Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௨௮

Qur'an Surah An-Nahl Verse 28

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

الَّذِيْنَ تَتَوَفّٰىهُمُ الْمَلٰۤىِٕكَةُ ظَالِمِيْٓ اَنْفُسِهِمْ ۖفَاَلْقَوُا السَّلَمَ مَا كُنَّا نَعْمَلُ مِنْ سُوْۤءٍ ۗبَلٰىٓ اِنَّ اللّٰهَ عَلِيْمٌۢ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ (النحل : ١٦)

alladhīna
ٱلَّذِينَ
Those whom -
எவர்கள்
tatawaffāhumu
تَتَوَفَّىٰهُمُ
take them in death
உயிர் கைப்பற்றுகின்றனர்/அவர்களை
l-malāikatu
ٱلْمَلَٰٓئِكَةُ
the Angels
வானவர்கள்
ẓālimī
ظَالِمِىٓ
(while) wronging
தீங்கிழைத்தவர்களாக
anfusihim
أَنفُسِهِمْۖ
themselves
தங்களுக்குத் தாமே
fa-alqawū l-salama
فَأَلْقَوُا۟ ٱلسَّلَمَ
then they would offer the submission
பணிந்து விட்டார்கள்
mā kunnā
مَا كُنَّا
"Not we were
நாங்கள் இருக்கவில்லை
naʿmalu
نَعْمَلُ
doing
செய்வோம்
min sūin
مِن سُوٓءٍۭۚ
any evil"
ஒரு தீமையையும்
balā
بَلَىٰٓ
Nay
அவ்வாறல்ல
inna
إِنَّ
indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌۢ
(is) All-Knower
நன்கறிந்தவன்
bimā kuntum taʿmalūna
بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
of what you used (to) do
எவற்றை/இருந்தீர்கள்/செய்வீர்கள்

Transliteration:

Allazeena tatawaf faahu mul malaaa'ikatu zaalimeee anfusihim fa alqawus salama maa kunnaa na'malu min sooo'; balaaa innal laaha 'aleemum bimaa kuntum ta'maloon (QS. an-Naḥl:28)

English Sahih International:

The ones whom the angels take in death [while] wronging themselves, and [who] then offer submission, [saying], "We were not doing any evil." But, yes! Indeed, Allah is Knowing of what you used to do. (QS. An-Nahl, Ayah ௨௮)

Abdul Hameed Baqavi:

தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட இவர்களுடைய உயிரை மலக்குகள் கைப்பற்றும்பொழுது (அவர்கள்) "நாங்கள் யாதொரு குற்றமும் செய்யவில்லை" என்று (கூறித் தங்களைத் துன்புறுத்த வேண்டாமென மலக்குகளிடம்) சமாதானத்தைக் கோருவார்கள். (அதற்கு மலக்குகள்) "அன்று! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நன்கறிந்தே இருக்கிறான்" (என்று பதிலளிப்பார்கள்.) (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௨௮)

Jan Trust Foundation

அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்பவர்களாக இருக்கும் நிலையில், மலக்குகள் அவர்களுடைய உயிர்களைக் கைப்பற்றுவார்கள்; அப்போது அவர்கள், “நாங்கள் எந்தவிதமான தீமையும் செய்யவில்லையே!” என்று (கீழ்படிந்தவர்களாக மலக்குகளிடம்) சமாதானம் கோருவார்கள்; “அவ்வாறில்லை! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நன்கறிந்தவன்; (என்று மலக்குகள் பதிலளிப்பார்கள்.)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவர்கள்) தங்களுக்குத் தாமே தீங்கிழைத்தவர்களாக இருக்க வானவர்கள் அவர்களை உயிர் கைப்பற்றுகின்றனர். (அவர்கள்) “ஒரு தீமையையும் நாங்கள் செய்து கொண்டிருக்கவில்லை”(என்று கூறி) பணிந்து விடுவார்கள். “அவ்வாறல்ல! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நன்கறிந்தவன்”(என்று வானவர்கள் பதிலளிப்பார்கள்.)