Skip to content

ஸூரா ஸூரத்துந் நஹ்ல் - Page: 9

An-Nahl

(an-Naḥl)

௮௧

وَاللّٰهُ جَعَلَ لَكُمْ مِّمَّا خَلَقَ ظِلٰلًا وَّجَعَلَ لَكُمْ مِّنَ الْجِبَالِ اَكْنَانًا وَّجَعَلَ لَكُمْ سَرَابِيْلَ تَقِيْكُمُ الْحَرَّ وَسَرَابِيْلَ تَقِيْكُمْ بَأْسَكُمْ ۚ كَذٰلِكَ يُتِمُّ نِعْمَتَهٗ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تُسْلِمُوْنَ ٨١

wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
jaʿala
جَعَلَ
அமைத்தான்
lakum
لَكُم
உங்களுக்கு
mimmā khalaqa
مِّمَّا خَلَقَ
தான் படைத்திருப்பவற்றில்
ẓilālan
ظِلَٰلًا
நிழல்களை
wajaʿala
وَجَعَلَ
இன்னும் அமைத்தான்
lakum
لَكُم
உங்களுக்கு
mina l-jibāli
مِّنَ ٱلْجِبَالِ
மலைகளில்
aknānan
أَكْنَٰنًا
குகைகளை
wajaʿala
وَجَعَلَ
இன்னும் அமைத்தான்
lakum
لَكُمْ
உங்களுக்கு
sarābīla
سَرَٰبِيلَ
சட்டைகளை
taqīkumu
تَقِيكُمُ
காக்கின்றன/உங்களை
l-ḥara
ٱلْحَرَّ
வெப்பத்தை விட்டு
wasarābīla
وَسَرَٰبِيلَ
இன்னும் சட்டைகளை
taqīkum
تَقِيكُم
காக்கின்றன/ உங்களை
basakum
بَأْسَكُمْۚ
உங்கள் பலமான தாக்குதல்
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
yutimmu
يُتِمُّ
முழுமையாக்குகிறான்
niʿ'matahu
نِعْمَتَهُۥ
தன் அருளை
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
laʿallakum tus'limūna
لَعَلَّكُمْ تُسْلِمُونَ
நீங்கள் முற்றிலும் பணிந்து நடப்பதற்காக
அவன் படைத்திருப்பவைகளில் நிழல் தரக்கூடியவற்றையும் உங்களுக்காக அமைத்திருக்கின்றான். மலை(க் குகை)களில் உங்களுக்குத் தங்குமிடங்களையும் அமைத்தான். வெப்பத்தையும் (குளிரையும்) உங்களுக்குத் தடுக்கக் கூடிய சட்டைகளையும், (கத்தி, அம்பு போன்ற) ஆயுதங்களைத் தடுக்கக்கூடிய கேடயங்(கள் செய்யக்கூடிய பொருள்)களையும் அவனே உங்களுக்காக அமைத்தான். அவன் தன்னுடைய அருளை இவ்வாறு உங்கள் மீது முழுமையாக்குகிறான். (இதற்காக) நீங்கள் (அவனுக்கு) முற்றிலும் கட்டுப்பட்டு நடப்பீர்களாக! ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௮௧)
Tafseer
௮௨

فَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا عَلَيْكَ الْبَلٰغُ الْمُبِيْنُ ٨٢

fa-in tawallaw
فَإِن تَوَلَّوْا۟
அவர்கள் விலகினால்
fa-innamā ʿalayka
فَإِنَّمَا عَلَيْكَ
உம்மீது எல்லாம்
l-balāghu
ٱلْبَلَٰغُ
எடுத்துரைப்பதுதான்
l-mubīnu
ٱلْمُبِينُ
தெளிவாக
(இவ்வளவெல்லாம் இருந்தும் நபியே!) அவர்கள் (உங்களைப்) புறக்கணித்தால் (அதைப் பற்றி நீங்கள் கவலைப் படாதீர்கள். ஏனென்றால் நம்முடைய) தூதை (அவர்களுக்குத்) தெளிவாக எடுத்துரைப்பதுதான் உங்கள்மீது கடமை. ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௮௨)
Tafseer
௮௩

