Skip to content

ஸூரா ஸூரத்துந் நஹ்ல் - Page: 7

An-Nahl

(an-Naḥl)

௬௧

وَلَوْ يُؤَاخِذُ اللّٰهُ النَّاسَ بِظُلْمِهِمْ مَّا تَرَكَ عَلَيْهَا مِنْ دَاۤبَّةٍ وَّلٰكِنْ يُّؤَخِّرُهُمْ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّىۚ فَاِذَا جَاۤءَ اَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُوْنَ سَاعَةً وَّلَا يَسْتَقْدِمُوْنَ ٦١

walaw yuākhidhu
وَلَوْ يُؤَاخِذُ
தண்டித்தால்
l-lahu l-nāsa
ٱللَّهُ ٱلنَّاسَ
அல்லாஹ்/மக்களை
biẓul'mihim
بِظُلْمِهِم
குற்றத்தின் காரணமாக/அவர்களுடைய
mā taraka
مَّا تَرَكَ
விட்டிருக்க மாட்டான்
ʿalayhā
عَلَيْهَا
அதன் மீது
min dābbatin
مِن دَآبَّةٍ
ஓர் உயிரினத்தை
walākin
وَلَٰكِن
எனினும்
yu-akhiruhum
يُؤَخِّرُهُمْ
பிற்படுத்துகிறான் அவர்களை
ilā
إِلَىٰٓ
வரை
ajalin
أَجَلٍ
ஒரு தவணை
musamman
مُّسَمًّىۖ
குறிப்பிடப்பட்டது
fa-idhā jāa
فَإِذَا جَآءَ
வந்தால்
ajaluhum
أَجَلُهُمْ
தவணை/அவர்களுடைய
lā yastakhirūna
لَا يَسْتَـْٔخِرُونَ
பிந்த மாட்டார்கள்
sāʿatan
سَاعَةًۖ
ஒரு விநாடி
walā yastaqdimūna
وَلَا يَسْتَقْدِمُونَ
இன்னும் முந்த மாட்டார்கள்
மனிதர்கள் செய்யும் குற்றங்குறைகளைப் பற்றி அவர்களை அல்லாஹ் (உடனுக்குடன்) பிடிப்பதாக இருந்தால் (பூமியில்) ஓர் உயிரினைத்தையுமே அவன் விட்டுவைக்க மாட்டான். எனினும், ஒரு குறிப்பிட்ட தவணை வரையில் (பிடிக்காது) அவர்களைப் பிற்படுத்துகிறான். அவர்களுடைய தவணை வரும் பட்சத்தில் ஒரு விநாடியும் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௬௧)
Tafseer
௬௨

وَيَجْعَلُوْنَ لِلّٰهِ مَا يَكْرَهُوْنَ وَتَصِفُ اَلْسِنَتُهُمُ الْكَذِبَ اَنَّ لَهُمُ الْحُسْنٰى لَا جَرَمَ اَنَّ لَهُمُ النَّارَ وَاَنَّهُمْ مُّفْرَطُوْنَ ٦٢

wayajʿalūna
وَيَجْعَلُونَ
இன்னும் ஆக்குகின்றனர்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்கு
mā yakrahūna
مَا يَكْرَهُونَ
எதை/வெறுக்கின்றனர்
wataṣifu
وَتَصِفُ
இன்னும் வர்ணிக்கின்றன
alsinatuhumu
أَلْسِنَتُهُمُ
நாவுகள்/அவர்களின்
l-kadhiba
ٱلْكَذِبَ
பொய்யை
anna
أَنَّ
நிச்சயமாக
lahumu
لَهُمُ
தங்களுக்கு
l-ḥus'nā
ٱلْحُسْنَىٰۖ
சொர்க்கம், மிக அழகியது
lā jarama
لَا جَرَمَ
கண்டிப்பாக
anna
أَنَّ
நிச்சயம்
lahumu
لَهُمُ
இவர்களுக்கு
l-nāra
ٱلنَّارَ
நரகம்தான்
wa-annahum
وَأَنَّهُم
இன்னும் நிச்சயம் இவர்கள்
muf'raṭūna
مُّفْرَطُونَ
விடப்படுபவர்கள்
தாங்கள் விரும்பாதவை(களாகிய பெண் மக்)களை அல்லாஹ்வுக்குக் கற்பிக்கும் இவர்கள் (மறுமையில்) நிச்சயமாக தங்களுக்கு நன்மைதான் கிடைக்குமென்று அவர்களின் நாவுகள் பொய்யை வர்ணிக்கின்றன. நிச்சயமாக இவர்களுக்கு நரகம்தான் என்பதிலும் நரகத்திற்கு முதலாவதாக இவர்கள்தாம் செல்வார்கள் என்பதிலும் சந்தேகமேயில்லை. ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௬௨)
Tafseer
௬௩

