குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௧௨
Qur'an Surah An-Nahl Verse 12
ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَسَخَّرَ لَكُمُ الَّيْلَ وَالنَّهَارَۙ وَالشَّمْسَ وَالْقَمَرَ ۗوَالنُّجُوْمُ مُسَخَّرٰتٌۢ بِاَمْرِهٖ ۗاِنَّ فِي ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّعْقِلُوْنَۙ (النحل : ١٦)
- wasakhara
- وَسَخَّرَ
- And He has subjected
- இன்னும் வசப்படுத்தினான்
- lakumu
- لَكُمُ
- for you
- உங்களுக்கு
- al-layla
- ٱلَّيْلَ
- the night
- இரவை
- wal-nahāra
- وَٱلنَّهَارَ
- and the day
- இன்னும் பகலை
- wal-shamsa
- وَٱلشَّمْسَ
- and the sun
- இன்னும் சூரியனை
- wal-qamara
- وَٱلْقَمَرَۖ
- and the moon
- இன்னும் சந்திரனை
- wal-nujūmu
- وَٱلنُّجُومُ
- and the stars
- இன்னும் நட்சத்திரங்கள்
- musakharātun
- مُسَخَّرَٰتٌۢ
- (are) subjected
- வசப்படுத்தப்பட்டவை
- bi-amrihi
- بِأَمْرِهِۦٓۗ
- by His command
- அவனுடைய கட்டளையைக் கொண்டு
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- fī dhālika
- فِى ذَٰلِكَ
- in that
- இவற்றில்
- laāyātin
- لَءَايَٰتٍ
- surely (are) signs
- பல அத்தாட்சிகள்
- liqawmin
- لِّقَوْمٍ
- for a people
- மக்களுக்கு
- yaʿqilūna
- يَعْقِلُونَ
- who use reason
- சிந்தித்து புரிகின்றனர்
Transliteration:
Wa sakkhkhara lakumul laila wannahaara wash shamsa walqamara wannujoomu musakhkharaatum bi amrih; inna fee zaalika la Aayaatil liqawminy ya'qiloon(QS. an-Naḥl:12)
English Sahih International:
And He has subjected for you the night and day and the sun and moon, and the stars are subjected by His command. Indeed in that are signs for a people who reason. (QS. An-Nahl, Ayah ௧௨)
Abdul Hameed Baqavi:
அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்களுக்காக (படைத்துத்) தன் அதிகாரத்துக்குள் வைத்திருக்கிறான். (அவ்வாறே) நட்சத்திரங்கள் அனைத்தும் அவனுடைய கட்டளைக்கு உட்பட்டவையாகவே இருக்கின்றன. நிச்சயமாக இதிலும் சிந்தித்து அறியக்கூடிய மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௧௨)
Jan Trust Foundation
இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்க(ள் நலன்க)ளுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான்; அவ்வாறே நட்சத்திரங்களும் அவன் கட்டளைப் படியே வசப்படுத்தப்பட்டுள்ளன - நிச்சயமாக இதிலும் ஆய்ந்தறியக் கூடிய மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன் இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்களுக்கு வசப்படுத்தினான். நட்சத்திரங்களும் அவனுடைய கட்டளையைக் கொண்டு (உங்களுக்கு) வசப்படுத்தப்பட்டவையாகும். நிச்சயமாக சிந்தித்து புரிகின்ற மக்களுக்கு இவற்றில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.