குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௧௦௨
Qur'an Surah An-Nahl Verse 102
ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௧௦௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ نَزَّلَهٗ رُوْحُ الْقُدُسِ مِنْ رَّبِّكَ بِالْحَقِّ لِيُثَبِّتَ الَّذِيْنَ اٰمَنُوْا وَهُدًى وَّبُشْرٰى لِلْمُسْلِمِيْنَ (النحل : ١٦)
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக
- nazzalahu
- نَزَّلَهُۥ
- "Has brought it down
- இறக்கினார்/இதை
- rūḥu l-qudusi
- رُوحُ ٱلْقُدُسِ
- the Holy Spirit the Holy Spirit
- ரூஹூல் குதுஸ்
- min
- مِن
- from
- இருந்து
- rabbika
- رَّبِّكَ
- your Lord
- உம் இறைவன்
- bil-ḥaqi
- بِٱلْحَقِّ
- in truth
- உண்மையைக் கொண்டு
- liyuthabbita
- لِيُثَبِّتَ
- to make firm
- உறுதிப்படுத்துவதற்காக
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- believe
- நம்பிக்கை கொண்டனர்
- wahudan
- وَهُدًى
- and (as) a guidance
- இன்னும் நேர்வழியாக
- wabush'rā
- وَبُشْرَىٰ
- and glad tidings
- இன்னும் நற்செய்தியாக
- lil'mus'limīna
- لِلْمُسْلِمِينَ
- to the Muslims"
- முஸ்லிம்களுக்கு
Transliteration:
Qul nazzalahoo Roohul Qudusi mir Rabbika bilhaqqi liyusabbital lazeena aamanoo wa hudanw wa bushraa lilmuslimeen(QS. an-Naḥl:102)
English Sahih International:
Say, [O Muhammad], "The Pure Spirit [i.e., Gabriel] has brought it down from your Lord in truth to make firm those who believe and as guidance and good tidings to the Muslims." (QS. An-Nahl, Ayah ௧௦௨)
Abdul Hameed Baqavi:
மெய்யாகவே இதை உங்கள் இறைவனிடமிருந்து "ரூஹுல் குத்ஸ்" (என்னும் ஜிப்ரீல்) தான் இறக்கி வைத்தார் என்று நீங்கள் கூறுங்கள். (இந்தக் குர்ஆன் இறைவனுக்கு) நம்பிக்கைக் கொண்டோரை உறுதிப்படுத்துவதற்காகவும், முற்றிலும் கட்டுப் பட்டவர்களுக்கு நேரான வழியாகவும் நற்செய்தியாகவும் இருக்கிறது. (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௧௦௨)
Jan Trust Foundation
(நபியே!) “ஈமான் கொண்டோரை உறுதிப்படுத்துவதற்காகவும், (இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்டோராகிய) முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டியாகவும் நன்மாராயமாகவும் உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டு ரூஹுல் குதுஸ் (என்னும் ஜிப்ரீல்) இதை இறக்கி வைத்தார்” என்று (அவர்களிடம்) நீர் கூறுவீராக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“நம்பிக்கை கொண்டவர்களை உறுதிப்படுத்துவதற்காகவும், நேர்வழியாகவும் முஸ்லிம்களுக்கு நற்செய்தியாகவும் இதை உம் இறைவனிடமிருந்து ‘ரூஹுல் குதுஸ்’(என்றழைக்கப்படும் ஜிப்ரயீல்) உண்மையைக் கொண்டு இறக்கினார்”என்று (நபியே!) கூறுவீராக!