Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௨௬

Qur'an Surah An-Nahl Verse 26

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَدْ مَكَرَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ فَاَتَى اللّٰهُ بُنْيَانَهُمْ مِّنَ الْقَوَاعِدِ فَخَرَّ عَلَيْهِمُ السَّقْفُ مِنْ فَوْقِهِمْ وَاَتٰىهُمُ الْعَذَابُ مِنْ حَيْثُ لَا يَشْعُرُوْنَ (النحل : ١٦)

qad
قَدْ
Verily
திட்டமாக
makara
مَكَرَ
plotted
சூழ்ச்சி செய்தனர்
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
min qablihim
مِن قَبْلِهِمْ
(were) before them (were) before them
அவர்களுக்கு முன்னர்
fa-atā
فَأَتَى
but Allah came
ஆகவே வந்தான்
l-lahu
ٱللَّهُ
but Allah came
அல்லாஹ்
bun'yānahum
بُنْيَٰنَهُم
(at) their building
கட்டடத்திற்கு/அவர்களின்
mina
مِّنَ
from
இருந்து
l-qawāʿidi
ٱلْقَوَاعِدِ
the foundations
அடித்தளங்கள்
fakharra
فَخَرَّ
so fell
விழுந்தது
ʿalayhimu
عَلَيْهِمُ
upon them
அவர்கள் மீது
l-saqfu
ٱلسَّقْفُ
the roof
முகடு
min
مِن
from
இருந்து
fawqihim
فَوْقِهِمْ
above them
அவர்களுக்கு மேல்
wa-atāhumu
وَأَتَىٰهُمُ
and came to them
இன்னும் வந்தது/அவர்களுக்கு
l-ʿadhābu
ٱلْعَذَابُ
the punishment
வேதனை
min ḥaythu
مِنْ حَيْثُ
from where
விதத்தில்
lā yashʿurūna
لَا يَشْعُرُونَ
they (did) not perceive they (did) not perceive
அறிய (உணர) மாட்டார்கள்

Transliteration:

Qad makaral lazeena min qablihim fa atal laahu bunyaa nahum minal qawaa'idi fakharra 'alaihimus saqfu min fawqihim wa ataahumul 'azaabu min haisu laa yash'uroon (QS. an-Naḥl:26)

English Sahih International:

Those before them had already plotted, but Allah came at [i.e., uprooted] their building from the foundations, so the roof fell upon them from above them, and the punishment came to them from where they did not perceive. (QS. An-Nahl, Ayah ௨௬)

Abdul Hameed Baqavi:

இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (இவ்வாறே) நிச்சயமாக சூழ்ச்சி செய்து கொண்டிருந்தார்கள். ஆகவே, அல்லாஹ் அவர்களின் (சூழ்ச்சிக்) கட்டடத்தை அடியோடு பெயர்த்து அவர்கள் (தலை) மீதே அதன் முகடு விழும்படி செய்தான். அவர்கள் அறிந்துகொள்ள முடியாத விதத்தில் வேதனையும் அவர்களை வந்தடைந்தது. (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௨௬)

Jan Trust Foundation

நிச்சயமாக, இவர்களுக்கு முன்னர் இருந்தார்களே அவர்களும் (இவ்வாறே) சூழ்ச்சிகள் செய்தார்கள்; அதனால், அல்லாஹ் அவர்களுடைய கட்டிடத்தை அடியோடு பெயர்த்து விட்டான்; ஆகவே அவர்களுக்கு மேலே இருந்து முகடு அவர்கள் மீது விழுந்தது; அவர்கள் அறிந்து கொள்ள முடியாத புறத்திலிருந்து அவர்களுக்கு வேதனையும் வந்தது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

திட்டமாக இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (இவ்வாறே) சூழ்ச்சி செய்தனர். ஆகவே, அல்லாஹ் அவர்களின் கட்டடத்திற்கு அடித்தளங்களில் இருந்து வந்தான். (அதை அழித்தான்.) அவர்களுக்கு மேலிருந்து (அவர்கள் எழுப்பிய மாளிகையின்) முகடு அவர்கள் மீது விழுந்தது. அவர்கள் அறி(ந்து கொள்ள முடி)யாத விதத்தில் வேதனையும் அவர்களுக்கு வந்தது.