يَعْرِفُوْنَ نِعْمَتَ اللّٰهِ ثُمَّ يُنْكِرُوْنَهَا وَاَكْثَرُهُمُ الْكٰفِرُوْنَ ࣖ ٨٣

yaʿrifūna
يَعْرِفُونَ
அறிகிறார்கள்
niʿ'mata
نِعْمَتَ
அருட்கொடையை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
thumma
ثُمَّ
பிறகு
yunkirūnahā
يُنكِرُونَهَا
அதை நிராகரிக்கின்றனர்
wa-aktharuhumu
وَأَكْثَرُهُمُ
இன்னும் அதிகமானவர்(கள்) அவர்களில்
l-kāfirūna
ٱلْكَٰفِرُونَ
நன்றி கெட்டவர்கள்
அல்லாஹ்வின் (இத்தகைய) அருட்கொடையை அவர்கள் நன்கறிந்த பின்னரும் அவனை அவர்கள் நிராகரிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் நன்றி கெட்டவர்களாகவே இருக்கின்றனர். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௮௩)
Tafseer
௮௪

وَيَوْمَ نَبْعَثُ مِنْ كُلِّ اُمَّةٍ شَهِيْدًا ثُمَّ لَا يُؤْذَنُ لِلَّذِيْنَ كَفَرُوْا وَلَا هُمْ يُسْتَعْتَبُوْنَ ٨٤

wayawma
وَيَوْمَ
நாளில்
nabʿathu
نَبْعَثُ
எழுப்புவோம்
min
مِن
இருந்து
kulli
كُلِّ
ஒவ்வொரு
ummatin
أُمَّةٍ
சமுதாயம்
shahīdan
شَهِيدًا
ஒரு சாட்சியாளரை
thumma
ثُمَّ
பிறகு
lā yu'dhanu
لَا يُؤْذَنُ
அனுமதிக்கப்படாது
lilladhīna
لِلَّذِينَ
எவர்களுக்கு
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தனர்
walā hum yus'taʿtabūna
وَلَا هُمْ يُسْتَعْتَبُونَ
இன்னும் அவர்கள் காரணம் கேட்கப் பட மாட்டார்கள்
ஒவ்வொரு வகுப்பாரிடமும் (நாம் அனுப்பிய நம்முடைய தூதரை, அவர்களுக்குச்) சாட்சியாக நாம் அழைக்கும் (நாளை நபியே! நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள். அந்)நாளில் (அத்தூதர்களை) நிராகரித்தவர்களுக்கு (ஏதும் பேசுவதற்கு) அனுமதி கொடுக்கப்பட மாட்டாது. அன்றி அவர்கள் சாக்குப் போக்குச் சொல்லவும் வழியிராது. ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௮௪)
Tafseer
௮௫

وَاِذَا رَاَ الَّذِيْنَ ظَلَمُوا الْعَذَابَ فَلَا يُخَفَّفُ عَنْهُمْ وَلَا هُمْ يُنْظَرُوْنَ ٨٥

wa-idhā raā
وَإِذَا رَءَا
கண்டால்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ẓalamū
ظَلَمُوا۟
தீங்கிழைத்தனர்
l-ʿadhāba
ٱلْعَذَابَ
வேதனையை
falā yukhaffafu
فَلَا يُخَفَّفُ
இலகுவாக்கப்படாது
ʿanhum
عَنْهُمْ
அவர்களை விட்டு
walā hum yunẓarūna
وَلَا هُمْ يُنظَرُونَ
இன்னும் அவர்கள்அவகாசம் அளிக்கப் பட மாட்டார்கள்
இவ்வக்கிரமக்காரர்கள் (மறுமையில்) வேதனையைக் (கண்ணால்) கண்ட பிறகு (அவர்கள் என்ன புகல் கூறியபோதிலும்) அவர்களுக்கு (வேதனை) குறைக்கப்பட மாட்டாது. அன்றி, அவர்களுக்கு அவகாசமும் அளிக்கப்படவும் மாட்டாது. ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௮௫)
Tafseer
௮௬

