وَالَّذِيْنَ هَاجَرُوْا فِى اللّٰهِ مِنْۢ بَعْدِ مَا ظُلِمُوْا لَنُبَوِّئَنَّهُمْ فِى الدُّنْيَا حَسَنَةً ۗوَلَاَجْرُ الْاٰخِرَةِ اَكْبَرُۘ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَۙ ٤١
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- எவர்கள்
- hājarū
- هَاجَرُوا۟
- நாடு துறந்தார்கள்
- fī l-lahi
- فِى ٱللَّهِ
- அல்லாஹ்விற்காக
- min baʿdi
- مِنۢ بَعْدِ
- பின்பு
- mā ẓulimū
- مَا ظُلِمُوا۟
- அவர்கள் அநீதியிழைக்கப்படுதல்
- lanubawwi-annahum
- لَنُبَوِّئَنَّهُمْ
- நிச்சயமாக அமைப்போம்/அவர்களுக்கு
- fī l-dun'yā
- فِى ٱلدُّنْيَا
- இவ்வுலகில்
- ḥasanatan
- حَسَنَةًۖ
- அழகியதை
- wala-ajru
- وَلَأَجْرُ
- கூலிதான்
- l-ākhirati
- ٱلْءَاخِرَةِ
- மறுமையின்
- akbaru
- أَكْبَرُۚ
- மிகப் பெரியது
- law kānū yaʿlamūna
- لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ
- அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!
(நம்பிக்கையாளர்களே! உங்களில்) எவர்கள் (எதிரிகளால்) துன்புறுத்தப்பட்டு பின்னர் அல்லாஹ்வுக்காக(த் தங்கள் ஊரை விட்டு)ப் புறப்பட்டார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம் இவ்வுலகிலும் நல்ல இருப்பிடத்தையே தருவோம்; மறுமையின் கூலியோ (இதைவிட) மிகப் பெரிது. (இதனை) அவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமே! ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௪௧)Tafseer
الَّذِيْنَ صَبَرُوْا وَعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ ٤٢
- alladhīna ṣabarū
- ٱلَّذِينَ صَبَرُوا۟
- பொறுத்தவர்கள்
- waʿalā
- وَعَلَىٰ
- மீதே
- rabbihim
- رَبِّهِمْ
- தங்கள் இறைவன்
- yatawakkalūna
- يَتَوَكَّلُونَ
- நம்பிக்கை வைப்பார்கள்
இவர்கள்தாம் (கஷ்டங்களைப்) பொறுமையுடன் சகித்துக் கொண்டு தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பவர்கள். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௪௨)Tafseer
وَمَآ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ اِلَّا رِجَالًا نُّوْحِيْٓ اِلَيْهِمْ فَاسْـَٔلُوْٓا اَهْلَ الذِّكْرِ اِنْ كُنْتُمْ لَا تَعْلَمُوْنَۙ ٤٣
- wamā arsalnā
- وَمَآ أَرْسَلْنَا
- நாம் அனுப்பவில்லை
- min qablika
- مِن قَبْلِكَ
- உமக்கு முன்னர்
- illā
- إِلَّا
- தவிர
- rijālan
- رِجَالًا
- ஆடவர்களை
- nūḥī
- نُّوحِىٓ
- வஹீ அறிவிப்போம்
- ilayhim
- إِلَيْهِمْۚ
- அவர்களுக்கு
- fasalū
- فَسْـَٔلُوٓا۟
- ஆகவே கேளுங்கள்
- ahla l-dhik'ri
- أَهْلَ ٱلذِّكْرِ
- ஞானமுடையவர்களை
- in kuntum
- إِن كُنتُمْ
- நீங்கள் இருந்தால்
- lā taʿlamūna
- لَا تَعْلَمُونَ
- அறியாதவர்களாக
(நபியே!) உங்களுக்கு முன்னர் வஹீ கொடுத்து நாம் அவர்களிடம் அனுப்பி வைத்த தூதர்களெல்லாம் ஆடவர்கள்தாம். ஆகவே, (இவர்களை நோக்கி) "நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளாமலிருந்தால் (முந்திய வேதங்களைக்) கற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்" (என்று கூறுங்கள்.) ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௪௩)Tafseer
بِالْبَيِّنٰتِ وَالزُّبُرِۗ وَاَنْزَلْنَآ اِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ اِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ ٤٤
- bil-bayināti
- بِٱلْبَيِّنَٰتِ
- அத்தாட்சிகளைக் கொண்டு
- wal-zuburi
- وَٱلزُّبُرِۗ
- இன்னும் வேதங்கள்
- wa-anzalnā
- وَأَنزَلْنَآ
- இன்னும் இறக்கினோம்
- ilayka
- إِلَيْكَ
- உமக்கு
- l-dhik'ra
- ٱلذِّكْرَ
- ஞானத்தை
- litubayyina
- لِتُبَيِّنَ
- (ஏ) தெளிவுபடுத்துவீர்
- lilnnāsi
- لِلنَّاسِ
- அம்மக்களுக்காக
- mā nuzzila
- مَا نُزِّلَ
- எது/இறக்கப்பட்டது
