Skip to content

ஸூரா ஸூரத்துந் நஹ்ல் - Page: 4

An-Nahl

(an-Naḥl)

௩௧

جَنّٰتُ عَدْنٍ يَّدْخُلُوْنَهَا تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ لَهُمْ فِيْهَا مَا يَشَاۤءُوْنَ ۗ كَذٰلِكَ يَجْزِى اللّٰهُ الْمُتَّقِيْنَۙ ٣١

jannātu ʿadnin
جَنَّٰتُ عَدْنٍ
சொர்க்கங்கள்/அத்ன்
yadkhulūnahā
يَدْخُلُونَهَا
அவர்கள் நுழைவார்கள்/அவற்றில்
tajrī
تَجْرِى
ஓடும்
min taḥtihā
مِن تَحْتِهَا
அவற்றின் கீழ்
l-anhāru
ٱلْأَنْهَٰرُۖ
நதிகள்
lahum fīhā
لَهُمْ فِيهَا
அவர்களுக்கு/அதில்
mā yashāūna
مَا يَشَآءُونَۚ
எதை/நாடுவார்கள்
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
yajzī
يَجْزِى
கூலி கொடுக்கிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-mutaqīna
ٱلْمُتَّقِينَ
அஞ்சுபவர்களுக்கு
(அவ்வீடு) என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய சுவனபதியாகும். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கும். அவர்கள் விரும்பியதெல்லாம் அங்கு அவர்களுக்குக் கிடைக்கும். இறை அச்சமுடையவர்களுக்கு இவ்வாறே அல்லாஹ் கூலி கொடுக்கின்றான். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௩௧)
Tafseer
௩௨

الَّذِيْنَ تَتَوَفّٰىهُمُ الْمَلٰۤىِٕكَةُ طَيِّبِيْنَ ۙيَقُوْلُوْنَ سَلٰمٌ عَلَيْكُمُ ادْخُلُوا الْجَنَّةَ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ٣٢

alladhīna tatawaffāhumu
ٱلَّذِينَ تَتَوَفَّىٰهُمُ
எவர்கள்/உயிர்கைப்பற்றுகின்றனர்/அவர்களை
l-malāikatu
ٱلْمَلَٰٓئِكَةُ
வானவர்கள்
ṭayyibīna
طَيِّبِينَۙ
நல்லவர்களாக
yaqūlūna
يَقُولُونَ
கூறுவார்கள்
salāmun
سَلَٰمٌ
ஸலாம் (ஈடேற்றம்)
ʿalaykumu
عَلَيْكُمُ
உங்களுக்கு
ud'khulū
ٱدْخُلُوا۟
நுழையுங்கள்
l-janata
ٱلْجَنَّةَ
சொர்க்கத்தில்
bimā kuntum
بِمَا كُنتُمْ
நீங்கள் இருந்ததின் காரணமாக
taʿmalūna
تَعْمَلُونَ
செய்வீர்கள்
இத்தகையவர்களின் உயிரை மலக்குகள், அவர்கள் நல்லவர்களாக இருக்கும் நிலைமையில் கைப்பற்றுகின்றனர். (அப்பொழுது அவர்களை நோக்கி) "ஸலாமுன் அலைக்கும் (உங்களுக்கு ஈடேற்றம் உண்டாவதாக!) நீங்கள் (நற்செயல்) செய்து கொண்டிருந்ததின் காரணமாக சுவனபதிக்குச் செல்லுங்கள்" என்று கூறுவார்கள். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௩௨)
Tafseer
௩௩

هَلْ يَنْظُرُوْنَ اِلَّآ اَنْ تَأْتِيَهُمُ الْمَلٰۤىِٕكَةُ اَوْ يَأْتِيَ اَمْرُ رَبِّكَ ۗ كَذٰلِكَ فَعَلَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ ۗوَمَا ظَلَمَهُمُ اللّٰهُ وَلٰكِنْ كَانُوْٓا اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ ٣٣

