குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௨௫
Qur'an Surah An-Nahl Verse 25
ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لِيَحْمِلُوْٓا اَوْزَارَهُمْ كَامِلَةً يَّوْمَ الْقِيٰمَةِ ۙوَمِنْ اَوْزَارِ الَّذِيْنَ يُضِلُّوْنَهُمْ بِغَيْرِ عِلْمٍ ۗ اَلَا سَاۤءَ مَا يَزِرُوْنَ ࣖ (النحل : ١٦)
- liyaḥmilū
- لِيَحْمِلُوٓا۟
- That they may bear
- இவர்கள்சுமப்பதற்காக
- awzārahum
- أَوْزَارَهُمْ
- their own burdens
- தங்கள் (பாவச்)சுமைகளை
- kāmilatan
- كَامِلَةً
- (in) full
- முழுமையாக
- yawma l-qiyāmati
- يَوْمَ ٱلْقِيَٰمَةِۙ
- on (the) Day (of) the Resurrection
- மறுமை நாளில்
- wamin
- وَمِنْ
- and of
- இன்னும் இருந்து
- awzāri
- أَوْزَارِ
- the burdens
- சுமைகள்
- alladhīna
- ٱلَّذِينَ
- (of) those whom
- எவர்கள்
- yuḍillūnahum
- يُضِلُّونَهُم
- they misled [them]
- வழிகெடுக்கின்றனர்/அவர்களை
- bighayri
- بِغَيْرِ
- without
- இன்றி
- ʿil'min
- عِلْمٍۗ
- knowledge
- கல்வி
- alā
- أَلَا
- Unquestionably
- அறிந்துகொள்ளுங்கள்!
- sāa
- سَآءَ
- evil
- மிகக் கெட்டது
- mā yazirūna
- مَا يَزِرُونَ
- (is) what they will bear
- எது/சுமப்பார்கள்
Transliteration:
Liyahmilooo awzaarahum kaamilatany Yawmal Qiyaamati wa min awzaaril lazeena yudilloonahum bighairi 'ilm; alaa saaa'a maa yaziroon(QS. an-Naḥl:25)
English Sahih International:
That they may bear their own burdens [i.e., sins] in full on the Day of Resurrection and some of the burdens of those whom they misguide without [i.e., by lack of] knowledge. Unquestionably, evil is that which they bear. (QS. An-Nahl, Ayah ௨௫)
Abdul Hameed Baqavi:
மறுமை நாளில் தங்கள் பாவச்சுமையை இவர்கள் சுமப்பதுடன், அறிவின்றி இவர்கள் வழிகெடுத்த மற்றவர்களின் பாவச்சுமையையும் இவர்களே சுமப்பார்கள். (இவ்வாறு இருவரின் பாவச்சுமையை) இவர்களே சுமப்பது மிகக் கெட்டதல்லவா? (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௨௫)
Jan Trust Foundation
கியாம நாளில் அவர்கள், தங்கள் (பாவச்) சுமைகளை முழுமையாக சுமக்கட்டும்; மேலும் அறிவில்லாமல் இவர்கள் எவர்களை வழி கெடுத்தார்களோ, அவர்களுடைய (பாவச்) சுமைகளையும் (சுமக்கட்டும்); இவர்கள் (சுமக்கும்) சுமை மிகவும் கெட்டதல்லவா?.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இதன் காரணமாக, மறுமை நாளில் தங்கள் (பாவச்)சுமைகளை முழுமை யாக (இவர்கள்) சுமப்பார்கள். இன்னும் இவர்கள் எவர்களை கல்வியின்றி வழிகெடுத்தார்களே அவர்களின் (பாவச்)சுமைகளிலிருந்தும் (இவர்கள்) சுமப்பார்கள். அறிந்து கொள்ளுங்கள் இவர்கள் சுமப்பது மிகக் கெட்டது.