Skip to content

ஸூரா ஸூரத்துந் நஹ்ல் - Page: 3

An-Nahl

(an-Naḥl)

௨௧

اَمْوَاتٌ غَيْرُ اَحْيَاۤءٍ ۗوَمَا يَشْعُرُوْنَۙ اَيَّانَ يُبْعَثُوْنَ ࣖ ٢١

amwātun
أَمْوَٰتٌ
இறந்தவர்கள்
ghayru
غَيْرُ
அல்லர்
aḥyāin
أَحْيَآءٍۖ
உயிருள்ளவர்கள்
wamā yashʿurūna
وَمَا يَشْعُرُونَ
இன்னும் அறியமாட்டார்கள்
ayyāna
أَيَّانَ
எப்போது
yub'ʿathūna
يُبْعَثُونَ
எழுப்பப்படுவார்கள்
(அன்றி அவை) உயிருள்ளவைகளுமல்ல; உயிரற்றவைகளே. (இறந்தவர்கள்) எப்பொழுது (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவை அறியாது. (ஆகவே, அவை இவர்களுக்கு என்ன பலனளித்துவிடும்?) ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௨௧)
Tafseer
௨௨

اِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ ۚفَالَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ قُلُوْبُهُمْ مُّنْكِرَةٌ وَّهُمْ مُّسْتَكْبِرُوْنَ ٢٢

ilāhukum
إِلَٰهُكُمْ
(வணங்கத் தகுதியான) உங்கள் இறைவன்
ilāhun
إِلَٰهٌ
இறைவன்
wāḥidun
وَٰحِدٌۚ
ஒரே ஒருவன்
fa-alladhīna
فَٱلَّذِينَ
எவர்கள்
lā yu'minūna
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
bil-ākhirati
بِٱلْءَاخِرَةِ
மறுமையை
qulūbuhum
قُلُوبُهُم
உள்ளங்கள்/அவர்களுடைய
munkiratun
مُّنكِرَةٌ
நிராகரிக்கின்றன
wahum
وَهُم
இன்னும் அவர்கள்
mus'takbirūna
مُّسْتَكْبِرُونَ
பெருமையடிக்கிறார்கள்
உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஓர் இறைவன்தான். ஆகவே, எவர்கள் மறுமையை நம்பவில்லையோ அவர்களுடைய உள்ளங்கள் (எதைக் கூறியபோதிலும்) நிராகரிப்பவைகளாகவே இருக்கின்றன. அன்றி, அவர்கள் மிகக் கர்வம்கொண்டு பெருமை யடிப்பவர்களாகவும் இருக்கின்றனர். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௨௨)
Tafseer
௨௩

لَا جَرَمَ اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا يُسِرُّوْنَ وَمَا يُعْلِنُوْنَ ۗاِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْتَكْبِرِيْنَ ٢٣

lā jarama
لَا جَرَمَ
சந்தேகமே இல்லை
anna l-laha
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
yaʿlamu
يَعْلَمُ
அறிவான்
mā yusirrūna
مَا يُسِرُّونَ
எதை/மறைக்கிறார்கள்
wamā yuʿ'linūna
وَمَا يُعْلِنُونَۚ
இன்னும் எதை/வெளிப் படுத்துகிறார்கள்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
lā yuḥibbu
لَا يُحِبُّ
நேசிக்க மாட்டான்
l-mus'takbirīna
ٱلْمُسْتَكْبِرِينَ
பெருமையடிப்ப வர்களை
நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் மறைத்துக் கொள்வதையும் (அதற்கு மாறாக) அவர்கள் வெளிப்படுத்துவதையும் நன்கறிவான் என்பதில் யாதொரு சந்தேகமுமில்லை. நிச்சயமாக அவன் கர்வம் கொண்ட (இ)வர்களை விரும்புவதில்லை. ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௨௩)
Tafseer
௨௪

وَاِذَا قِيْلَ لَهُمْ مَّاذَآ اَنْزَلَ رَبُّكُمْ ۙقَالُوْٓا اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَ ٢٤

wa-idhā qīla
وَإِذَا قِيلَ
கூறப்பட்டால்
lahum
لَهُم
அவர்களிடம்
mādhā
مَّاذَآ
என்ன
anzala
أَنزَلَ
இறக்கினான்
rabbukum
رَبُّكُمْۙ
உங்கள் இறைவன்
qālū
قَالُوٓا۟
கூறினர்
asāṭīru
أَسَٰطِيرُ
கட்டுக் கதைகள்
l-awalīna
ٱلْأَوَّلِينَ
முன்னோரின்
(நபியே! இந்தக் குர்ஆனைக் குறிப்பிட்டு அதில்) "உங்களுடைய இறைவன் என்ன இறக்கினான்" என்று அவர்களிடம் கேட்கப்பட்டால் "(இது,) முன்னுள்ளோரின் கட்டுக்கதைதான்" என்று கூறுகின்றனர். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௨௪)
Tafseer
௨௫

