குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௧௨௧
Qur'an Surah An-Nahl Verse 121
ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௧௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
شَاكِرًا لِّاَنْعُمِهِ ۖاجْتَبٰىهُ وَهَدٰىهُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ (النحل : ١٦)
- shākiran
- شَاكِرًا
- Thankful
- நன்றிசெலுத்துபவராக
- li-anʿumihi
- لِّأَنْعُمِهِۚ
- for His favors
- அவனுடைய அருட்கொடைகளுக்கு
- ij'tabāhu
- ٱجْتَبَىٰهُ
- He chose him
- தேர்ந்தெடுத்தான்/அவரை
- wahadāhu
- وَهَدَىٰهُ
- and guided him
- இன்னும் நேர்வழி செலுத்தினான்/அவரை
- ilā ṣirāṭin
- إِلَىٰ صِرَٰطٍ
- to the way
- பாதையில்
- mus'taqīmin
- مُّسْتَقِيمٍ
- straight
- நேரான
Transliteration:
Shaakiral li an'umih; ijtabaahu wa hadaahu ilaa Siraatim Muustaqeem(QS. an-Naḥl:121)
English Sahih International:
[He was] grateful for His favors. He [i.e., Allah] chose him and guided him to a straight path. (QS. An-Nahl, Ayah ௧௨௧)
Abdul Hameed Baqavi:
அன்றி, இறைவனின் அருட்கொடைகளுக்கு (எந்நேரமும்) நன்றி செலுத்துபவராகவும் இருந்தார். ஆகவே, (இறைவனும்) அவரைத் தேர்ந்தெடுத்து நேரான வழியில் செலுத்தினான். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௧௨௧)
Jan Trust Foundation
(அன்றியும்) அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராக அவர் இருந்தார்; அல்லாஹ் அவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இன்னும் அவரை நேர் வழியில் செலுத்தினான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராக (இருந்தார்). (அல்லாஹ்) அவரைத் தேர்ந்தெடுத்தான், நேரான பாதையில் அவரை நேர்வழி செலுத்தினான்.