Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௧௨௫

Qur'an Surah An-Nahl Verse 125

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௧௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اُدْعُ اِلٰى سَبِيْلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُمْ بِالَّتِيْ هِيَ اَحْسَنُۗ اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيْلِهٖ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِيْنَ (النحل : ١٦)

ud'ʿu
ٱدْعُ
Call
அழைப்பீராக
ilā sabīli
إِلَىٰ سَبِيلِ
to (the) way
பக்கம்/பாதை
rabbika
رَبِّكَ
(of) your Lord
உம் இறைவனுடைய
bil-ḥik'mati
بِٱلْحِكْمَةِ
with the wisdom
ஞானத்தைக்கொண்டு
wal-mawʿiẓati
وَٱلْمَوْعِظَةِ
and the instruction
இன்னும் உபதேசம்
l-ḥasanati
ٱلْحَسَنَةِۖ
the good
அழகியது
wajādil'hum
وَجَٰدِلْهُم
and discuss with them
இன்னும் தர்க்கிப்பீராக/அவர்களிடம்
bi-allatī
بِٱلَّتِى
in that
எதைக் கொண்டு
hiya aḥsanu
هِىَ أَحْسَنُۚ
which (is) best
அது/மிக அழகியது
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
rabbaka huwa
رَبَّكَ هُوَ
your Lord He
உம் இறைவன்தான்
aʿlamu
أَعْلَمُ
(is) most knowing
மிக அறிந்தவன்
biman ḍalla
بِمَن ضَلَّ
of who has strayed
எவரை/வழிதவறினார்
ʿan sabīlihi
عَن سَبِيلِهِۦۖ
from His way
அவனுடைய பாதையிலிருந்து
wahuwa
وَهُوَ
And He
இன்னும் அவன்
aʿlamu
أَعْلَمُ
(is) most knowing
மிக அறிந்தவன்
bil-muh'tadīna
بِٱلْمُهْتَدِينَ
of the guided ones
நேர்வழி செல்வோரை

Transliteration:

Ud'u ilaa sabeeli Rabbika bilhikmati walmaw 'izatil hasanati wa jaadilhum billatee hiya ahsan; inna Rabbaka huwa a'almu biman dalla 'an sabeelihee wa Huwa a'lamu bilmuhtadeen (QS. an-Naḥl:125)

English Sahih International:

Invite to the way of your Lord with wisdom and good instruction, and argue with them in a way that is best. Indeed, your Lord is most knowing of who has strayed from His way, and He is most knowing of who is [rightly] guided. (QS. An-Nahl, Ayah ௧௨௫)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் (மனிதர்களை) மதிநுட்பத்துடனும், அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உங்கள் இறைவனின் வழியின் பக்கம் அழைப்பீராக! அன்றி, அவர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) நீங்கள் (கண்ணியமான) அழகான முறையில் தர்க்கம் செய்யுங்கள். உங்கள் இறைவன் வழியிலிருந்து தவறியவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அவன்தான் நன்கறிவான். நேரான வழியிலிருப்பவர்கள் யார் என்பதையும் அவன்தான் நன்கறிவான். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௧௨௫)

Jan Trust Foundation

(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) ஞானம் இன்னும் அழகிய உபதேசத்தைக் கொண்டு உம் இறைவனுடைய பாதையின் பக்கம் (மக்களை) அழைப்பீராக! மிக அழகிய முறையில் அவர்களிடம் தர்க்கிப்பீராக! நிச்சயமாக உம் இறைவன்தான் அவனுடைய பாதையிலிருந்து வழி தவறியவரை மிக அறிந்தவன் ஆவான். இன்னும் அவன் நேர்வழி செல்வோரையும் மிக அறிந்தவன் ஆவான்.