- ilayhim
- إِلَيْهِمْ
- அவர்களுக்கு
- walaʿallahum yatafakkarūna
- وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ
- இன்னும் அவர்கள் சிந்திக்க வேண்டும்
அத்தூதர்களுக்கும் தெளிவான அத்தாட்சிகளையும், வேதங்களையும் (கொடுத்து அனுப்பினோம்.) அவ்வாறே இந்தக் குர்ஆனையும் (நபியே!) நாம் உங்களுக்கு இறக்கி வைத்தோம். மனிதர்களுக்காக (உங்கள்மீது) இறக்கப்பட்ட இதை நீங்கள் அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக் காண்பியுங்கள். (இதன் மூலம்) அவர்கள் கவனித்தறிந்து கொள்வார்கள். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௪௪)Tafseer
اَفَاَمِنَ الَّذِيْنَ مَكَرُوا السَّيِّاٰتِ اَنْ يَّخْسِفَ اللّٰهُ بِهِمُ الْاَرْضَ اَوْ يَأْتِيَهُمُ الْعَذَابُ مِنْ حَيْثُ لَا يَشْعُرُوْنَۙ ٤٥
- afa-amina
- أَفَأَمِنَ
- அச்சமற்றுவிட்ட(ன)ரா?
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- makarū
- مَكَرُوا۟
- சூழ்ச்சி செய்தனர்
- l-sayiāti
- ٱلسَّيِّـَٔاتِ
- தீமைகளை
- an yakhsifa
- أَن يَخْسِفَ
- சொருகிக் கொள்வான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- bihimu l-arḍa
- بِهِمُ ٱلْأَرْضَ
- தங்களை/பூமியில்
- aw
- أَوْ
- அல்லது
- yatiyahumu
- يَأْتِيَهُمُ
- வரும்/தங்களுக்கு
- l-ʿadhābu
- ٱلْعَذَابُ
- வேதனை
- min ḥaythu
- مِنْ حَيْثُ
- விதத்தில்
- lā yashʿurūna
- لَا يَشْعُرُونَ
- உணர மாட்டார்கள்
தீங்கிழைக்க சூழ்ச்சிகள் செய்யும் இவர்களைப் பூமி விழுங்கும்படி அல்லாஹ் செய்யமாட்டான் என்றோ அல்லது இவர்கள் அறிந்துகொள்ளாத விதத்தில் இவர்களை வேதனை வந்தடையாது என்றோ இவர்கள் அச்சமற்று இருக்கின்றனரா? ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௪௫)Tafseer
اَوْ يَأْخُذَهُمْ فِيْ تَقَلُّبِهِمْ فَمَا هُمْ بِمُعْجِزِيْنَۙ ٤٦
- aw yakhudhahum
- أَوْ يَأْخُذَهُمْ
- அல்லது/அவன்பிடித்துவிடுவதை/அவர்களை
- fī taqallubihim
- فِى تَقَلُّبِهِمْ
- பயணத்தில்/அவர்களுடைய
- famā hum
- فَمَا هُم
- அவர்கள் இல்லை
- bimuʿ'jizīna
- بِمُعْجِزِينَ
- பலவீனப்படுத்துபவர்களாக
அல்லது இவர்கள் நடமாடிக் கொண்டிருக்கும்பொழுதே இவர்களை அவன் பிடித்துக்கொள்ள மாட்டான் என்றும் (அச்சமற்றி ருக்கின்றனரா? அவ்வாறு அவன் பிடிக்கக் கருதினால், அவனிடம் இருந்து இவர்கள் தப்பி ஓடி) அவனைத் தோற்கடித்து விட மாட்டார்கள். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௪௬)Tafseer
اَوْ يَأْخُذَهُمْ عَلٰى تَخَوُّفٍۗ فَاِنَّ رَبَّكُمْ لَرَءُوْفٌ رَّحِيْمٌ ٤٧
- aw
- أَوْ
- அல்லது
- yakhudhahum
- يَأْخُذَهُمْ
- அவன் பிடித்துவிடுவதை/அவர்களை
- ʿalā takhawwufin
- عَلَىٰ تَخَوُّفٍ
- கொஞ்சம் குறைத்து
- fa-inna
- فَإِنَّ
- நிச்சயமாக
- rabbakum
- رَبَّكُمْ
- உங்கள் இறைவன்
- laraūfun
- لَرَءُوفٌ
- மகா இரக்கமானவன்
- raḥīmun
- رَّحِيمٌ
- மிகக் கருணையாளன்
அல்லது (இவர்களை அழித்துவிடக்கூடிய யாதொரு ஆபத்து வருமென்ற) திகிலின் மீது திகிலைக் கொடுத்து இவர்களைப் பிடித்துக் கொள்ளமாட்டான் (என்றும் அச்சமற்று இருக்கின்றனரா? அவன், தான் விரும்பிய வேதனையை இவர்களுக்கு கொடுக்க ஆற்றலுடையவன்.) எனினும், நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க இரக்கமுடையவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான். (ஆதலால், இதுவரை அவர்களை வேதனை செய்யாது விட்டு வைத்திருக்கிறான்.) ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௪௭)Tafseer
اَوَلَمْ يَرَوْا اِلٰى مَا خَلَقَ اللّٰهُ مِنْ شَيْءٍ يَّتَفَيَّؤُا ظِلٰلُهٗ عَنِ الْيَمِيْنِ وَالشَّمَاۤىِٕلِ سُجَّدًا لِّلّٰهِ وَهُمْ دَاخِرُوْنَ ٤٨
- awalam yaraw
- أَوَلَمْ يَرَوْا۟
- அவர்கள் பார்க்கவில்லையா?