وَاِذَا رَاَ الَّذِيْنَ اَشْرَكُوْا شُرَكَاۤءَهُمْ قَالُوْا رَبَّنَا هٰٓؤُلَاۤءِ شُرَكَاۤؤُنَا الَّذِيْنَ كُنَّا نَدْعُوْا مِنْ دُوْنِكَۚ فَاَلْقَوْا اِلَيْهِمُ الْقَوْلَ اِنَّكُمْ لَكٰذِبُوْنَۚ ٨٦

wa-idhā raā
وَإِذَا رَءَا
கண்டால்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ashrakū
أَشْرَكُوا۟
இணைவைத்தனர்
shurakāahum
شُرَكَآءَهُمْ
இணை தெய்வங்களை தங்கள்
qālū
قَالُوا۟
கூறுவார்கள்
rabbanā
رَبَّنَا
எங்கள் இறைவா
hāulāi
هَٰٓؤُلَآءِ
இவை
shurakāunā
شُرَكَآؤُنَا
எங்கள் தெய்வங்கள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kunnā
كُنَّا
இருந்தோம்
nadʿū
نَدْعُوا۟
அழைப்போம்
min dūnika
مِن دُونِكَۖ
உன்னையன்றி
fa-alqaw ilayhimu l-qawla
فَأَلْقَوْا۟ إِلَيْهِمُ ٱلْقَوْلَ
அதற்கு அவை கூறிவிடுவர்/ இவர்களை நோக்கி
innakum
إِنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
lakādhibūna
لَكَٰذِبُونَ
பொய்யர்கள்தான்
இணைவைத்து வணங்கும் இவர்கள் தாங்கள் இணையாக்கிய (பொய்) தெய்வங்களை (மறுமையில்) கண்டால் (இறைவனை நோக்கி) "எங்கள் இறைவனே! உன்னையன்றி தெய்வங்கள் என்று நாங்கள் அழைத்துக் கொண்டிருந்த எங்களுடைய தெய்வங்கள் இவைதாம்" என்று கூறுவார்கள். அதற்கு அவை இவர்களை நோக்கி "நிச்சயமாக நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள்; (நாங்கள் தெய்வங்களல்ல)" என்று கூறும். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௮௬)
Tafseer
௮௭

وَاَلْقَوْا اِلَى اللّٰهِ يَوْمَىِٕذِ ِۨالسَّلَمَ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ ٨٧

wa-alqaw
وَأَلْقَوْا۟
அவர்கள் விடுவார்கள்
ilā l-lahi
إِلَى ٱللَّهِ
அல்லாஹ்விற்கு
yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
l-salama
ٱلسَّلَمَۖ
பணிந்து
waḍalla
وَضَلَّ
மறைந்தன
ʿanhum
عَنْهُم
இவர்களை விட்டு
mā kānū yaftarūna
مَّا كَانُوا۟ يَفْتَرُونَ
எவை/இருந்தனர்/இட்டுக்கட்டுவார்கள்
பின்னர், இவர்கள் பொய்யாக (தெய்வங்களென்று) கூறிக் கொண்டு இருந்தவை அனைத்தும் இவர்களை விட்டு மறைந்து விடும். அந்நாளில் இவர்கள் அல்லாஹ்வை நோக்கி (உனக்கு) முற்றிலும் வழிப்படுவோம் என்று கூறுவார்கள். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௮௭)
Tafseer
௮௮

اَلَّذِيْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ زِدْنٰهُمْ عَذَابًا فَوْقَ الْعَذَابِ بِمَا كَانُوْا يُفْسِدُوْنَ ٨٨

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தனர்
waṣaddū
وَصَدُّوا۟
இன்னும் தடுத்தனர்
ʿan sabīli
عَن سَبِيلِ
பாதையை விட்டு
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
zid'nāhum
زِدْنَٰهُمْ
அதிகப்படுத்துவோம்/அவர்களுக்கு
ʿadhāban
عَذَابًا
வேதனையை
fawqa l-ʿadhābi
فَوْقَ ٱلْعَذَابِ
மேல்/வேதனைக்கு
bimā kānū
بِمَا كَانُوا۟
இருந்தனர்/காரணத்தால்
yuf'sidūna
يُفْسِدُونَ
விஷமம்செய்வார்கள்
(எனினும், மறுமையையும்) நிராகரித்து அல்லாஹ்வுடைய பாதையையும் தடுத்து (விஷமம் செய்து) கொண்டிருந்த இவர்களுக்கு, இவர்களுடைய விஷமத்தின் காரணமாக வேதனைக்குமேல் வேதனையை அதிகப்படுத்திக் கொண்டேயிருப்போம். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௮௮)
Tafseer
௮௯