hal yanẓurūna
هَلْ يَنظُرُونَ
எதிர்பார்க்கிறார்களா?
illā
إِلَّآ
தவிர
an tatiyahumu
أَن تَأْتِيَهُمُ
வருவதை/தங்களிடம்
l-malāikatu
ٱلْمَلَٰٓئِكَةُ
வானவர்கள்
aw yatiya
أَوْ يَأْتِىَ
அவர்கள் வருவது
amru
أَمْرُ
கட்டளை
rabbika
رَبِّكَۚ
உம் இறைவனின்
kadhālika faʿala
كَذَٰلِكَ فَعَلَ
இவ்வாறே செய்தனர்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
min qablihim
مِن قَبْلِهِمْۚ
அவர்களுக்கு முன்னர்
wamā ẓalamahumu
وَمَا ظَلَمَهُمُ
தீங்கிழைக்கவில்லை/அவர்களுக்கு
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
walākin kānū
وَلَٰكِن كَانُوٓا۟
எனினும்/இருந்தனர்
anfusahum
أَنفُسَهُمْ
தங்களுக்கே
yaẓlimūna
يَظْلِمُونَ
தீங்கிழைப்பவர்களாக
(அவ்வக்கிரமக்காரர்களோ தங்கள் உயிரைக் கைப்பற்றுவதற்காக) அவர்களிடம் மலக்குகள் வருவதையோ அல்லது உங்கள் இறைவனின் கட்டளை(ப்படி வேதனை) வருவதையோ அன்றி (வேறெதனையும்) அவர்கள் எதிர் பார்க்கின்றனரா? இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே (அநியாயம்) செய்து கொண்டிருந்தனர். அல்லாஹ் இவர்களுக்கு யாதொரு தீங்கும் இழைக்கவில்லை. எனினும், அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௩௩)
Tafseer
௩௪

فَاَصَابَهُمْ سَيِّاٰتُ مَا عَمِلُوْا وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ ࣖ ٣٤

fa-aṣābahum
فَأَصَابَهُمْ
ஆகவே அடைந்தன/அவர்களை
sayyiātu
سَيِّـَٔاتُ
தீமைகள், தண்டனைகள்
mā ʿamilū
مَا عَمِلُوا۟
அவர்கள் செய்தவற்றின்
waḥāqa bihim
وَحَاقَ بِهِم
இன்னும் சூழ்ந்தது/அவர்களை
mā kānū
مَّا كَانُوا۟
எது/இருந்தனர்
bihi
بِهِۦ
அதைக் கொண்டு
yastahziūna
يَسْتَهْزِءُونَ
பரிகசிக்கின்றனர்
ஆகவே, அவர்கள் செய்துகொண்டிருந்த தீமைகளே அவர்களை வந்தடைந்தன. அன்றி, அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்ததும் அவர்களைச் சூழ்ந்துகொண்டது. ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௩௪)
Tafseer
௩௫

وَقَالَ الَّذِيْنَ اَشْرَكُوْا لَوْ شَاۤءَ اللّٰهُ مَا عَبَدْنَا مِنْ دُوْنِهٖ مِنْ شَيْءٍ نَّحْنُ وَلَآ اٰبَاۤؤُنَا وَلَا حَرَّمْنَا مِنْ دُوْنِهٖ مِنْ شَيْءٍ ۗ كَذٰلِكَ فَعَلَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ ۚفَهَلْ عَلَى الرُّسُلِ اِلَّا الْبَلٰغُ الْمُبِيْنُ ٣٥

waqāla
وَقَالَ
கூறினர்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ashrakū
أَشْرَكُوا۟
இணைவைத்தனர்
law shāa
لَوْ شَآءَ
நாடியிருந்தால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
mā ʿabadnā
مَا عَبَدْنَا
வணங்கியிருக்க மாட்டோம்
min dūnihi
مِن دُونِهِۦ
அவனையன்றி
min shayin
مِن شَىْءٍ
எதையும்
naḥnu
نَّحْنُ
நாங்களும்
walā ābāunā
وَلَآ ءَابَآؤُنَا
இன்னும் மூதாதைகளும்/எங்கள்
walā ḥarramnā
وَلَا حَرَّمْنَا
இன்னும் தடுத்திருக்க மாட்டோம்
min dūnihi
مِن دُونِهِۦ
அவனையன்றி
min shayin
مِن شَىْءٍۚ
எதையும்
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறே
faʿala
فَعَلَ
செய்தார்(கள்)
alladhīna min qablihim
ٱلَّذِينَ مِن قَبْلِهِمْۚ
இவர்களுக்கு முன்னிருந்தவர்கள்
fahal ʿalā
فَهَلْ عَلَى
?/மீது
l-rusuli illā
ٱلرُّسُلِ إِلَّا
தூதர்கள்/தவிர
l-balāghu
ٱلْبَلَٰغُ
எடுத்துரைப்பது
l-mubīnu
ٱلْمُبِينُ
தெளிவாக
இணைவைத்து வணங்குபவர்கள் கூறுகின்றனர்: "அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும் எங்கள் மூதாதைகளும் அவனையன்றி மற்றெதையும் வணங்கியே இருக்கமாட்டோம்; அவனுடைய கட்டளையின்றி எதனையும் (ஆகாததெனத்) தடுத்திருக்கவும் மாட்டோம்." இவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (வீண் விதண்டாவாதம்) செய்து கொண்டிருந்தனர். நம் தூதர்களுக்கு (அவர்களுக்கிடப்பட்ட கட்டளையை) தெளிவாக அறிவிப்பதைத் தவிர (வேறெதுவும்) பொறுப்புண்டா? (கிடையாது.) ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௩௫)
Tafseer
௩௬

