Skip to content

ஸூரா ஸூரத்துந் நஹ்ல் - Page: 6

An-Nahl

(an-Naḥl)

௫௧

۞ وَقَالَ اللّٰهُ لَا تَتَّخِذُوْٓا اِلٰهَيْنِ اثْنَيْنِۚ اِنَّمَا هُوَ اِلٰهٌ وَّاحِدٌ فَاِيَّايَ فَارْهَبُوْنِ ٥١

waqāla
وَقَالَ
கூறுகிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
lā tattakhidhū
لَا تَتَّخِذُوٓا۟
எடுத்துக் கொள்ளாதீர்கள்
ilāhayni
إِلَٰهَيْنِ
இரு கடவுள்களை
ith'nayni
ٱثْنَيْنِۖ
இரண்டு
innamā huwa
إِنَّمَا هُوَ
அவனெல்லாம்
ilāhun
إِلَٰهٌ
கடவுள்
wāḥidun
وَٰحِدٌۖ
ஒருவன்தான்
fa-iyyāya
فَإِيَّٰىَ
ஆகவே எனக்கு
fa-ir'habūni
فَٱرْهَبُونِ
பயப்படுங்கள்/என்னை
(மனிதர்களே!) அல்லாஹ் கூறுகிறான்: (ஒன்றுக்குப் பதிலாக) இரு தெய்வங்களை நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக (உங்களுடைய) வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஒருவன்தான். ஆகவே, (அந்த ஒருவனாகிய) எனக்கு நீங்கள் பயப்படுங்கள். (மற்றெவருக்கும் பயப்படவேண்டாம்.) ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௫௧)
Tafseer
௫௨

وَلَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلَهُ الدِّيْنُ وَاصِبًاۗ اَفَغَيْرَ اللّٰهِ تَتَّقُوْنَ ٥٢

walahu
وَلَهُۥ
அவனுக்கே
mā fī l-samāwāti
مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில் உள்ளவை
wal-arḍi
وَٱلْأَرْضِ
இன்னும் பூமியில்
walahu
وَلَهُ
இன்னும் அவனுக்கே
l-dīnu wāṣiban
ٱلدِّينُ وَاصِبًاۚ
கீழ்ப்படிதல்/ என்றென்றும்
afaghayra
أَفَغَيْرَ
அல்லாததையா?
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
tattaqūna
تَتَّقُونَ
அஞ்சுகிறீர்கள்
வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அவனுடையவையே! அவனுக்கு என்றென்றும் வழிபடுவது அவசியம். ஆகவே, அந்த அல்லாஹ் அல்லாதவற்றிற்கா நீங்கள் பயப்படுகிறீர்கள்? ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௫௨)
Tafseer
௫௩

وَمَا بِكُمْ مِّنْ نِّعْمَةٍ فَمِنَ اللّٰهِ ثُمَّ اِذَا مَسَّكُمُ الضُّرُّ فَاِلَيْهِ تَجْـَٔرُوْنَۚ ٥٣

wamā bikum
وَمَا بِكُم
எது/உங்களிடம்
min niʿ'matin
مِّن نِّعْمَةٍ
அருட்கொடையில்
famina l-lahi
فَمِنَ ٱللَّهِۖ
அல்லாஹ்விடமிருந்து
thumma
ثُمَّ
பிறகு
idhā massakumu
إِذَا مَسَّكُمُ
உங்களுக்கு ஏற்பட்டால்
l-ḍuru
ٱلضُّرُّ
துன்பம், தீங்கு
fa-ilayhi
فَإِلَيْهِ
அவனிடமே
tajarūna
تَجْـَٔرُونَ
கதறுகிறீர்கள்
உங்களுக்குக் கிடைத்துள்ள பாக்கியம் அனைத்தும் அல்லாஹ்விடமிருந்து வந்தவைதாம். உங்களை யாதொரு தீங்கு அணுகும் பட்சத்தில் அவனிடமே முறையிடுகிறீர்கள். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௫௩)
Tafseer
௫௪