لِيَحْمِلُوْٓا اَوْزَارَهُمْ كَامِلَةً يَّوْمَ الْقِيٰمَةِ ۙوَمِنْ اَوْزَارِ الَّذِيْنَ يُضِلُّوْنَهُمْ بِغَيْرِ عِلْمٍ ۗ اَلَا سَاۤءَ مَا يَزِرُوْنَ ࣖ ٢٥

liyaḥmilū
لِيَحْمِلُوٓا۟
இவர்கள்சுமப்பதற்காக
awzārahum
أَوْزَارَهُمْ
தங்கள் (பாவச்)சுமைகளை
kāmilatan
كَامِلَةً
முழுமையாக
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِۙ
மறுமை நாளில்
wamin
وَمِنْ
இன்னும் இருந்து
awzāri
أَوْزَارِ
சுமைகள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yuḍillūnahum
يُضِلُّونَهُم
வழிகெடுக்கின்றனர்/அவர்களை
bighayri
بِغَيْرِ
இன்றி
ʿil'min
عِلْمٍۗ
கல்வி
alā
أَلَا
அறிந்துகொள்ளுங்கள்!
sāa
سَآءَ
மிகக் கெட்டது
mā yazirūna
مَا يَزِرُونَ
எது/சுமப்பார்கள்
மறுமை நாளில் தங்கள் பாவச்சுமையை இவர்கள் சுமப்பதுடன், அறிவின்றி இவர்கள் வழிகெடுத்த மற்றவர்களின் பாவச்சுமையையும் இவர்களே சுமப்பார்கள். (இவ்வாறு இருவரின் பாவச்சுமையை) இவர்களே சுமப்பது மிகக் கெட்டதல்லவா? ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௨௫)
Tafseer
௨௬

قَدْ مَكَرَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ فَاَتَى اللّٰهُ بُنْيَانَهُمْ مِّنَ الْقَوَاعِدِ فَخَرَّ عَلَيْهِمُ السَّقْفُ مِنْ فَوْقِهِمْ وَاَتٰىهُمُ الْعَذَابُ مِنْ حَيْثُ لَا يَشْعُرُوْنَ ٢٦

qad
قَدْ
திட்டமாக
makara
مَكَرَ
சூழ்ச்சி செய்தனர்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
min qablihim
مِن قَبْلِهِمْ
அவர்களுக்கு முன்னர்
fa-atā
فَأَتَى
ஆகவே வந்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
bun'yānahum
بُنْيَٰنَهُم
கட்டடத்திற்கு/அவர்களின்
mina
مِّنَ
இருந்து
l-qawāʿidi
ٱلْقَوَاعِدِ
அடித்தளங்கள்
fakharra
فَخَرَّ
விழுந்தது
ʿalayhimu
عَلَيْهِمُ
அவர்கள் மீது
l-saqfu
ٱلسَّقْفُ
முகடு
min
مِن
இருந்து
fawqihim
فَوْقِهِمْ
அவர்களுக்கு மேல்
wa-atāhumu
وَأَتَىٰهُمُ
இன்னும் வந்தது/அவர்களுக்கு
l-ʿadhābu
ٱلْعَذَابُ
வேதனை
min ḥaythu
مِنْ حَيْثُ
விதத்தில்
lā yashʿurūna
لَا يَشْعُرُونَ
அறிய (உணர) மாட்டார்கள்
இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (இவ்வாறே) நிச்சயமாக சூழ்ச்சி செய்து கொண்டிருந்தார்கள். ஆகவே, அல்லாஹ் அவர்களின் (சூழ்ச்சிக்) கட்டடத்தை அடியோடு பெயர்த்து அவர்கள் (தலை) மீதே அதன் முகடு விழும்படி செய்தான். அவர்கள் அறிந்துகொள்ள முடியாத விதத்தில் வேதனையும் அவர்களை வந்தடைந்தது. ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௨௬)
Tafseer
௨௭

