Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௨௨

Qur'an Surah An-Nahl Verse 22

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ ۚفَالَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ قُلُوْبُهُمْ مُّنْكِرَةٌ وَّهُمْ مُّسْتَكْبِرُوْنَ (النحل : ١٦)

ilāhukum
إِلَٰهُكُمْ
Your god
(வணங்கத் தகுதியான) உங்கள் இறைவன்
ilāhun
إِلَٰهٌ
(is) God
இறைவன்
wāḥidun
وَٰحِدٌۚ
One
ஒரே ஒருவன்
fa-alladhīna
فَٱلَّذِينَ
But those who
எவர்கள்
lā yu'minūna
لَا يُؤْمِنُونَ
(do) not believe
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
bil-ākhirati
بِٱلْءَاخِرَةِ
in the Hereafter
மறுமையை
qulūbuhum
قُلُوبُهُم
their hearts
உள்ளங்கள்/அவர்களுடைய
munkiratun
مُّنكِرَةٌ
refuse
நிராகரிக்கின்றன
wahum
وَهُم
and they
இன்னும் அவர்கள்
mus'takbirūna
مُّسْتَكْبِرُونَ
(are) arrogant
பெருமையடிக்கிறார்கள்

Transliteration:

Illahukum Ilaahunw Waahid; fallazeena laa yu'minoona bil Aakhirati quloobuhum munkiratunw wa hum mustakbiroon (QS. an-Naḥl:22)

English Sahih International:

Your god is one God. But those who do not believe in the Hereafter – their hearts are disapproving, and they are arrogant. (QS. An-Nahl, Ayah ௨௨)

Abdul Hameed Baqavi:

உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஓர் இறைவன்தான். ஆகவே, எவர்கள் மறுமையை நம்பவில்லையோ அவர்களுடைய உள்ளங்கள் (எதைக் கூறியபோதிலும்) நிராகரிப்பவைகளாகவே இருக்கின்றன. அன்றி, அவர்கள் மிகக் கர்வம்கொண்டு பெருமை யடிப்பவர்களாகவும் இருக்கின்றனர். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௨௨)

Jan Trust Foundation

உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான்; எனவே, எவர்கள் மறுமையை நம்பவில்லையோ, அவர்களுடைய நெஞ்சங்கள் (இவ்வுண்மையை) நிராகரிப்பவையாக இருக்கின்றன - மேலும் அவர்கள் (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பவர்களாக இருக்கிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(வணங்கத் தகுதியான) உங்கள் இறைவன் ஒரே ஒரு இறைவன் தான். ஆகவே, மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்களுடைய உள்ளங்கள் (அந்த உண்மையான இறைவனை) நிராகரிக்கின்றன. இன்னும் அவர்கள் பெருமையடிக்கிறார்கள்.