تَاللّٰهِ لَقَدْ اَرْسَلْنَآ اِلٰٓى اُمَمٍ مِّنْ قَبْلِكَ فَزَيَّنَ لَهُمُ الشَّيْطٰنُ اَعْمَالَهُمْ فَهُوَ وَلِيُّهُمُ الْيَوْمَ وَلَهُمْ عَذَابٌ اَلِيْمٌ ٦٣

tal-lahi laqad
تَٱللَّهِ لَقَدْ
அல்லாஹ் மீது சத்தியமாக/திட்டவட்டமாக
arsalnā
أَرْسَلْنَآ
அனுப்பினோம்
ilā umamin
إِلَىٰٓ أُمَمٍ
சமுதாயங்களுக்கு
min qablika
مِّن قَبْلِكَ
உமக்கு முன்னர்
fazayyana
فَزَيَّنَ
அழகாக்கினான்
lahumu
لَهُمُ
அவர்களுக்கு
l-shayṭānu
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
aʿmālahum
أَعْمَٰلَهُمْ
அவர்களுடைய செயல்களை
fahuwa
فَهُوَ
ஆகவே அவன்
waliyyuhumu
وَلِيُّهُمُ
அவர்களுக்குநண்பன்
l-yawma
ٱلْيَوْمَ
இன்று
walahum
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
வேதனை
alīmun
أَلِيمٌ
துன்புறுத்தக் கூடியது
(நபியே!) அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களுக்கு முன்னிருந்த பல வகுப்பார்களுக்கும் நாம் (நம்முடைய) தூதர்களை அனுப்பி வைத்தோம். எனினும், ஷைத்தான் அவர்களுக்கும் அவர்களுடைய (தீய) காரியங்களையே அழகாகக் காண்பித்தான். இன்றைய தினம் இவர்களுக்கும் அவனே நண்பனாக இருக்கின்றான். ஆகவே, இவர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு. ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௬௩)
Tafseer
௬௪

وَمَآ اَنْزَلْنَا عَلَيْكَ الْكِتٰبَ اِلَّا لِتُبَيِّنَ لَهُمُ الَّذِى اخْتَلَفُوْا فِيْهِۙ وَهُدًى وَّرَحْمَةً لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ ٦٤

wamā anzalnā
وَمَآ أَنزَلْنَا
நாம் இறக்கவில்லை
ʿalayka
عَلَيْكَ
உம்மீது
l-kitāba
ٱلْكِتَٰبَ
இவ்வேதத்தை
illā
إِلَّا
தவிர
litubayyina
لِتُبَيِّنَ
நீர் தெளிவு படுத்துவதற்காக
lahumu
لَهُمُ
இவர்களுக்கு
alladhī ikh'talafū
ٱلَّذِى ٱخْتَلَفُوا۟
எது/தர்க்கித்தார்கள்
fīhi
فِيهِۙ
அதில்
wahudan
وَهُدًى
இன்னும் நேர்வழி
waraḥmatan
وَرَحْمَةً
இன்னும் அருளாக
liqawmin
لِّقَوْمٍ
மக்களுக்கு
yu'minūna
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்வார்கள்
அன்றி, (நபியே!) இவர்கள் எவ்விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டார்களோ அதனை நீங்கள் தெளிவாக்குவதற்காகவே இவ்வேதத்தை உங்கள்மீது நாம் இறக்கி வைத்தோம். அன்றி, நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இது நேரான வழியாகவும், ஓர் அருளாகவும் இருக்கிறது. ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௬௪)
Tafseer
௬௫

وَاللّٰهُ اَنْزَلَ مِنَ السَّمَاۤءِ مَاۤءً فَاَحْيَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَاۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَةً لِّقَوْمٍ يَّسْمَعُوْنَ ࣖ ٦٥

wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
anzala
أَنزَلَ
இறக்குகின்றான்
mina
مِنَ
இருந்து
l-samāi
ٱلسَّمَآءِ
மேகம்
māan
مَآءً
மழையை
fa-aḥyā
فَأَحْيَا
இன்னும் உயிர்ப்பிக்கின்றான்
bihi
بِهِ
அதன் மூலம்
l-arḍa
ٱلْأَرْضَ
பூமியை
baʿda mawtihā
بَعْدَ مَوْتِهَآۚ
அது இறந்த பின்னர்
inna
إِنَّ
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
இதில்
laāyatan
لَءَايَةً
ஓர் அத்தாட்சி
liqawmin
لِّقَوْمٍ
மக்களுக்கு
yasmaʿūna
يَسْمَعُونَ
செவி சாய்க்கின்றார்கள்
அல்லாஹ்வே மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்து உயிரிழந்த பூமிக்கு உயிரூட்டுகிறான். (நல்லுபதேசத்திற்கு) செவி சாய்க்கும் மக்களுக்கு நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௬௫)
Tafseer
௬௬