ثُمَّ اِذَا كَشَفَ الضُّرَّ عَنْكُمْ اِذَا فَرِيْقٌ مِّنْكُمْ بِرَبِّهِمْ يُشْرِكُوْنَۙ ٥٤

thumma idhā kashafa
ثُمَّ إِذَا كَشَفَ
பிறகு/நீக்கினால்
l-ḍura
ٱلضُّرَّ
துன்பத்தை
ʿankum
عَنكُمْ
உங்களை விட்டு
idhā
إِذَا
அப்போது
farīqun
فَرِيقٌ
ஒரு பிரிவினர்
minkum
مِّنكُم
உங்களில்
birabbihim
بِرَبِّهِمْ
தங்கள் இறைவனுக்கு
yush'rikūna
يُشْرِكُونَ
இணைவைக்கின்றனர்
பின்னர், அவன் உங்களுடைய கஷ்டங்களை நீக்கினாலோ உடனே உங்களில் ஒரு பிரிவினர் (இத்தகைய) தங்கள் இறைவனுக்கே இணைவைத்து வணங்க ஆரம்பிக்கின்றனர். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௫௪)
Tafseer
௫௫

لِيَكْفُرُوْا بِمَآ اٰتَيْنٰهُمْۗ فَتَمَتَّعُوْاۗ فَسَوْفَ تَعْلَمُوْنَ ٥٥

liyakfurū
لِيَكْفُرُوا۟
அவர்கள் நிராகரிப்பதற்காக
bimā ātaynāhum
بِمَآ ءَاتَيْنَٰهُمْۚ
நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றை
fatamattaʿū
فَتَمَتَّعُوا۟ۖ
ஆகவே சுகமனுபவியுங்கள்
fasawfa taʿlamūna
فَسَوْفَ تَعْلَمُونَ
நீங்கள் அறிவீர்கள்
நாம் அவர்களுக்குச் செய்த நன்றிகளையும் நிராகரித்து விடுகின்றனர். (ஆதலால் அவர்களை நோக்கி "இவ்வுலகில்) சிறிது சுகமனுபவித்துக் கொள்ளுங்கள். பின்னர் (மறுமையில்) நீங்கள் (உண்மையை) அறிந்துகொள்வீர்கள்" (என்று நபியே! கூறுங்கள்.) ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௫௫)
Tafseer
௫௬

وَيَجْعَلُوْنَ لِمَا لَا يَعْلَمُوْنَ نَصِيْبًا مِّمَّا رَزَقْنٰهُمْۗ تَاللّٰهِ لَتُسْـَٔلُنَّ عَمَّا كُنْتُمْ تَفْتَرُوْنَ ٥٦

wayajʿalūna
وَيَجْعَلُونَ
இன்னும் ஆக்குகின்றனர்
limā lā yaʿlamūna
لِمَا لَا يَعْلَمُونَ
அவர்கள் அறியாதவற்றுக்கு
naṣīban
نَصِيبًا
ஒரு பாகத்தை
mimmā
مِّمَّا
இருந்து
razaqnāhum
رَزَقْنَٰهُمْۗ
கொடுத்தோம்/அவர்களுக்கு
tal-lahi
تَٱللَّهِ
அல்லாஹ் மீது சத்தியமாக
latus'alunna
لَتُسْـَٔلُنَّ
நிச்சயமாக விசாரிக்கப்படுவீர்கள்
ʿammā kuntum
عَمَّا كُنتُمْ
பற்றி/இருந்தீர்கள்
taftarūna
تَفْتَرُونَ
இட்டுக்கட்டுகிறீர்கள்
நாம் அவர்களுக்குக் கொடுத்த பொருள்களில் ஒரு பாகத்தைத் தங்களுடைய தெய்வங்களுக்கென்று குறிப்பிட்டுக் கூறுகின்றனர். இதனை அவர்கள் அறிந்துகொள்ளவே முடியாது. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் கற்பனையாகக் கூறும் இப்பொய்(க் கூற்று)களைப் பற்றி (மறுமையில்) நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௫௬)
Tafseer
௫௭

وَيَجْعَلُوْنَ لِلّٰهِ الْبَنٰتِ سُبْحٰنَهٗۙ وَلَهُمْ مَّا يَشْتَهُوْنَ ٥٧

wayajʿalūna
وَيَجْعَلُونَ
இன்னும் ஆக்குகின்றனர்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்வுக்கு
l-banāti
ٱلْبَنَٰتِ
பெண் பிள்ளைகளை
sub'ḥānahu
سُبْحَٰنَهُۥۙ
அவன் மிகப் பரிசுத்தமானவன்
walahum
وَلَهُم
தங்களுக்கு
mā yashtahūna
مَّا يَشْتَهُونَ
எதை/விரும்புகின்றனர்
(நபியே!) இவர்கள் அல்லாஹ்வுக்குப் பெண் மக்கள் உண்டெனக் கூறுகின்றனர். அவனோ (இதனை விட்டு) மிக்க பரிசுத்தமானவன். எனினும், அவர்களோ (தங்களுக்கு ஆண் மக்களையே) விரும்புகின்றனர். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௫௭)
Tafseer
௫௮

