Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௧௨௩

Qur'an Surah An-Nahl Verse 123

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௧௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ اَوْحَيْنَآ اِلَيْكَ اَنِ اتَّبِعْ مِلَّةَ اِبْرٰهِيْمَ حَنِيْفًا ۗوَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ (النحل : ١٦)

thumma
ثُمَّ
Then
பிறகு
awḥaynā
أَوْحَيْنَآ
We revealed
வஹீ அறிவித்தோம்
ilayka
إِلَيْكَ
to you
உமக்கு
ani ittabiʿ
أَنِ ٱتَّبِعْ
that "You follow
என்று/பின்பற்று
millata
مِلَّةَ
(the) religion
மார்க்கத்தை
ib'rāhīma
إِبْرَٰهِيمَ
(of) Ibrahim
இப்றாஹீமின்
ḥanīfan
حَنِيفًاۖ
upright;
கொள்கை உறுதியுடையவராக
wamā kāna
وَمَا كَانَ
and not he was
(அவர்) இருக்கவில்லை
mina l-mush'rikīna
مِنَ ٱلْمُشْرِكِينَ
of the polytheists"
இணைவைப்பவர்களில்

Transliteration:

Summma awhainaa ilaika anit tabi' Millata Ibraaheema haneefaa; wa maa kaana minal mushrikeen (QS. an-Naḥl:123)

English Sahih International:

Then We revealed to you, [O Muhammad], to follow the religion of Abraham, inclining toward truth; and he was not of those who associate with Allah. (QS. An-Nahl, Ayah ௧௨௩)

Abdul Hameed Baqavi:

ஆகவே, (நபியே!) நீங்கள் மிக்க மேன்மையான (அந்த) இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் பின்பற்றும்படி உங்களுக்கு வஹீ அறிவித்தோம். அவர் இணைவைத்து வணங்குபவர்களில் (ஒருவராக) இருக்கவேயில்லை. (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௧௨௩)

Jan Trust Foundation

(நபியே!) பின்னர் “நேர்மையாளரான இப்ராஹீமின் சன்மார்க்கத்தை நீர் பின்பற்ற வேண்டும்” என்று நாம் உமக்கு வஹீ அறிவித்தோம்; அவர் முஷ்ரிக்குகளில் (இணை வைப்போரில்) ஒருவராக இருந்ததில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு, (நபியே!) நீர் கொள்கை உறுதியுடையவராக இருக்கின்ற நிலையில் இப்றாஹீமின் மார்க்கத்தை பின்பற்றுவீராக! என்று உமக்கு வஹ்யி அறிவித்தோம். அவர் இணைவைப்பவர்களில் இருக்கவில்லை. (ஹனீஃப்: உண்மை முஸ்லிம், கொள்கை உறுதியுடையவர், அல்லாஹ்வை மட்டும் வணங்கக்கூடியவர், அறவே இணை வைக்காதவர்.)