وَاِنَّ لَكُمْ فِى الْاَنْعَامِ لَعِبْرَةً ۚ نُسْقِيْكُمْ مِّمَّا فِيْ بُطُوْنِهٖ مِنْۢ بَيْنِ فَرْثٍ وَّدَمٍ لَّبَنًا خَالِصًا سَاۤىِٕغًا لِّلشّٰرِبِيْنَ ٦٦

wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
lakum
لَكُمْ
உங்களுக்கு
fī l-anʿāmi
فِى ٱلْأَنْعَٰمِ
கால்நடைகளில்
laʿib'ratan
لَعِبْرَةًۖ
ஒரு படிப்பினை
nus'qīkum
نُّسْقِيكُم
புகட்டுகிறோம்/உங்களுக்கு
mimmā
مِّمَّا
எதிலிருந்து
fī buṭūnihi
فِى بُطُونِهِۦ
அதன் வயிறுகளில்
min bayni
مِنۢ بَيْنِ
இடையில்
farthin
فَرْثٍ
சானம்
wadamin
وَدَمٍ
இன்னும் இரத்தம்
labanan
لَّبَنًا
பாலை
khāliṣan
خَالِصًا
கலப்பற்றது
sāighan
سَآئِغًا
மதுரமானது, இலகுவாக இறங்கக்கூடியது
lilshāribīna
لِّلشَّٰرِبِينَ
அருந்துபவர்களுக்கு
(ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகளிலும் உங்களுக்கு ஒரு படிப்பினை உண்டு. இரத்தத்திற்கும் சாணத்திற்கும் இடையில் அதன் வயிற்றில் இருந்து கலப்பற்ற பாலை (உற்பத்தி செய்து) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். அது அருந்து பவர்களுக்கு மிக்க இன்பகரமானது. ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௬௬)
Tafseer
௬௭

وَمِنْ ثَمَرٰتِ النَّخِيْلِ وَالْاَعْنَابِ تَتَّخِذُوْنَ مِنْهُ سَكَرًا وَّرِزْقًا حَسَنًاۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَةً لِّقَوْمٍ يَّعْقِلُوْنَ ٦٧

wamin thamarāti
وَمِن ثَمَرَٰتِ
கனிகளிலிருந்து
l-nakhīli
ٱلنَّخِيلِ
பேரீச்சை மரத்தின்
wal-aʿnābi
وَٱلْأَعْنَٰبِ
இன்னும் திராட்சைகள்
tattakhidhūna
تَتَّخِذُونَ
செய்கிறீர்கள்
min'hu
مِنْهُ
அதிலிருந்து
sakaran
سَكَرًا
போதையூட்டக் கூடியது
wariz'qan
وَرِزْقًا
இன்னும் உணவு
ḥasanan
حَسَنًاۗ
நல்லது
inna fī dhālika
إِنَّ فِى ذَٰلِكَ
நிச்சயமாக/இதில்
laāyatan
لَءَايَةً
ஓர் அத்தாட்சி
liqawmin
لِّقَوْمٍ
மக்களுக்கு
yaʿqilūna
يَعْقِلُونَ
சிந்தித்து புரிகின்றார்கள்
பேரீச்சை, திராட்சைப் பழங்களிலிருந்து மதுவையும், நல்ல உணவுகளையும் நீங்கள் செய்கின்றீர்கள். நிச்சயமாக இதிலும் அறிவுடைய மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௬௭)
Tafseer
௬௮

وَاَوْحٰى رَبُّكَ اِلَى النَّحْلِ اَنِ اتَّخِذِيْ مِنَ الْجِبَالِ بُيُوْتًا وَّمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُوْنَۙ ٦٨

wa-awḥā
وَأَوْحَىٰ
செய்தியளித்தான்
rabbuka
رَبُّكَ
உம் இறைவன்
ilā l-naḥli
إِلَى ٱلنَّحْلِ
தேனீக்கு
ani ittakhidhī
أَنِ ٱتَّخِذِى
என்று/ அமைத்துக்கொள்
mina l-jibāli
مِنَ ٱلْجِبَالِ
மலைகளில்
buyūtan
بُيُوتًا
வீடுகளை
wamina l-shajari
وَمِنَ ٱلشَّجَرِ
இன்னும் மரங்களில்
wamimmā yaʿrishūna
وَمِمَّا يَعْرِشُونَ
இன்னும் அவர்கள் கட்டுகிறவற்றில்
உங்களது இறைவன் தேனீக்கு மலைகளிலும், மரங்களிலும், மக்கள் கட்டும் கட்டிடங்களிலும் கூடுகளை அமைத்துக் கொள்ளும்படி அறிவூட்டினான். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௬௮)
Tafseer
௬௯