- ilā mā
- إِلَىٰ مَا
- எதன் பக்கம்
- khalaqa
- خَلَقَ
- படைத்தான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- min shayin
- مِن شَىْءٍ
- ஒருபொருளையேனும்
- yatafayya-u
- يَتَفَيَّؤُا۟
- சாய்கின்றன
- ẓilāluhu
- ظِلَٰلُهُۥ
- அவற்றின் நிழல்கள்
- ʿani l-yamīni
- عَنِ ٱلْيَمِينِ
- வலப்புறமாக
- wal-shamāili
- وَٱلشَّمَآئِلِ
- இன்னும் இடப்புறமாக
- sujjadan
- سُجَّدًا
- சிரம் பணிந்தவையாக
- lillahi
- لِّلَّهِ
- அல்லாஹ்விற்கு
- wahum dākhirūna
- وَهُمْ دَٰخِرُونَ
- அவை/ மிகப்பணிந்தவை
அல்லாஹ் படைத்திருப்பவற்றில் ஒன்றையுமே இவர்கள் பார்க்கவில்லையா? அவற்றின் நிழல்கள் வலமும் இடமுமாக சாய்வதெல்லாம் அல்லாஹ்வை மிக்க தாழ்மையாகச் சிரம் பணிந்து வணங்குவதுதான். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௪௮)Tafseer
وَلِلّٰهِ يَسْجُدُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ مِنْ دَاۤبَّةٍ وَّالْمَلٰۤىِٕكَةُ وَهُمْ لَا يَسْتَكْبِرُوْنَ ٤٩
- walillahi
- وَلِلَّهِ
- அல்லாஹ்விற்கு
- yasjudu
- يَسْجُدُ
- சிரம் பணிகிறார்(கள்)
- mā fī l-samāwāti
- مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களில் உள்ளவை
- wamā fī l-arḍi
- وَمَا فِى ٱلْأَرْضِ
- இன்னும் பூமியில்உள்ளவை
- min dābbatin
- مِن دَآبَّةٍ
- எல்லா உயிரினங்கள்
- wal-malāikatu
- وَٱلْمَلَٰٓئِكَةُ
- இன்னும் வானவர்கள்
- wahum
- وَهُمْ
- இன்னும் அவர்கள்
- lā yastakbirūna
- لَا يَسْتَكْبِرُونَ
- பெருமையடிப்பதில்லை
வானங்களிலும் பூமியிலும் உள்ள மற்ற உயிரினங்களும் அல்லாஹ்வையே சிரம் பணிந்து வணங்குகின்றன. மலக்குகளும் அவ்வாறே. அவர்கள் (இப்லீஸைப்போல் அவனுக்கு சிரம் பணியாது) பெருமையடிப்பதில்லை. ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௪௯)Tafseer
يَخَافُوْنَ رَبَّهُمْ مِّنْ فَوْقِهِمْ وَيَفْعَلُوْنَ مَا يُؤْمَرُوْنَ ࣖ ۩ ٥٠
- yakhāfūna
- يَخَافُونَ
- பயப்படுகின்றனர்
- rabbahum
- رَبَّهُم
- தங்கள் இறைவனை
- min fawqihim
- مِّن فَوْقِهِمْ
- தங்களுக்கு மேலுள்ள
- wayafʿalūna
- وَيَفْعَلُونَ
- இன்னும் செய்கின்றனர்
- mā
- مَا
- எதை
- yu'marūna
- يُؤْمَرُونَ۩
- ஏவபடுகின்றனர்
அவர்கள் தங்களுக்கு மேலுள்ள தங்கள் இறைவனுக்குப் பயந்து தங்களுக்கு இடப்பட்ட கட்டளையையே செய்து கொண்டிருக்கின்றனர். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௫௦)Tafseer