Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௩௩

Qur'an Surah An-Nahl Verse 33

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هَلْ يَنْظُرُوْنَ اِلَّآ اَنْ تَأْتِيَهُمُ الْمَلٰۤىِٕكَةُ اَوْ يَأْتِيَ اَمْرُ رَبِّكَ ۗ كَذٰلِكَ فَعَلَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ ۗوَمَا ظَلَمَهُمُ اللّٰهُ وَلٰكِنْ كَانُوْٓا اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ (النحل : ١٦)

hal yanẓurūna
هَلْ يَنظُرُونَ
Do they wait
எதிர்பார்க்கிறார்களா?
illā
إِلَّآ
except
தவிர
an tatiyahumu
أَن تَأْتِيَهُمُ
that (should) come to them
வருவதை/தங்களிடம்
l-malāikatu
ٱلْمَلَٰٓئِكَةُ
the Angels
வானவர்கள்
aw yatiya
أَوْ يَأْتِىَ
or (should) come
அவர்கள் வருவது
amru
أَمْرُ
(the) Command
கட்டளை
rabbika
رَبِّكَۚ
(of) your Lord?
உம் இறைவனின்
kadhālika faʿala
كَذَٰلِكَ فَعَلَ
Thus did
இவ்வாறே செய்தனர்
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
min qablihim
مِن قَبْلِهِمْۚ
(were) before them (were) before them
அவர்களுக்கு முன்னர்
wamā ẓalamahumu
وَمَا ظَلَمَهُمُ
And not wronged them
தீங்கிழைக்கவில்லை/அவர்களுக்கு
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
walākin kānū
وَلَٰكِن كَانُوٓا۟
but they were
எனினும்/இருந்தனர்
anfusahum
أَنفُسَهُمْ
themselves
தங்களுக்கே
yaẓlimūna
يَظْلِمُونَ
wronging
தீங்கிழைப்பவர்களாக

Transliteration:

Hal yanzuroona illaaa an taatiyahumul malaaa'ikatu aw yaatiya amru Rabbik; kazaalika fa'alal lazeena min qablihim; wa maa zalamahumul laahu wa laakin kaanoo anfusahum yazlimoon (QS. an-Naḥl:33)

English Sahih International:

Do they [i.e., the disbelievers] await except that the angels should come to them or there comes the command of your Lord? Thus did those do before them. And Allah wronged them not, but they had been wronging themselves. (QS. An-Nahl, Ayah ௩௩)

Abdul Hameed Baqavi:

(அவ்வக்கிரமக்காரர்களோ தங்கள் உயிரைக் கைப்பற்றுவதற்காக) அவர்களிடம் மலக்குகள் வருவதையோ அல்லது உங்கள் இறைவனின் கட்டளை(ப்படி வேதனை) வருவதையோ அன்றி (வேறெதனையும்) அவர்கள் எதிர் பார்க்கின்றனரா? இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே (அநியாயம்) செய்து கொண்டிருந்தனர். அல்லாஹ் இவர்களுக்கு யாதொரு தீங்கும் இழைக்கவில்லை. எனினும், அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௩௩)

Jan Trust Foundation

(ஆனால் அக்கிரமக்காரர்களோ) தங்களிடம் (உயிர்களைக் கைப்பற்றுவதற்காக) மலக்குகள் வருவதையோ, அல்லது உம் இறைவனுடைய (வேதனை தரும்) கட்டளை வருவதையோ தவிர வேறு எதை அவர்கள் எதிர் பார்க்கின்றனர்? இவர்களுக்கு முன்னிருந்தோரும் இவ்வாறே (அநியாயம்) செய்தார்கள்; இவர்களுக்கு அல்லாஹ் அநியாயம் எதுவும் செய்யவில்லை; ஆனால் அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வானவர்கள் தங்களிடம் வருவதை அல்லது உம் இறைவனின் கட்டளை வருவதைத் தவிர அவர்கள் (வேறு எதையும்) எதிர்பார்க்கிறார்களா? இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே (அநியாயம்) செய்தனர். அல்லாஹ் அவர்களுக்கு தீங்கிழைக்கவில்லை. எனினும், அவர்கள் தங்களுக்கே தீங்கிழைப்பவர்களாக இருந்தனர்.