وَلَقَدْ بَعَثْنَا فِيْ كُلِّ اُمَّةٍ رَّسُوْلًا اَنِ اعْبُدُوا اللّٰهَ وَاجْتَنِبُوا الطَّاغُوْتَۚ فَمِنْهُمْ مَّنْ هَدَى اللّٰهُ وَمِنْهُمْ مَّنْ حَقَّتْ عَلَيْهِ الضَّلٰلَةُ ۗ فَسِيْرُوْا فِى الْاَرْضِ فَانْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِيْنَ ٣٦

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
baʿathnā
بَعَثْنَا
அனுப்பினோம்
fī kulli ummatin
فِى كُلِّ أُمَّةٍ
எல்லாசமுதாயங்களில்
rasūlan
رَّسُولًا
ஒரு தூதரை
ani uʿ'budū
أَنِ ٱعْبُدُوا۟
என்று/வணங்குங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
wa-ij'tanibū
وَٱجْتَنِبُوا۟
இன்னும் விலகுங்கள், து£ரமாகுங்கள்
l-ṭāghūta
ٱلطَّٰغُوتَۖ
ஷைத்தானை விட்டு
famin'hum
فَمِنْهُم
அவர்களில்
man
مَّنْ
எவர்
hadā
هَدَى
நேர்வழி காட்டினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
wamin'hum
وَمِنْهُم
இன்னும் அவர்களில்
man
مَّنْ
எவர்
ḥaqqat
حَقَّتْ
உறுதியாகி விட்டது
ʿalayhi
عَلَيْهِ
அவர் மீது
l-ḍalālatu
ٱلضَّلَٰلَةُۚ
வழிகேடு
fasīrū
فَسِيرُوا۟
ஆகவே சுற்றுங்கள்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
fa-unẓurū
فَٱنظُرُوا۟
இன்னும் பாருங்கள்
kayfa
كَيْفَ
எவ்வாறு
kāna ʿāqibatu
كَانَ عَٰقِبَةُ
இருந்தது/முடிவு
l-mukadhibīna
ٱلْمُكَذِّبِينَ
பொய்ப்பிப்பவர்களின்
(பூமியின் பல பாகங்களிலும் வசித்திருந்த) ஒவ்வொரு வகுப்பினருக்கும் நிச்சயமாக நாம் தூதரை அனுப்பியிருக்கிறோம். (அத்தூதர்கள் அவர்களை நோக்கி) "அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். (வழி கெடுக்கும்) ஷைத்தான்களிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் என்(று கூறிச் சென்)றார்கள். அல்லாஹ்வின் நேர்வழியை அடைந்தவர்களும் அவர்களில் உண்டு; வழி கேட்டிலேயே நிலைபெற்றோரும் அவர்களில் உண்டு. ஆகவே, நீங்கள் பூமியில் சுற்றித் திரிந்து (நபிமார்களைப்) பொய்யாக்கிய வர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைப் பாருங்கள். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௩௬)
Tafseer
௩௭

اِنْ تَحْرِصْ عَلٰى هُدٰىهُمْ فَاِنَّ اللّٰهَ لَا يَهْدِيْ مَنْ يُّضِلُّ وَمَا لَهُمْ مِّنْ نّٰصِرِيْنَ ٣٧

in taḥriṣ
إِن تَحْرِصْ
நீர் பேராசைப்பட்டால்
ʿalā
عَلَىٰ
மீது
hudāhum
هُدَىٰهُمْ
அவர்கள் நேர்வழி காட்டப்படுவது
fa-inna l-laha
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
lā yahdī
لَا يَهْدِى
நேர்வழி செலுத்த மாட்டான்
man
مَن
எவரை
yuḍillu
يُضِلُّۖ
வழிகெடுப்பார்
wamā
وَمَا
இல்லை
lahum
لَهُم
அவர்களுக்கு
min nāṣirīna
مِّن نَّٰصِرِينَ
உதவியாளர்களில் எவரும்
(நபியே!) அவர்கள் நேரான வழியில் செல்ல வேண்டுமென்று நீங்கள் எவ்வளவு விரும்பியபோதிலும் (அவ்வழிக்கு அவர்கள் வரமாட்டார்கள். ஏனென்றால், மன முரண்டாக) எவர்கள் தவறான வழியில் செல்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை; அவர்களுக்கு உதவி செய்பவர்களும் ஒருவருமில்லை. ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௩௭)
Tafseer
௩௮

وَاَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَيْمَانِهِمْۙ لَا يَبْعَثُ اللّٰهُ مَنْ يَّمُوْتُۗ بَلٰى وَعْدًا عَلَيْهِ حَقًّا وَّلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَۙ ٣٨

wa-aqsamū
وَأَقْسَمُوا۟
சத்தியம் செய்தனர்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ் மீது
jahda aymānihim
جَهْدَ أَيْمَٰنِهِمْۙ
அவர்கள் மிக உறுதியாக சத்தியமிடுதல்
lā yabʿathu
لَا يَبْعَثُ
எழுப்ப மாட்டான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
man
مَن
எவர்
yamūtu
يَمُوتُۚ
இறக்கின்றார்
balā
بَلَىٰ
அவ்வாறன்று
waʿdan
وَعْدًا
வாக்கு
ʿalayhi
عَلَيْهِ
அவன் மீது
ḥaqqan
حَقًّا
கடமையானது
walākinna
وَلَٰكِنَّ
எனினும்
akthara
أَكْثَرَ
அதிகமானவர்(கள்)
l-nāsi
ٱلنَّاسِ
மக்களில்
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்
(நபியே!) இறந்தவர்களுக்கு அல்லாஹ் உயிர் கொடுத்து எழுப்ப மாட்டான் என்று இந்நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வின் மீதே மிக்க உறுதியான சத்தியம் செய்து கூறுகின்றனர். அவ்வாறன்று; ("உங்களை உயிர்கொடுத்து எழுப்புவேன்" என்று) அவன் கூறிய வாக்கு முற்றிலும் உண்மையானதே! எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதனை) அறிந்துகொள்ள மாட்டார்கள். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௩௮)
Tafseer
௩௯

لِيُبَيِّنَ لَهُمُ الَّذِيْ يَخْتَلِفُوْنَ فِيْهِ وَلِيَعْلَمَ الَّذِيْنَ كَفَرُوْٓا اَنَّهُمْ كَانُوْا كٰذِبِيْنَ ٣٩

liyubayyina
لِيُبَيِّنَ
தெளிவுபடுத்துவதற்காக
lahumu alladhī
لَهُمُ ٱلَّذِى
அவர்களுக்கு/எதை
yakhtalifūna
يَخْتَلِفُونَ
முரண்படுகின்றனர்
fīhi
فِيهِ
அதில்
waliyaʿlama
وَلِيَعْلَمَ
இன்னும் அறிவதற்காக
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوٓا۟
நிராகரித்தவர்கள்
annahum kānū
أَنَّهُمْ كَانُوا۟
நிச்சயமாக அவர்கள்/இருந்தனர்
kādhibīna
كَٰذِبِينَ
பொய்யர்களாக
(இம்மையில்) அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருந்ததை அவர்களுக்கு அல்லாஹ் தெளிவாக அறிவிப்பதற்காகவும், நிராகரிப்பவர்கள் கூறிக்கொண்டிருந்த பொய்யை அவர்கள் நன்கறிந்து கொள்வதற்காகவும் (மறுமையில் அவர்கள் உயிர்ப்பிக்கப் படுவார்கள். அவ்வாறு அவர்களை எழுப்புவது நமக்கு ஒரு பொருட்டன்று.) ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௩௯)
Tafseer
௪௦

اِنَّمَا قَوْلُنَا لِشَيْءٍ اِذَآ اَرَدْنٰهُ اَنْ نَّقُوْلَ لَهٗ كُنْ فَيَكُوْنُ ࣖ ٤٠

innamā qawlunā
إِنَّمَا قَوْلُنَا
நம் கூற்றெல்லாம்
lishayin
لِشَىْءٍ
ஒரு பொருளுக்கு
idhā aradnāhu
إِذَآ أَرَدْنَٰهُ
நாம் நாடினால்/அதை
an naqūla
أَن نَّقُولَ
நாம் கூறுவது
lahu
لَهُۥ
அதற்கு
kun
كُن
ஆகு
fayakūnu
فَيَكُونُ
ஆகிவிடும்
(ஏனென்றால்) நாம் யாதொரு வஸ்துவை (உண்டு பண்ண)க் கருதினால், அதற்காக நாம் கூறுவதெல்லாம் "ஆகுக!" என்பதுதான். உடனே (அது) ஆகிவிடுகிறது. ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௪௦)
Tafseer