகரிப்பவர்கள் கூறிக்கொண்டிருந்த பொய்யை அவர்கள் நன்கறிந்து கொள்வதற்காகவும் (மறுமையில் அவர்கள் உயிர்ப்பிக்கப் படுவார்கள். அவ்வாறு அவர்களை எழுப்புவது நமக்கு ஒரு பொருட்டன்று.) (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௩௯)

Jan Trust Foundation

(இவ்வுலகில்) அவர்கள் எவ்விஷயத்தில் பிணங்கி(த் தர்க்கித்து)க் கொண்டிருந்தார்களோ, அதை அவர்களுக்குத் தெளிவு படுத்துவதற்காகவும், காஃபிர்கள் தாம் பொய்யர்களாக இருந்தார்கள் என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் (அல்லாஹ் அவர்களை மறுமையில் உயிர்ப்பிப்பான்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் எதில் முரண்படுகிறார்களோ அதை (அல்லாஹ்) அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும், நிராகரித்தவர்கள் நிச்சயமாக தாம் பொய்யர்களாக இருந்தோம் என்பதை அறிவதற்காகவும் (மறுமையில் அவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான்).