Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௩௬

Qur'an Surah An-Nahl Verse 36

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَقَدْ بَعَثْنَا فِيْ كُلِّ اُمَّةٍ رَّسُوْلًا اَنِ اعْبُدُوا اللّٰهَ وَاجْتَنِبُوا الطَّاغُوْتَۚ فَمِنْهُمْ مَّنْ هَدَى اللّٰهُ وَمِنْهُمْ مَّنْ حَقَّتْ عَلَيْهِ الضَّلٰلَةُ ۗ فَسِيْرُوْا فِى الْاَرْضِ فَانْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِيْنَ (النحل : ١٦)

walaqad
وَلَقَدْ
And certainly
திட்டவட்டமாக
baʿathnā
بَعَثْنَا
We sent
அனுப்பினோம்
fī kulli ummatin
فِى كُلِّ أُمَّةٍ
into every nation
எல்லாசமுதாயங்களில்
rasūlan
رَّسُولًا
a Messenger
ஒரு தூதரை
ani uʿ'budū
أَنِ ٱعْبُدُوا۟
that "Worship
என்று/வணங்குங்கள்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
wa-ij'tanibū
وَٱجْتَنِبُوا۟
and avoid
இன்னும் விலகுங்கள், து£ரமாகுங்கள்
l-ṭāghūta
ٱلطَّٰغُوتَۖ
the false deities"
ஷைத்தானை விட்டு
famin'hum
فَمِنْهُم
Then among them
அவர்களில்
man
مَّنْ
(were some) whom
எவர்
hadā
هَدَى
Allah guided
நேர்வழி காட்டினான்
l-lahu
ٱللَّهُ
Allah guided
அல்லாஹ்
wamin'hum
وَمِنْهُم
and among them
இன்னும் அவர்களில்
man
مَّنْ
(were) some
எவர்
ḥaqqat
حَقَّتْ
was justified
உறுதியாகி விட்டது
ʿalayhi
عَلَيْهِ
on them
அவர் மீது
l-ḍalālatu
ٱلضَّلَٰلَةُۚ
the straying
வழிகேடு
fasīrū
فَسِيرُوا۟
So travel
ஆகவே சுற்றுங்கள்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the earth
பூமியில்
fa-unẓurū
فَٱنظُرُوا۟
and see
இன்னும் பாருங்கள்
kayfa
كَيْفَ
how
எவ்வாறு
kāna ʿāqibatu
كَانَ عَٰقِبَةُ
was the end
இருந்தது/முடிவு
l-mukadhibīna
ٱلْمُكَذِّبِينَ
(of) the deniers
பொய்ப்பிப்பவர்களின்

Transliteration:

Wa laqad ba'asnaa fee kulli ummatir Rasoolan ani'budul laaha wajtanibut Taaghoota faminhum man hadal laahu wa minhum man haqqat 'alaihid dalaalah; faseeroo fil ardi fanzuroo kaifa kaana 'aaqibatul mukazzibeen (QS. an-Naḥl:36)

English Sahih International:

And We certainly sent into every nation a messenger, [saying], "Worship Allah and avoid Taghut." And among them were those whom Allah guided, and among them were those upon whom error was [deservedly] decreed. So proceed [i.e., travel] through the earth and observe how was the end of the deniers. (QS. An-Nahl, Ayah ௩௬)

Abdul Hameed Baqavi:

(பூமியின் பல பாகங்களிலும் வசித்திருந்த) ஒவ்வொரு வகுப்பினருக்கும் நிச்சயமாக நாம் தூதரை அனுப்பியிருக்கிறோம். (அத்தூதர்கள் அவர்களை நோக்கி) "அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். (வழி கெடுக்கும்) ஷைத்தான்களிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் என்(று கூறிச் சென்)றார்கள். அல்லாஹ்வின் நேர்வழியை அடைந்தவர்களும் அவர்களில் உண்டு; வழி கேட்டிலேயே நிலைபெற்றோரும் அவர்களில் உண்டு. ஆகவே, நீங்கள் பூமியில் சுற்றித் திரிந்து (நபிமார்களைப்) பொய்யாக்கிய வர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைப் பாருங்கள். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௩௬)

Jan Trust Foundation

மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“அல்லாஹ்வை வணங்குங்கள்; ஷைத்தானை விட்டு விலகுங்கள் என்று (போதிப்பதற்காக) எல்லா சமுதாயங்களிலும் திட்டவட்டமாக ஒரு தூதரை அனுப்பினோம். அல்லாஹ் நேர்வழி காட்டியவர்களும் அவர்களில் உண்டு; வழிகேடு உறுதியாகி விட்டவரும் அவர்களில் உண்டு. ஆகவே, பூமியில் சுற்றுங்கள்; (நபிகளைப்) பொய்ப்பிப்பவர்களின் முடிவு எவ்வாறு இருந்தது என்று பாருங்கள்.