குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௩௮
Qur'an Surah An-Nahl Verse 38
ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَيْمَانِهِمْۙ لَا يَبْعَثُ اللّٰهُ مَنْ يَّمُوْتُۗ بَلٰى وَعْدًا عَلَيْهِ حَقًّا وَّلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَۙ (النحل : ١٦)
- wa-aqsamū
- وَأَقْسَمُوا۟
- And they swear
- சத்தியம் செய்தனர்
- bil-lahi
- بِٱللَّهِ
- by Allah
- அல்லாஹ் மீது
- jahda aymānihim
- جَهْدَ أَيْمَٰنِهِمْۙ
- strongest (of) their oaths
- அவர்கள் மிக உறுதியாக சத்தியமிடுதல்
- lā yabʿathu
- لَا يَبْعَثُ
- Allah will not resurrect Allah will not resurrect
- எழுப்ப மாட்டான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah will not resurrect
- அல்லாஹ்
- man
- مَن
- (one) who
- எவர்
- yamūtu
- يَمُوتُۚ
- dies
- இறக்கின்றார்
- balā
- بَلَىٰ
- Nay
- அவ்வாறன்று
- waʿdan
- وَعْدًا
- (it is) a promise
- வாக்கு
- ʿalayhi
- عَلَيْهِ
- upon Him
- அவன் மீது
- ḥaqqan
- حَقًّا
- (in) truth
- கடமையானது
- walākinna
- وَلَٰكِنَّ
- but
- எனினும்
- akthara
- أَكْثَرَ
- most
- அதிகமானவர்(கள்)
- l-nāsi
- ٱلنَّاسِ
- (of) the mankind
- மக்களில்
- lā yaʿlamūna
- لَا يَعْلَمُونَ
- (do) not know
- அறியமாட்டார்கள்
Transliteration:
Wa aqsamoo billaahi jahda aimaanihim laa yab'asul laahu mai yamoot; balaa wa'dan 'alaihi haqqanw wa laakinna aksaran naasi laa ya'lamoon(QS. an-Naḥl:38)
English Sahih International:
And they swear by Allah their strongest oaths [that] Allah will not resurrect one who dies. But yes – [it is] a true promise [binding] upon Him, but most of the people do not know. (QS. An-Nahl, Ayah ௩௮)
Abdul Hameed Baqavi:
(நபியே!) இறந்தவர்களுக்கு அல்லாஹ் உயிர் கொடுத்து எழுப்ப மாட்டான் என்று இந்நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வின் மீதே மிக்க உறுதியான சத்தியம் செய்து கூறுகின்றனர். அவ்வாறன்று; ("உங்களை உயிர்கொடுத்து எழுப்புவேன்" என்று) அவன் கூறிய வாக்கு முற்றிலும் உண்மையானதே! எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதனை) அறிந்துகொள்ள மாட்டார்கள். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௩௮)
Jan Trust Foundation
இறந்தவர்களை அல்லாஹ் (உயிர்ப்பித்து) எழுப்ப மாட்டான் என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது பிரமாணமாகச் சத்தியம் செய்கிறார்கள். அப்படியல்ல! (உயிர் கொடுத்து எழுப்புவதான அல்லாஹ்வின்) வாக்கு மிக்க உறுதியானதாகும்; எனினும் மக்களில் பெரும்பாலோர் இதை அறிந்து கொள்வதில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இறக்கின்றவர்களை அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்ப மாட்டான் என்று அல்லாஹ் மீது இவர்கள் மிக உறுதியாக சத்தியம் செய்தனர். அவ்வாறன்று; (“இறந்தவர்களை எழுப்புதல்”) அவன் மீது கடமையான (சத்திய) வாக்காகும்! எனினும், மக்களில் அதிகமானவர்கள் அறிய மாட்டார்கள்.