Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௨

Qur'an Surah An-Nahl Verse 2

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يُنَزِّلُ الْمَلٰۤىِٕكَةَ بِالرُّوْحِ مِنْ اَمْرِهٖ عَلٰى مَنْ يَّشَاۤءُ مِنْ عِبَادِهٖٓ اَنْ اَنْذِرُوْٓا اَنَّهٗ لَآ اِلٰهَ اِلَّآ اَنَا۠ فَاتَّقُوْنِ (النحل : ١٦)

yunazzilu
يُنَزِّلُ
He sends down
இறக்குகிறான்
l-malāikata
ٱلْمَلَٰٓئِكَةَ
the Angels
வானவர்களை
bil-rūḥi
بِٱلرُّوحِ
with the inspiration
உயிருடன்
min amrihi
مِنْ أَمْرِهِۦ
of His Command
தன் கட்டளைப்படி
ʿalā
عَلَىٰ
upon
மீது
man
مَن
whom
எவர்
yashāu
يَشَآءُ
He wills
நாடுகின்றான்
min ʿibādihi
مِنْ عِبَادِهِۦٓ
of His slaves
தன் அடியார்களில்
an andhirū
أَنْ أَنذِرُوٓا۟
that "Warn
என்று/எச்சரியுங்கள்
annahu
أَنَّهُۥ
that [He]
நிச்சயமாக செய்தி
لَآ
(there is) no
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
god
வணக்கத்திற்குரியவன்
illā
إِلَّآ
except
தவிர
anā
أَنَا۠
Me
என்னை
fa-ittaqūni
فَٱتَّقُونِ
so fear Me"
ஆகவே, அஞ்சுங்கள்

Transliteration:

Yunazzilul malaaa 'ikata birroohi min amrihee 'alaa mai yashaaa'u min 'ibaadiheee an anzirooo annahoo laaa ilaaha illaaa ana fattaqoon (QS. an-Naḥl:2)

English Sahih International:

He sends down the angels, with the inspiration [i.e., revelation] of His command, upon whom He wills of His servants, [telling them], "Warn that there is no deity except Me; so fear Me." (QS. An-Nahl, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

அவன் மலக்குகளுக்கு வஹீ கொடுத்து, தன் அடியார்களில் தான் விரும்பியவர்களிடம் அனுப்பி வைத்து "வணக்கத்திற்குரியவன் என்னைத் தவிர வேறெவனுமில்லை; நீங்கள் எனக்கே பயப்படுங்கள்" என்று எச்சரிக்கை செய்யுமாறு அவருக்குக் கட்டளையிட்டான். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௨)

Jan Trust Foundation

அவன் மலக்குகளிடம் வஹீயைக் கொடுத்துத் தன் அடியார்களில் தான் நாடியவர் மீது (அனுப்பி வைத்து,) “நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன், என்னைத்தவிர வேறுயாருமில்லை; ஆகையால் நீங்கள் எனக்கே அஞ்சுங்கள் என (மக்களுக்கு) எச்சரிக்கை செய்யுங்கள்” என்ற கட்டளையுடன் (மலக்குகளை) இறக்கி வைக்கிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் தன் கட்டளைப்படி (வஹ்யி எனும்) உயிருடன், தன் அடியார்களில் தான் நாடுகின்றவர் மீது வானவர்களை இறக்குகிறான். “நிச்சயமாக வணக்கத்திற்குரியவன் என்னைத் தவிர அறவே இல்லை; ஆகவே (என்னை) அஞ்சுங்கள்”என்று நீங்கள் (மனிதர்களை) எச்சரியுங்கள்.