Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௧௫

Qur'an Surah An-Nahl Verse 15

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَلْقٰى فِى الْاَرْضِ رَوَاسِيَ اَنْ تَمِيْدَ بِكُمْ وَاَنْهٰرًا وَّسُبُلًا لَّعَلَّكُمْ تَهْتَدُوْنَۙ (النحل : ١٦)

wa-alqā
وَأَلْقَىٰ
And He has cast
அவன் அமைத்தான்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the earth
பூமியில்
rawāsiya
رَوَٰسِىَ
firm mountains
மலைகளை
an tamīda
أَن تَمِيدَ
lest it should shake
அசையாதிருப்பதற்காக
bikum
بِكُمْ
with you
உங்களைக் கொண்டு
wa-anhāran
وَأَنْهَٰرًا
and rivers
இன்னும் நதிகளை
wasubulan
وَسُبُلًا
and roads
இன்னும் பாதைகளை
laʿallakum tahtadūna
لَّعَلَّكُمْ تَهْتَدُونَ
so that you may be guided
நீங்கள் வழி பெறுவதற்காக

Transliteration:

Wa alqaa fil ardi rawaasiya an tameeda bikum wa anhaaranw wa sublulal la 'allakum tahtadoon (QS. an-Naḥl:15)

English Sahih International:

And He has cast into the earth firmly set mountains, lest it shift with you, and [made] rivers and roads, that you may be guided, (QS. An-Nahl, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

உங்களைச் சுமந்திருக்கும் பூமி அசையாதிருப்பதற்காகப் (பெரிய) பெரிய மலைகளை அதன் மீது வைத்தான். நீங்கள் (உங்கள் போக்குவரத்துக்கு) ஆறுகளையும் நேரான வழிகளையும் அறிவதற்காகப் பல பாதைகளை அமைத்தான். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௧௫)

Jan Trust Foundation

உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுத்தினான்; இன்னும் நீங்கள் சரியான வழியை அறி(ந்து செல்)வதற்காக அவன் ஆறுகளையும் பாதைகளையும் (அமைத்தான்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பூமி உங்களைக் கொண்டு அசையாதிருப்பதற்காக அதில் அவன் மலைகளை அமைத்தான். இன்னும் நதிகளையும் நீங்கள் (உங்கள் இலக்குகளுக்கு) வழி பெ(ற்)று (செல்)வதற்காக பாதைகளையும் (அமைத்தான்).