குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௧௦௬
Qur'an Surah An-Nahl Verse 106
ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௧௦௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مَنْ كَفَرَ بِاللّٰهِ مِنْۢ بَعْدِ اِيْمَانِهٖٓ اِلَّا مَنْ اُكْرِهَ وَقَلْبُهٗ مُطْمَىِٕنٌّۢ بِالْاِيْمَانِ وَلٰكِنْ مَّنْ شَرَحَ بِالْكُفْرِ صَدْرًا فَعَلَيْهِمْ غَضَبٌ مِّنَ اللّٰهِ ۗوَلَهُمْ عَذَابٌ عَظِيْمٌ (النحل : ١٦)
- man
- مَن
- Whoever
- எவர்
- kafara
- كَفَرَ
- disbelieves
- நிராகரித்தார்
- bil-lahi
- بِٱللَّهِ
- in Allah
- அல்லாஹ்வை
- min baʿdi
- مِنۢ بَعْدِ
- after after
- பின்னர்
- īmānihi
- إِيمَٰنِهِۦٓ
- his belief
- அவர் நம்பிக்கை கொண்ட
- illā man
- إِلَّا مَنْ
- except (one) who
- தவிர/எவர்
- uk'riha
- أُكْرِهَ
- is forced
- தான் நிர்பந்திக்கப்பட்டார்
- waqalbuhu
- وَقَلْبُهُۥ
- while his heart
- தனது உள்ளமோ
- muṭ'ma-innun
- مُطْمَئِنٌّۢ
- (is) content
- திருப்தியடைந்தது
- bil-īmāni
- بِٱلْإِيمَٰنِ
- with the faith
- நம்பிக்கையில்
- walākin
- وَلَٰكِن
- But
- எனினும்
- man
- مَّن
- (one) who
- எவர்
- sharaḥa
- شَرَحَ
- opens
- திறந்தான், விவரித்தான், விரும்பினான்
- bil-kuf'ri
- بِٱلْكُفْرِ
- to disbelief
- நிராகரிப்பை
- ṣadran
- صَدْرًا
- (his) breast
- நெஞ்சத்தால்
- faʿalayhim
- فَعَلَيْهِمْ
- then upon them
- அவர்கள் மீது
- ghaḍabun
- غَضَبٌ
- (is) a wrath
- கோபம்
- mina l-lahi
- مِّنَ ٱللَّهِ
- of Allah
- அல்லாஹ்வுடைய
- walahum
- وَلَهُمْ
- and for them
- இன்னும் அவர்களுக்கு
- ʿadhābun
- عَذَابٌ
- (is) a punishment
- வேதனை
- ʿaẓīmun
- عَظِيمٌ
- great
- கடுமையானது
Transliteration:
man kafara billaahi mim ba'di eemaanihee illaa man ukriha wa qalbuhoo mutmma'innum bil eemaani wa laakim man sharaha bilkufri sadran fa'alaihim ghadabum minal laahi wa lahum 'azaabun 'azeem(QS. an-Naḥl:106)
English Sahih International:
Whoever disbelieves in [i.e., denies] Allah after his belief... except for one who is forced [to renounce his religion] while his heart is secure in faith. But those who [willingly] open their breasts to disbelief, upon them is wrath from Allah, and for them is a great punishment; (QS. An-Nahl, Ayah ௧௦௬)
Abdul Hameed Baqavi:
(ஆகவே,) எவரேனும் நம்பிக்கை கொண்டதன் பின்னர், அவன் அல்லாஹ்வை (நிராகரித்தால் அவனைப் பற்றி கவனிக்கப்படும்.) அவனுடைய உள்ளம் நம்பிக்கையை கொண்டு முற்றிலும் திருப்தியடைந்தே இருக்க, எவருடைய நிர்ப்பந்தத்தின் மீதும் அவன் (இவ்வாறு) நிராகரித்தால் (அவன்மீது யாதொரு குற்றமுமில்லை.) எனினும், அவனுடைய உள்ளத்தில் நிராகரிப்பே நிறைந்திருந்(து இவ்வாறு செய்)தால் அவன் மீது அல்லாஹ்வுடைய கோபம்தான் ஏற்படும். அவனுக்கு கடுமையான வேதனையுமுண்டு. (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௧௦௬)
Jan Trust Foundation
எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) - அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர - (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் குஃப்ரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ - இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பின்னர், அவனை நிராகரிப்பாரோ, ஆனால் தான் நிர்பந்திக்கப்பட்டு தனது உள்ளமோ நம்பிக்கையில் திருப்தியடைந்ததாக இருப்பவரைத் தவிர. (அவர் மன்னிக்கப்பட்டவர்), எனினும், எவராவது நெஞ்சத்தால் நிராகரிப்பை விரும்பினால் அவர்கள் மீது அல்லாஹ்வுடைய கோபம் நிகழும். இன்னும் அவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு.