Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௩௦

Qur'an Surah An-Nahl Verse 30

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ وَقِيْلَ لِلَّذِيْنَ اتَّقَوْا مَاذَآ اَنْزَلَ رَبُّكُمْ ۗقَالُوْا خَيْرًا ۚلِلَّذِيْنَ اَحْسَنُوْا فِيْ هٰذِهِ الدُّنْيَا حَسَنَةٌ ۗوَلَدَارُ الْاٰخِرَةِ خَيْرٌ ۗوَلَنِعْمَ دَارُ الْمُتَّقِيْنَۙ (النحل : ١٦)

waqīla
وَقِيلَ
And it will be said
இன்னும் கூறப்பட்டது
lilladhīna
لِلَّذِينَ
to those who
எவர்களுக்கு
ittaqaw
ٱتَّقَوْا۟
fear Allah
அஞ்சினார்கள்
mādhā
مَاذَآ
"What
என்ன?
anzala
أَنزَلَ
has your Lord sent down?"
இறக்கினான்
rabbukum
رَبُّكُمْۚ
has your Lord sent down?"
உங்கள் இறைவன்
qālū
قَالُوا۟
They will say
கூறினார்கள்
khayran
خَيْرًاۗ
"Good"
நன்மையை
lilladhīna
لِّلَّذِينَ
For those who
எவர்களுக்கு
aḥsanū
أَحْسَنُوا۟
do good
நல்லறம் புரிந்தனர்
fī hādhihi
فِى هَٰذِهِ
in this
இந்த
l-dun'yā
ٱلدُّنْيَا
world
உலகில்
ḥasanatun
حَسَنَةٌۚ
(is) a good
நன்மை
waladāru
وَلَدَارُ
and the home
வீடுதான்
l-ākhirati
ٱلْءَاخِرَةِ
of the Hereafter
மறுமையின்
khayrun
خَيْرٌۚ
(is) better
மிக மேலானது
walaniʿ'ma
وَلَنِعْمَ
And surely excellent
மிகச் சிறந்தது
dāru
دَارُ
(is) the home
வீடு
l-mutaqīna
ٱلْمُتَّقِينَ
(of) the righteous
அஞ்சுபவர்களின்

Transliteration:

Wa qeela lillazeenat taqaw maazaaa anzala Rabbukum; qaaloo khairaa; lillazeena absanoo fee haazihid dunyaa hasanah; wa la Daarul Aakhirati khair; wa lani'ma daarul muttaqeen (QS. an-Naḥl:30)

English Sahih International:

And it will be said to those who feared Allah, "What did your Lord send down?" They will say, "[That which is] good." For those who do good in this world is good; and the home of the Hereafter is better. And how excellent is the home of the righteous – (QS. An-Nahl, Ayah ௩௦)

Abdul Hameed Baqavi:

இறை அச்சமுடையவர்களை நோக்கி (இக்குர்ஆனைப் பற்றி) "உங்கள் இறைவன் என்ன இறக்கிவைத்தான்" என்று கேட்கப்பட்டால், அதற்கவர்கள், "நன்மையையே (இறக்கி வைத்தான்)" என்று கூறுவார்கள். (ஏனென்றால்) நன்மை செய்தவர்களுக்கு இவ்வுலகிலும் நன்மைதான். (அவர்களுடைய) மறுமையின் வீடும் மிக்க மேலானது. இறை அச்சமுடைய வர்களின் வீடு எவ்வளவு நேர்த்தியானது! (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௩௦)

Jan Trust Foundation

பயபக்தியுள்ளவர்களிடம், “உங்களுடைய இறைவன் எதை இறக்கி வைத்தான்?” என்று (குர்ஆனை குறிப்பிட்டு) அவர்களிடம் கேட்கப்பட்டபோது “நன்மையையே (அருளினான்)” என்று அவர்கள் (பதில்) கூறுவார்கள். எவர் அழகான நன்மை புரிந்தார்களோ, அவர்களுக்கு இவ்வுலகிலும் அழகான நன்மையுண்டு; இன்னும், மறுமை வீடானது (அவர்களுக்கு மிக) மேலானதாகவும் இருக்கும், பயபக்தியுடையவர்களுடைய வீடு நிச்சயமாக நேர்த்தியானது!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அல்லாஹ்வை) அஞ்சியவர்களுக்கு, “உங்கள் இறைவன் என்ன இறக்கினான்”என்று கூறப்பட்டது, “நன்மையை (இறக்கினான்)” என்று கூறினார்கள். நல்லறம் புரிந்தவர்களுக்கு இந்த உலகில் நன்மை உண்டு. (அவர்களுக்குரிய) மறுமையின் வீடுதான் (இம்மையை விட அவர்களுக்கு) மிக மேலானது. (அல்லாஹ்வை) அஞ்சுபவர்களின் (மறுமை) வீடு மிகச் சிறந்தது.