குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௧௪
Qur'an Surah An-Nahl Verse 14
ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَهُوَ الَّذِيْ سَخَّرَ الْبَحْرَ لِتَأْكُلُوْا مِنْهُ لَحْمًا طَرِيًّا وَّتَسْتَخْرِجُوْا مِنْهُ حِلْيَةً تَلْبَسُوْنَهَاۚ وَتَرَى الْفُلْكَ مَوَاخِرَ فِيْهِ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ (النحل : ١٦)
- wahuwa alladhī
- وَهُوَ ٱلَّذِى
- And He (is) the One Who
- அவன்தான்
- sakhara
- سَخَّرَ
- subjected
- வசப்படுத்தினான்
- l-baḥra
- ٱلْبَحْرَ
- the sea
- கடலை
- litakulū
- لِتَأْكُلُوا۟
- for you to eat
- நீங்கள் புசிப்பதற்காக
- min'hu
- مِنْهُ
- from it
- அதிலிருந்து
- laḥman
- لَحْمًا
- meat
- ஒரு மாமிசத்தை
- ṭariyyan
- طَرِيًّا
- fresh
- பசுமையானது, மென்மையானது, புதியது, சதையுடையது
- watastakhrijū
- وَتَسْتَخْرِجُوا۟
- and that you bring forth
- இன்னும் வெளியெடுப்பதற்காக
- min'hu
- مِنْهُ
- from it
- அதிலிருந்து
- ḥil'yatan
- حِلْيَةً
- ornaments
- ஆபரணங்களை
- talbasūnahā
- تَلْبَسُونَهَا
- (that) you wear them
- அணிகிறீர்கள் / அவற்றை
- watarā
- وَتَرَى
- And you see
- இன்னும் பார்க்கிறீர்
- l-ful'ka
- ٱلْفُلْكَ
- the ships
- கப்பல்களை
- mawākhira
- مَوَاخِرَ
- ploughing
- பிளந்து செல்பவையாக
- fīhi
- فِيهِ
- through it
- அதில்
- walitabtaghū
- وَلِتَبْتَغُوا۟
- and that you may seek
- இன்னும் நீ தேடுவதற்காக
- min faḍlihi
- مِن فَضْلِهِۦ
- of His Bounty
- அவனுடைய அருளை
- walaʿallakum tashkurūna
- وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
- and that you may (be) grateful
- இன்னும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
Transliteration:
Wa Huwal lazee sakhkharal bahra litaakuloo minhu lahman tariyyanw wa tastakhrijoo minhu hilyatan talbasoonahaa wa taral fulka mawaakhira feehi wa litabtaghoo min fadlihee wa la'allakum tashkuroon(QS. an-Naḥl:14)
English Sahih International:
And it is He who subjected the sea for you to eat from it tender meat and to extract from it ornaments which you wear. And you see the ships plowing through it, and [He subjected it] that you may seek of His bounty; and perhaps you will be grateful. (QS. An-Nahl, Ayah ௧௪)
Abdul Hameed Baqavi:
அவன்தான் நீங்கள் மீன்களைப் (பிடித்துச் சமைத்துப்) புசிக்கவும், நீங்கள் ஆபரணமாக அணியக்கூடிய பொருள்களை எடுத்துக்கொள்ளவும் கடலை (உங்களுக்கு) வசதியாக்கித் தந்தான். (பல இடங்களுக்கும் சென்று வர்த்தகத்தின் மூலம்) இறைவனின் அருளை நீங்கள் தேடிக்கொள்ளும் பொருட்டு (கடலில் பயணம் செய்யும்பொழுது) கப்பல் கடலைப் பிளந்துகொண்டு செல்வதை நீங்கள் காண்கிறீர்கள். (இதற்காக இறைவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்திக் கொண்டிருப்பீர்களாக! (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௧௪)
Jan Trust Foundation
நீங்கள் கடலிலிருந்து நய(மும், சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும் அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்; இன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள்; (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (அதை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
கடலிலிருந்து பசுமையான (மென்மையான) மாமிசத்தை நீங்கள் புசிப்பதற்காகவும், நீங்கள் அணிகிற ஆபரணங்களை அதிலிருந்து நீங்கள் வெளியெடுப்பதற்காகவும், அவனுடைய அருளை நீங்கள் தேடுவதற்காகவும், (இவற்றை எல்லாம் பெற்றதற்காக அவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் வசப்படுத்தியவன் அவன்தான். இன்னும் அதில் (கடலை) பிளந்து செல்பவையாக கப்பல்களைப் பார்க்கிறீர்.