ثُمَّ كُلِيْ مِنْ كُلِّ الثَّمَرٰتِ فَاسْلُكِيْ سُبُلَ رَبِّكِ ذُلُلًاۗ يَخْرُجُ مِنْ بُطُوْنِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ اَلْوَانُهٗ ۖفِيْهِ شِفَاۤءٌ لِّلنَّاسِۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَةً لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ ٦٩

thumma
ثُمَّ
பிறகு
kulī
كُلِى
புசி
min
مِن
இருந்து
kulli
كُلِّ
ஒவ்வொரு
l-thamarāti
ٱلثَّمَرَٰتِ
பூக்கள்
fa-us'lukī
فَٱسْلُكِى
இன்னும் செல்
subula
سُبُلَ
வழிகளில்
rabbiki
رَبِّكِ
உனது இறைவனின்
dhululan
ذُلُلًاۚ
சுலபமாக
yakhruju
يَخْرُجُ
வெளியேறுகிறது
min
مِنۢ
இருந்து
buṭūnihā
بُطُونِهَا
அதன் வயிறுகள்
sharābun
شَرَابٌ
ஒரு பானம்
mukh'talifun
مُّخْتَلِفٌ
மாறுபட்டது
alwānuhu
أَلْوَٰنُهُۥ
அதன் நிறங்கள்
fīhi
فِيهِ
அதில்
shifāon
شِفَآءٌ
நிவாரணம்
lilnnāsi
لِّلنَّاسِۗ
மக்களுக்கு
inna
إِنَّ
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
இதில்
laāyatan
لَءَايَةً
ஓர் அத்தாட்சி
liqawmin
لِّقَوْمٍ
மக்களுக்கு
yatafakkarūna
يَتَفَكَّرُونَ
சிந்திக்கின்றார்கள்
அன்றி "நீ ஒவ்வொரு புஷ்பத்திலிருந்தும் புசித்து, உனதிறைவன் உனக்கு அறிவித்த எளிதான வழியில் (உன்னுடைய கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல் (எனக் கட்டளையிட்டான்.) இதனால் அதன் வயிற்றிலிருந்து பல நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகின்றது. அதில் மனிதர்களுக்கு நிவாரணமுண்டு. நிச்சயமாக இதிலும் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௬௯)
Tafseer
௭௦

وَاللّٰهُ خَلَقَكُمْ ثُمَّ يَتَوَفّٰىكُمْ وَمِنْكُمْ مَّنْ يُّرَدُّ اِلٰٓى اَرْذَلِ الْعُمُرِ لِكَيْ لَا يَعْلَمَ بَعْدَ عِلْمٍ شَيْـًٔاۗ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ قَدِيْرٌ ࣖ ٧٠

wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
khalaqakum
خَلَقَكُمْ
உங்களைப் படைத்தான்
thumma yatawaffākum
ثُمَّ يَتَوَفَّىٰكُمْۚ
பிறகு/உயிர் கைப்பற்றுகிறான்/உங்களை
waminkum
وَمِنكُم
இன்னும் உங்களில்
man
مَّن
எவர்
yuraddu
يُرَدُّ
திருப்பப்படுபவர்
ilā ardhali
إِلَىٰٓ أَرْذَلِ
வரை/அற்பமானது
l-ʿumuri
ٱلْعُمُرِ
வயது
likay
لِكَىْ
ஆவதற்காக
lā yaʿlama
لَا يَعْلَمَ
அறியமாட்டான்
baʿda
بَعْدَ
பின்பு
ʿil'min shayan
عِلْمٍ شَيْـًٔاۚ
அறிதல்/ஒன்றை
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
qadīrun
قَدِيرٌ
பேராற்றலுடையவன்
உங்களைப் படைத்தவன் அல்லாஹ்தான். பின்னர் அவனே உங்களை மரணிக்கச் செய்கிறான். கற்றறிந்திருந்தும் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய பலவீனம் தரும் முதுமை வரையில் வாழ்ந்திருப்பவர்களும் உங்களில் உண்டு. (உங்களில் யார், யாரை எவ்வளவு காலம் விட்டுவைக்க வேண்டுமென்பதை) நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனும் (அவ்வாறு செய்ய) மிக்க ஆற்றலுடையவனாகவும் இருக்கிறான். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௭௦)
Tafseer