குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௧௧௦
Qur'an Surah An-Nahl Verse 110
ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௧௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ثُمَّ اِنَّ رَبَّكَ لِلَّذِيْنَ هَاجَرُوْا مِنْۢ بَعْدِ مَا فُتِنُوْا ثُمَّ جَاهَدُوْا وَصَبَرُوْاۚ اِنَّ رَبَّكَ مِنْۢ بَعْدِهَا لَغَفُوْرٌ رَّحِيْمٌ ࣖ (النحل : ١٦)
- thumma
- ثُمَّ
- Then
- பிறகு
- inna
- إِنَّ
- indeed
- நிச்சயமாக
- rabbaka
- رَبَّكَ
- your Lord
- உம் இறைவன்
- lilladhīna
- لِلَّذِينَ
- to those who
- எவர்களுக்கு
- hājarū
- هَاجَرُوا۟
- emigrated
- நாடு துறந்தார்கள்
- min baʿdi mā futinū
- مِنۢ بَعْدِ مَا فُتِنُوا۟
- after after what they had been put to trials
- அவர்கள் துன்புறுத்தப்பட்ட பின்பு
- thumma
- ثُمَّ
- then
- பிறகு
- jāhadū
- جَٰهَدُوا۟
- strove hard
- போர் புரிந்தனர்
- waṣabarū
- وَصَبَرُوٓا۟
- and were patient
- இன்னும் சகித்தனர்
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- rabbaka
- رَبَّكَ
- your Lord
- உம் இறைவன்
- min
- مِنۢ
- after it
- பின்பு
- baʿdihā
- بَعْدِهَا
- after it
- பின்பு இவற்றுக்கு
- laghafūrun
- لَغَفُورٌ
- surely is Oft-Forgiving
- மகா மன்னிப்பாளன்
- raḥīmun
- رَّحِيمٌ
- Most Merciful
- மிகக் கருணையாளன்
Transliteration:
Summa inna Rabbaka lillazeena haajaroo mim ba'dimaa futinoo summma jaahadoo wa sabaroo inna Rabbaka mim ba'dihaa la Ghafoorur Raheem(QS. an-Naḥl:110)
English Sahih International:
Then, indeed your Lord, to those who emigrated after they had been compelled [to say words of disbelief] and thereafter fought [for the cause of Allah] and were patient – indeed, your Lord, after that, is Forgiving and Merciful (QS. An-Nahl, Ayah ௧௧௦)
Abdul Hameed Baqavi:
(நபியே!) எவர்கள் (எதிரிகளால்) துன்புறுத்தப்பட்டு, பின்னர் (தங்கள் இல்லத்திலிருந்து) வெளிப்பட்டு, போரும் புரிந்து (பல கஷ்டங்களையும்) சகித்துக்கொண்டு உறுதியாக இருந்தார்களோ அவர்களுக்(கு அருள் புரிவதற்)காகவே நிச்சயமாக உங்களுடைய இறைவன் இருக்கிறான். நிச்சயமாக உங்களுடைய இறைவன் இதற்குப் பின்னரும் (அவர்களை) மன்னிப்பவனும் (அவர்கள் மீது) கிருபையுடையவனுமாக இருக்கின்றான். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௧௧௦)
Jan Trust Foundation
இன்னும் எவர்கள் (துன்பங்களுக்கும்) சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டபின் (தம் வீடுகளைத் துறந்து) ஹிஜ்ரத் செய்து (வெளிக்கிளம்பினார்களோ), பின்பு அறப்போர் புரிந்தார்களோ இன்னும் பொறுமையைக் கையாண்டார்களோ, அவர்களுக்கு (உதவி செய்ய) நிச்சயமாக உம்முடைய இறைவன் இருக்கின்றான்; இவற்றுக்குப் பின்னரும், உம்முடைய இறைவன் மன்னிப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பிறகு, தாங்கள் துன்புறுத்தப்பட்ட பின்பு நாடு துறந்து, பிறகு போர் புரிந்து, (சோதனைகளை) சகித்தவர்களுக்கு நிச்சயமாக உம் இறைவன், இவற்றுக்குப் பின் (அவர்களை மன்னித்து கருணை காட்டும்) மகா மன்னிப்பாளன், மிகக் கருணையாளன் ஆவான்.