وَاِذَا بُشِّرَ اَحَدُهُمْ بِالْاُنْثٰى ظَلَّ وَجْهُهٗ مُسْوَدًّا وَّهُوَ كَظِيْمٌۚ ٥٨

wa-idhā bushira
وَإِذَا بُشِّرَ
நற்செய்தி கூறப்பட்டால்
aḥaduhum
أَحَدُهُم
அவர்களில் ஒருவனுக்கு
bil-unthā
بِٱلْأُنثَىٰ
பெண் குழந்தையைக் கொண்டு
ẓalla
ظَلَّ
ஆகிவிட்டது
wajhuhu
وَجْهُهُۥ
அவனுடைய முகம்
mus'waddan wahuwa
مُسْوَدًّا وَهُوَ
கருத்ததாக/இன்னும் அவன்
kaẓīmun
كَظِيمٌ
துக்கப்படுகிறான்
அவர்களில் ஒருவனுக்கு பெண்குழந்தை பிறந்ததாக நற்செய்தி கூறினால் அவனுடைய முகம் (துக்கத்தால்) கறுத்து கோபத்தை விழுங்குகிறான். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௫௮)
Tafseer
௫௯

يَتَوٰرٰى مِنَ الْقَوْمِ مِنْ سُوْۤءِ مَا بُشِّرَ بِهٖۗ اَيُمْسِكُهٗ عَلٰى هُوْنٍ اَمْ يَدُسُّهٗ فِى التُّرَابِۗ اَلَا سَاۤءَ مَا يَحْكُمُوْنَ ٥٩

yatawārā
يَتَوَٰرَىٰ
மறைந்து கொள்கிறான்
mina l-qawmi
مِنَ ٱلْقَوْمِ
மக்களை விட்டு
min sūi
مِن سُوٓءِ
தீமையினால்
mā bushira bihi
مَا بُشِّرَ بِهِۦٓۚ
நற்செய்தி கூறப்பட்டது/தனக்கு
ayum'sikuhu
أَيُمْسِكُهُۥ
வைத்திருப்பதா?/அதை
ʿalā hūnin
عَلَىٰ هُونٍ
கேவலத்துடன்
am
أَمْ
அல்லது
yadussuhu
يَدُسُّهُۥ
புதைப்பான்/அதை
fī l-turābi
فِى ٱلتُّرَابِۗ
மண்ணில்
alā
أَلَا
அறிந்துகொள்ளுங்கள்!
sāa
سَآءَ
கெட்டு விட்டது
mā yaḥkumūna
مَا يَحْكُمُونَ
அவர்கள் தீர்ப்பளிப்பது
(பெண் குழந்தை பிறந்தது என) அவனுக்குக் கூறப்பட்ட இந்தக் கெட்ட நன்மாராயத்தைப் பற்றி (வெறுப்படைந்து) இழிவுடன் "அதை வைத்திருப்பதா? அல்லது (உயிருடன்) அதை மண்ணில் புதைத்து விடுவதா?" என்று கவலைப்பட்டு மக்கள் முன் வராதும் மறைந்து கொண்டு அலைகிறான். (இவ்வாறு தங்களுக்கு ஆண் குழந்தையும் இறைவனுக்குப் பெண் குழந்தையுமாக) அவர்கள் செய்யும் தீர்மானம் மிகக் கெட்டதல்லவா? ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௫௯)
Tafseer
௬௦

لِلَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ مَثَلُ السَّوْءِۚ وَلِلّٰهِ الْمَثَلُ الْاَعْلٰىۗ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ ࣖ ٦٠

lilladhīna
لِلَّذِينَ
எவர்களுக்கு
lā yu'minūna
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
bil-ākhirati
بِٱلْءَاخِرَةِ
மறுமையை
mathalu
مَثَلُ
தன்மை
l-sawi
ٱلسَّوْءِۖ
கெட்டது
walillahi
وَلِلَّهِ
இன்னும் அல்லாஹ்விற்கே
l-mathalu
ٱلْمَثَلُ
தன்மை
l-aʿlā
ٱلْأَعْلَىٰۚ
மிக உயர்ந்தது
wahuwa
وَهُوَ
அவன்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
மகா மிகைத்தவன்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்
(இத்தகைய) கெட்ட உதாரணமெல்லாம் மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கே (தகும்). அல்லாஹ்வுக்கோ மிக்க மேலான வர்ணிப்புகள் உண்டு. அவன் (அனைவரையும்) மிகைத் தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௬௦)
Tafseer