وَيَوْمَ نَبْعَثُ فِيْ كُلِّ اُمَّةٍ شَهِيْدًا عَلَيْهِمْ مِّنْ اَنْفُسِهِمْ وَجِئْنَا بِكَ شَهِيْدًا عَلٰى هٰٓؤُلَاۤءِۗ وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتٰبَ تِبْيَانًا لِّكُلِّ شَيْءٍ وَّهُدًى وَّرَحْمَةً وَّبُشْرٰى لِلْمُسْلِمِيْنَ ࣖ ٨٩

wayawma
وَيَوْمَ
நாளில்
nabʿathu
نَبْعَثُ
நாம் எழுப்புவோம்
fī kulli
فِى كُلِّ
ஒவ்வொரு
ummatin
أُمَّةٍ
சமுதாயம்
shahīdan
شَهِيدًا
ஒரு சாட்சியாளரை
ʿalayhim
عَلَيْهِم
அவர்களுக்கு எதிராக
min
مِّنْ
இருந்தே
anfusihim
أَنفُسِهِمْۖ
அவர்களில்
waji'nā
وَجِئْنَا
இன்னும் வருவோம்
bika
بِكَ
உம்மைக் கொண்டு
shahīdan
شَهِيدًا
சாட்சியாளராக
ʿalā
عَلَىٰ
எதிரான
hāulāi
هَٰٓؤُلَآءِۚ
இவர்களுக்கு
wanazzalnā
وَنَزَّلْنَا
இறக்கினோம்
ʿalayka
عَلَيْكَ
உம்மீது
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதத்தை
tib'yānan
تِبْيَٰنًا
மிக தெளிவுபடுத்தக்கூடியதாக
likulli shayin
لِّكُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
wahudan
وَهُدًى
இன்னும் நேர்வழிகாட்டியாக
waraḥmatan
وَرَحْمَةً
இன்னும் அருளாக
wabush'rā
وَبُشْرَىٰ
இன்னும் நற்செய்தியாக
lil'mus'limīna
لِلْمُسْلِمِينَ
முஸ்லிம்களுக்கு
(நபியே!) ஒவ்வொரு வகுப்பாருக்கும் அவர்களிலிருந்தே (அவர்களிடம் வந்த நபியை) சாட்சியாக நாம் அழைக்கும் நாளில், உங்களை (உங்கள் முன் இருக்கும்) இவர்களுக்குச் சாட்சியாகக் கொண்டு வருவோம். (நபியே!) ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக விவரிக்கக்கூடிய இவ்வேதத்தை நாம்தாம் உங்கள்மீது இறக்கி இருக்கின்றோம். இது நேரான வழியாகவும், அருளாகவும் இருப்பதுடன் (எனக்கு) முற்றிலும் கட்டுப்படுபவர்களுக்கு ஒரு நற்செய்தியாகவும் இருக்கின்றது. ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௮௯)
Tafseer
௯௦

۞ اِنَّ اللّٰهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْاِحْسَانِ وَاِيْتَاۤئِ ذِى الْقُرْبٰى وَيَنْهٰى عَنِ الْفَحْشَاۤءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ٩٠

inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
yamuru
يَأْمُرُ
ஏவுகிறான்
bil-ʿadli
بِٱلْعَدْلِ
நீதம் செலுத்துவதற்கு
wal-iḥ'sāni
وَٱلْإِحْسَٰنِ
இன்னும் நல்லறம் புரிதல்
waītāi
وَإِيتَآئِ
இன்னும் கொடுப்பதற்கு
dhī l-qur'bā
ذِى ٱلْقُرْبَىٰ
உறவினர்களுக்கு
wayanhā
وَيَنْهَىٰ
இன்னும் அவன் தடுக்கிறான்
ʿani l-faḥshāi
عَنِ ٱلْفَحْشَآءِ
மானக்கேடானவற்றை விட்டு
wal-munkari
وَٱلْمُنكَرِ
இன்னும் பாவம்
wal-baghyi
وَٱلْبَغْىِۚ
இன்னும் அநியாயம்
yaʿiẓukum
يَعِظُكُمْ
உங்களுக்கு உபதேசிக்கிறான்
laʿallakum tadhakkarūna
لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
நீங்கள் ஞானம் பெறுவதற்காக
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் நீதி செலுத்தும்படியாகவும், நன்மை செய்யும்படியாகவும், உறவினர்களுக்கு(ப் பொருள்) கொடுத்து உதவி செய்யும்படியாகவும் நிச்சயமாக அல்லாஹ் (உங்களை) ஏவுகிறான். மானக்கேடான காரியங்கள், அநியாயம், பாவம் ஆகியவைகளிலிருந்து (உங்களை) அவன் தடை செய்கிறான். (இவைகளை) நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுமாறும் அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௯௦)
Tafseer