குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௧௨௭
Qur'an Surah An-Nahl Verse 127
ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௧௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاصْبِرْ وَمَا صَبْرُكَ اِلَّا بِاللّٰهِ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَلَا تَكُ فِيْ ضَيْقٍ مِّمَّا يَمْكُرُوْنَ (النحل : ١٦)
- wa-iṣ'bir
- وَٱصْبِرْ
- And be patient
- பொறுப்பீராக
- wamā
- وَمَا
- and not
- இல்லை
- ṣabruka
- صَبْرُكَ
- (is) your patience
- உம் பொறுமை
- illā
- إِلَّا
- but
- தவிர
- bil-lahi
- بِٱللَّهِۚ
- from Allah
- அல்லாஹ்வைக் கொண்டே
- walā taḥzan
- وَلَا تَحْزَنْ
- And (do) not grieve
- இன்னும் கவலைப்படாதீர்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- over them
- அவர்கள் மீது
- walā taku
- وَلَا تَكُ
- and (do) not be
- இன்னும் ஆகாதீர்
- fī ḍayqin
- فِى ضَيْقٍ
- in distress
- நெருக்கடியில்
- mimmā
- مِّمَّا
- for what
- எதைப் பற்றி
- yamkurūna
- يَمْكُرُونَ
- they plot
- சூழ்ச்சி செய்வார்கள்
Transliteration:
Wasbir wa maa sabruka illaa billaah; wa laa tahzan 'alaihim wa laa taku fee daiqim mimmaa yamkuroon(QS. an-Naḥl:127)
English Sahih International:
And be patient, [O Muhammad], and your patience is not but through Allah. And do not grieve over them and do not be in distress over what they conspire. (QS. An-Nahl, Ayah ௧௨௭)
Abdul Hameed Baqavi:
ஆகவே, (நபியே!) நீங்கள் சகித்துக்கொள்ளுங்கள். எனினும், அல்லாஹ்வின் உதவியின்றி சகித்துக்கொள்ள உங்களால் முடியாது. அவர்களுக்காக நீங்கள் (எதனைப் பற்றியும்) கவலைப்படாதீர்கள். அவர்கள் செய்யும் சூழ்ச்சிகளைப் பற்றி நீங்கள் நெருக்கடியிலும் ஆகாதீர்கள். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௧௨௭)
Jan Trust Foundation
(நபியே!) இன்னும் நீர் பொறுமையுடன் இருப்பீராக; எனினும் அல்லாஹ்வின் உதவியில்லாமல் நீர் பொறுமையுடனே இருக்க முடியாது - அவர்களுக்காக நீர் (எது பற்றியும்) கவலைப்பட வேண்டாம் - அவர்கள் செய்யும் சூழ்ச்சிகளை பற்றி நீர் (மன) நெருக்கடியில் ஆகிவிடவேண்டாம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) பொறுப்பீராக. அல்லாஹ்வைக் கொண்டே தவிர உம் பொறுமை இல்லை. அவர்கள் மீது கவலைப்படாதீர்; அவர்கள் சூழ்ச்சி செய்வதைப் பற்றி நெருக்கடியில் (நீர்) ஆகாதீர்.