Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௧௧௫

Qur'an Surah An-Nahl Verse 115

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௧௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيْرِ وَمَآ اُهِلَّ لِغَيْرِ اللّٰهِ بِهٖۚ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ (النحل : ١٦)

innamā ḥarrama
إِنَّمَا حَرَّمَ
Only He has forbidden
அவன் தடுத்ததெல்லாம்
ʿalaykumu
عَلَيْكُمُ
to you
உங்கள் மீது
l-maytata
ٱلْمَيْتَةَ
the dead animal
செத்ததை
wal-dama
وَٱلدَّمَ
and the blood
இன்னும் இரத்தம்
walaḥma
وَلَحْمَ
and the flesh
இன்னும் மாமிசம்
l-khinzīri
ٱلْخِنزِيرِ
(of) the swine
பன்றியின்
wamā uhilla
وَمَآ أُهِلَّ
and what has been dedicated
இன்னும் பெயர் கூறப்பட்டவை
lighayri
لِغَيْرِ
to other (than)
அல்லாதவற்றின்
l-lahi bihi
ٱللَّهِ بِهِۦۖ
Allah [with it]
அல்லாஹ்/அதை
famani uḍ'ṭurra
فَمَنِ ٱضْطُرَّ
But (if) one (is) forced -
எவர்/நிர்பந்தத்திற்குள்ளானார்
ghayra bāghin
غَيْرَ بَاغٍ
without (being) disobedient
நாடியவராக அல்லாமல்
walā ʿādin
وَلَا عَادٍ
and not a transgressor -
மீறியவராகஅல்லாமல்
fa-inna l-laha
فَإِنَّ ٱللَّهَ
then indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
(is) Oft-Forgiving
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
Most Merciful
மிகக் கருணையாளன்

Transliteration:

Innamaa harrma 'alai kumul maitata waddama wa lahmal khinzeeri wa maaa uhilla lighairil laahi bihee famanid turra ghaira baaghinw wa laa 'aadin fa innal laaha Ghafoorur Raheem (QS. an-Naḥl:115)

English Sahih International:

He has only forbidden to you dead animals, blood, the flesh of swine, and that which has been dedicated to other than Allah. But whoever is forced [by necessity], neither desiring [it] nor transgressing [its limit] – then indeed, Allah is Forgiving and Merciful. (QS. An-Nahl, Ayah ௧௧௫)

Abdul Hameed Baqavi:

(புசிக்கக் கூடாதென்று) உங்களுக்கு விலக்கப் பட்டிருப்பவையெல்லாம் செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும் அல்லாஹ் அல்லாதவைகளின் பெயர் கூறப் பட்டவையுமாகும். எவரேனும் பாவம் செய்யும் எண்ணமின்றி, (எவராலும்) நிர்ப்பந்திக்கப்பட்டு (அல்லது பசியின் கொடுமையால் அவசியத்திற்கு அதிகப்படாமல் இவைகளைப் புசித்து) விட்டால் (அவர் மீது குற்றமாகாது. ஆகவே, இத்தகைய நிலைமையில் அவரை) நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனும் கிருபை செய்பவனுமாக இருக்கின்றான். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௧௧௫)

Jan Trust Foundation

(நீங்கள் புசிக்கக் கூடாது என்று உங்களுக்கு அவன் விலக்கியிருப்பவையெல்லாம்; தானே செத்ததும், இரத்தமும், பன்றி இறைச்சியும், எதன் மீது அல்லாஹ்(வின் பெயர்) அல்லாத வேறு (பெயர்) உச்சரிக்கப்பட்டதோ அதுவுமேயாகும் - ஆனால் எவரேனும் வரம்பை மீற வேண்டுமென்று (எண்ணம்) இல்லாமலும், பாவம் செய்யும் விருப்பமில்லாமலும் (எவராலும் அல்லது பசியின் கொடுமையாலும்) நிர்ப்பந்திக்கப்பட்டால் (அவர் மீது குற்றமில்லை); நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் உங்கள் மீது தடுத்ததெல்லாம்; செத்தது, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டவை ஆகியவையாகும். எவர் (விருப்பத்துடன் அதை) நாடியவராக அல்லாமல், (சட்டத்தை) மீறியவராக அல்லாமல் (பசிக் கொடுமையால் மேற் கூறப்பட்ட தடுக்கப்பட்டவற்றில் எதையும் உண்ணவேண்டிய) நிர்பந்தத்திற்குள்ளானாரோ நிச்சயமாக அல்லாஹ் (அவரை மன்னித்து கருணை புரியும்) மகா மன்னிப்பாளன், மிகக் கருணையாளன் ஆவான்.