குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௧௦
Qur'an Surah An-Nahl Verse 10
ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
هُوَ الَّذِيْٓ اَنْزَلَ مِنَ السَّمَاۤءِ مَاۤءً لَّكُمْ مِّنْهُ شَرَابٌ وَّمِنْهُ شَجَرٌ فِيْهِ تُسِيْمُوْنَ (النحل : ١٦)
- huwa
- هُوَ
- He
- அவன்
- alladhī
- ٱلَّذِىٓ
- (is) the One Who
- எத்தகையவன்
- anzala
- أَنزَلَ
- sends down
- இறக்கினான்
- mina l-samāi
- مِنَ ٱلسَّمَآءِ
- from the sky
- மேகத்திலிருந்து
- māan
- مَآءًۖ
- water
- மழை நீரை
- lakum
- لَّكُم
- for you
- உங்களுக்கு
- min'hu
- مِّنْهُ
- of it
- அதில்
- sharābun
- شَرَابٌ
- (is) drink
- குடிநீர்
- wamin'hu
- وَمِنْهُ
- and from it
- இன்னும் அதிலிருந்து
- shajarun
- شَجَرٌ
- (grows) vegetation
- மரங்கள்
- fīhi
- فِيهِ
- in which
- அவற்றில்
- tusīmūna
- تُسِيمُونَ
- you pasture your cattle
- மேய்க்கிறீர்கள்
Transliteration:
Huwal lazeee anzala minas samaaa'i maaa'al lakum minhu sharaabunw wa minhu shajarun feehi tuseemoon(QS. an-Naḥl:10)
English Sahih International:
It is He who sends down rain from the sky; from it is drink and from it is foliage in which you pasture [animals]. (QS. An-Nahl, Ayah ௧௦)
Abdul Hameed Baqavi:
அவன்தான் மேகத்திலிருந்து உங்களுக்கு மழை பொழியச் செய்கிறான். அதில்தான் நீங்கள் அருந்தக்கூடிய நீரும் இருக்கிறது; அதைக்கொண்டே (வளர்ந்த) புற்பூண்டுகளும் இருக்கின்றன. அதிலே (உங்கள் கால்நடைகளை) மேய்க்கின்றீர்கள். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௧௦)
Jan Trust Foundation
அவனே வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்கிறான்; அதிலிருந்து உங்களுக்கு அருந்தும் நீரும் இருக்கிறது; அதிலிருந்து (உங்கள் கால்நடைகளை) மேய்ப்பதற்கான மரங்கள் (மற்றும் புற்பூண்டுகளும் உண்டாகி) அதில் இருக்கின்றன.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன்தான் மேகத்திலிருந்து மழை நீரை இறக்குபவன். அதில் உங்களுக்கு குடிநீர் இருக்கிறது; அதிலிருந்து மரங்கள் (செடி கொடிகள், புற்பூண்டுகள்) முளைக்கின்றன. அவற்றில் (உங்கள் கால்நடைகளை) நீங்கள் மேய்க்கிறீர்கள்.