Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௧௦௧

Qur'an Surah An-Nahl Verse 101

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௧௦௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَا بَدَّلْنَآ اٰيَةً مَّكَانَ اٰيَةٍ ۙوَّاللّٰهُ اَعْلَمُ بِمَا يُنَزِّلُ قَالُوْٓا اِنَّمَآ اَنْتَ مُفْتَرٍۗ بَلْ اَكْثَرُهُمْ لَا يَعْلَمُوْنَ (النحل : ١٦)

wa-idhā baddalnā
وَإِذَا بَدَّلْنَآ
And when We substitute
நாம் மாற்றினால்
āyatan
ءَايَةً
a Verse
ஒரு வசனத்தை
makāna
مَّكَانَ
(in) place
இடத்தில்
āyatin
ءَايَةٍۙ
(of) a Verse
மற்றொரு வசனத்தின்
wal-lahu
وَٱللَّهُ
and Allah -
அல்லாஹ்
aʿlamu
أَعْلَمُ
(is) most knowing
மிக அறிந்தவன்
bimā yunazzilu
بِمَا يُنَزِّلُ
of what He sends down
தான் இறக்குவதை
qālū
قَالُوٓا۟
they say
கூறுகின்றனர்
innamā anta
إِنَّمَآ أَنتَ
"Only you
நீரெல்லாம்
muf'tarin bal
مُفْتَرٍۭۚ بَلْ
(are) an inventor" Nay
இட்டுக்கட்டுபவர்/மாறாக
aktharuhum
أَكْثَرُهُمْ
most of them
அதிகமானவர்(கள்)/ இவர்களில்
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
(do) not know
அறியமாட்டார்கள்

Transliteration:

Wa izaa baddalnaaa Aayatam makaana Aayatinw wal laahu a'lamu bimaa yunazzilu qaalooo innamaa anta muftar; bal aksaruhum laa ya'lamoon (QS. an-Naḥl:101)

English Sahih International:

And when We substitute a verse in place of a verse – and Allah is most knowing of what He sends down – they say, "You, [O Muhammad], are but an inventor [of lies]." But most of them do not know. (QS. An-Nahl, Ayah ௧௦௧)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தைக் கொண்டு மாற்றினால் இவர்கள் (உங்களை நோக்கி) "நிச்சயமாக நீங்கள் பொய்யர்" என்று கூறுகின்றனர். எ(ந்ததெந்த நேரத்தில் எந்தெந்தக் கட்டளைகளை எந்தெந்த வசனத்)தை அருள வேண்டுமென்பதை அல்லாஹ் நன்கறிவான்; இவர்களில் பெரும்பாலானவர்கள் (இந்த உண்மையை) அறியமாட்டார்கள். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௧௦௧)

Jan Trust Foundation

(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) “நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்” என்று அவர்கள் கூறுகிறார்கள்| எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) நாம் ஒரு வசனத்தின் இடத்தில் மற்றொரு வசனத்தை மாற்றினால் - அல்லாஹ் தான் இறக்குவதை மிக அறிந்தவனாக இருக்கிறான் - இவர்கள் (உம்மை நோக்கி) “நிச்சயமாக நீர் (தானாக இதை) இட்டுக்கட்டுபவர்தான்”என்று கூறுகின்றனர். மாறாக இவர்களில் அதிகமானவர்கள் (இதன் உண்மையை) அறிய மாட்டார்கள்.