Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௩௫

Qur'an Surah An-Nahl Verse 35

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالَ الَّذِيْنَ اَشْرَكُوْا لَوْ شَاۤءَ اللّٰهُ مَا عَبَدْنَا مِنْ دُوْنِهٖ مِنْ شَيْءٍ نَّحْنُ وَلَآ اٰبَاۤؤُنَا وَلَا حَرَّمْنَا مِنْ دُوْنِهٖ مِنْ شَيْءٍ ۗ كَذٰلِكَ فَعَلَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ ۚفَهَلْ عَلَى الرُّسُلِ اِلَّا الْبَلٰغُ الْمُبِيْنُ (النحل : ١٦)

waqāla
وَقَالَ
And said
கூறினர்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
ashrakū
أَشْرَكُوا۟
associate partners (with Allah)
இணைவைத்தனர்
law shāa
لَوْ شَآءَ
"If Allah (had) willed
நாடியிருந்தால்
l-lahu
ٱللَّهُ
Allah (had) willed
அல்லாஹ்
mā ʿabadnā
مَا عَبَدْنَا
not we (would) have worshipped
வணங்கியிருக்க மாட்டோம்
min dūnihi
مِن دُونِهِۦ
other than Him other than Him
அவனையன்றி
min shayin
مِن شَىْءٍ
any thing
எதையும்
naḥnu
نَّحْنُ
we
நாங்களும்
walā ābāunā
وَلَآ ءَابَآؤُنَا
and not our forefathers
இன்னும் மூதாதைகளும்/எங்கள்
walā ḥarramnā
وَلَا حَرَّمْنَا
and not we (would) have forbidden
இன்னும் தடுத்திருக்க மாட்டோம்
min dūnihi
مِن دُونِهِۦ
other than Him other than Him
அவனையன்றி
min shayin
مِن شَىْءٍۚ
anything" anything"
எதையும்
kadhālika
كَذَٰلِكَ
Thus
இவ்வாறே
faʿala
فَعَلَ
did
செய்தார்(கள்)
alladhīna min qablihim
ٱلَّذِينَ مِن قَبْلِهِمْۚ
those who (were) before them (were) before them
இவர்களுக்கு முன்னிருந்தவர்கள்
fahal ʿalā
فَهَلْ عَلَى
Then is (there) on
?/மீது
l-rusuli illā
ٱلرُّسُلِ إِلَّا
the messengers except
தூதர்கள்/தவிர
l-balāghu
ٱلْبَلَٰغُ
the conveyance
எடுத்துரைப்பது
l-mubīnu
ٱلْمُبِينُ
clear?
தெளிவாக

Transliteration:

Wa qaalal lazeena ashrakoo law shaaa'al laahu ma 'abadnaa min doonihee min shai'in nahnu wa laaa aabaaa'unaa wa laa harramnaa min doonihee min shai'; kazaalika fa'alal lazeena min qablihim fahal 'alar Rusuli illal balaaghul mubeen (QS. an-Naḥl:35)

English Sahih International:

And those who associate others with Allah say, "If Allah had willed, we would not have worshipped anything other than Him, neither we nor our fathers, nor would we have forbidden anything through other than Him." Thus did those do before them. So is there upon the messengers except [the duty of] clear notification? (QS. An-Nahl, Ayah ௩௫)

Abdul Hameed Baqavi:

இணைவைத்து வணங்குபவர்கள் கூறுகின்றனர்: "அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும் எங்கள் மூதாதைகளும் அவனையன்றி மற்றெதையும் வணங்கியே இருக்கமாட்டோம்; அவனுடைய கட்டளையின்றி எதனையும் (ஆகாததெனத்) தடுத்திருக்கவும் மாட்டோம்." இவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (வீண் விதண்டாவாதம்) செய்து கொண்டிருந்தனர். நம் தூதர்களுக்கு (அவர்களுக்கிடப்பட்ட கட்டளையை) தெளிவாக அறிவிப்பதைத் தவிர (வேறெதுவும்) பொறுப்புண்டா? (கிடையாது.) (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௩௫)

Jan Trust Foundation

“அல்லாஹ் நாடியிருந்தால் அவனையன்றி வேறு எந்தப் பொருளையும், நாங்களோ, எங்களுடைய தந்தையர்களோ வணங்கியிருக்கமாட்டோம்; இன்னும் அவனுடைய கட்டளையின்றி எப்பொருளையும் (ஆகாதவை யென்று) விலக்கி வைத்திருக்கவும் மாட்டோம்” என்று முஷ்ரிக்குகள் கூறுகின்றனர். இப்படித்தான் இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் செய்தார்கள்; எனவே (நம்) தூதர்களுக்குத் (தம் தூதுவத்தைத்) தெளிவாக அறிவிப்பதைத் தவிர வேறு ஏதாவது பொறுப்புண்டா? (இல்லை).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இணைவைத்தவர்கள் கூறினர்: “அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும் எங்கள் மூதாதைகளும் அவனையன்றி எதையும் வணங்கியிருக்க மாட்டோம்; அவன் (கட்டளை) இன்றி எதையும் தடுத்திருக்க மாட்டோம்.” இவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (விதண்டாவாதம்) செய்தார்கள். தூதர்கள் மீது தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர (வேறெதுவும் பொறுப்பு) உண்டா?