Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௧௮

Qur'an Surah An-Nahl Verse 18

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنْ تَعُدُّوْا نِعْمَةَ اللّٰهِ لَا تُحْصُوْهَا ۗاِنَّ اللّٰهَ لَغَفُوْرٌ رَّحِيْمٌ (النحل : ١٦)

wa-in taʿuddū
وَإِن تَعُدُّوا۟
And if you should count
நீங்கள் எண்ணினால்
niʿ'mata l-lahi
نِعْمَةَ ٱللَّهِ
the Favors of Allah the Favors of Allah
அருளை/ அல்லாஹ்வின்
lā tuḥ'ṣūhā
لَا تُحْصُوهَآۗ
not you could enumerate them
நீங்கள் எண்ணி முடிக்கமாட்டீர்கள்/அதை
inna l-laha
إِنَّ ٱللَّهَ
Indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
laghafūrun
لَغَفُورٌ
(is) Oft-Forgiving
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
Most Merciful
மகா கருணையாளன்

Transliteration:

Wa in ta'uddoo ni'matal laahi laa tuhsoohaa; innal laaha la Ghafoorur Raheem (QS. an-Naḥl:18)

English Sahih International:

And if you should count the favors of Allah, you could not enumerate them. Indeed, Allah is Forgiving and Merciful. (QS. An-Nahl, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்வின் அரு(ள்க)ளை நீங்கள் கணக்கிட்டால் அவற்றை உங்களால் எண்ணிட முடியாது. நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், பெரும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௧௮)

Jan Trust Foundation

இன்னும் அல்லாஹ்வின் அரு(ட் கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால், அவற்றை (வரையறை செய்து) நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக் கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வின் அருளை நீங்கள் எண்ணினால் அதை எண்ணி முடிக்க மாட்டீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.