ثُمَّ يَوْمَ الْقِيٰمَةِ يُخْزِيْهِمْ وَيَقُوْلُ اَيْنَ شُرَكَاۤءِيَ الَّذِيْنَ كُنْتُمْ تُشَاۤقُّوْنَ فِيْهِمْ ۗقَالَ الَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ اِنَّ الْخِزْيَ الْيَوْمَ وَالسُّوْۤءَ عَلَى الْكٰفِرِيْنَۙ ٢٧

thumma
ثُمَّ
பிறகு
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
yukh'zīhim
يُخْزِيهِمْ
இழிவு படுத்துவான்/அவர்களை
wayaqūlu
وَيَقُولُ
கூறுவான்
ayna
أَيْنَ
எங்கே?
shurakāiya
شُرَكَآءِىَ
என் இணைகள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kuntum
كُنتُمْ
இருந்தீர்கள்
tushāqqūna
تُشَٰٓقُّونَ
தர்க்கிப்பீர்கள்
fīhim
فِيهِمْۚ
அவர்கள் விஷயத்தில்
qāla
قَالَ
கூறுவார்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ūtū
أُوتُوا۟
கொடுக்கப்பட்டனர்
l-ʿil'ma
ٱلْعِلْمَ
கல்வி
inna
إِنَّ
நிச்சயமாக
l-khiz'ya
ٱلْخِزْىَ
இழிவு
l-yawma
ٱلْيَوْمَ
இன்று
wal-sūa
وَٱلسُّوٓءَ
இன்னும் தண்டனை
ʿalā l-kāfirīna
عَلَى ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பவர்கள் மீது
பின்னர், மறுமை நாளிலோ அவன் அவர்களை இழிவுபடுத்தி "நீங்கள் (உங்கள் தெய்வங்களை) எனக்கு இணையானவை என(க் கூறி நம்பிக்கையாளர்களுடன்) நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்தீர்களே அவை எங்கே?" என்று கேட்பான். அச்சமயம் (இதனை) அறிந்திருந்த (நம்பிக்கை கொண்ட)வர்கள் "இன்றைய தினம் இழிவும், வேதனையும் நிச்சயமாக நிராகரித்துக் கொண்டிருந்தவர்கள் மீதுதான்" என்று கூறுவார்கள். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௨௭)
Tafseer
௨௮

الَّذِيْنَ تَتَوَفّٰىهُمُ الْمَلٰۤىِٕكَةُ ظَالِمِيْٓ اَنْفُسِهِمْ ۖفَاَلْقَوُا السَّلَمَ مَا كُنَّا نَعْمَلُ مِنْ سُوْۤءٍ ۗبَلٰىٓ اِنَّ اللّٰهَ عَلِيْمٌۢ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ٢٨

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
tatawaffāhumu
تَتَوَفَّىٰهُمُ
உயிர் கைப்பற்றுகின்றனர்/அவர்களை
l-malāikatu
ٱلْمَلَٰٓئِكَةُ
வானவர்கள்
ẓālimī
ظَالِمِىٓ
தீங்கிழைத்தவர்களாக
anfusihim
أَنفُسِهِمْۖ
தங்களுக்குத் தாமே
fa-alqawū l-salama
فَأَلْقَوُا۟ ٱلسَّلَمَ
பணிந்து விட்டார்கள்
mā kunnā
مَا كُنَّا
நாங்கள் இருக்கவில்லை
naʿmalu
نَعْمَلُ
செய்வோம்
min sūin
مِن سُوٓءٍۭۚ
ஒரு தீமையையும்
balā
بَلَىٰٓ
அவ்வாறல்ல
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்
bimā kuntum taʿmalūna
بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
எவற்றை/இருந்தீர்கள்/செய்வீர்கள்
தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட இவர்களுடைய உயிரை மலக்குகள் கைப்பற்றும்பொழுது (அவர்கள்) "நாங்கள் யாதொரு குற்றமும் செய்யவில்லை" என்று (கூறித் தங்களைத் துன்புறுத்த வேண்டாமென மலக்குகளிடம்) சமாதானத்தைக் கோருவார்கள். (அதற்கு மலக்குகள்) "அன்று! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நன்கறிந்தே இருக்கிறான்" (என்று பதிலளிப்பார்கள்.) ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௨௮)
Tafseer
௨௯

فَادْخُلُوْٓا اَبْوَابَ جَهَنَّمَ خٰلِدِيْنَ فِيْهَا ۗفَلَبِئْسَ مَثْوَى الْمُتَكَبِّرِيْنَ ٢٩

fa-ud'khulū
فَٱدْخُلُوٓا۟
ஆகவே நுழையுங்கள்
abwāba
أَبْوَٰبَ
வாசல்களில்
jahannama
جَهَنَّمَ
நரகத்தின்
khālidīna
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்களாக
fīhā
فِيهَاۖ
அதில்
falabi'sa
فَلَبِئْسَ
கெட்டுவிட்டது
mathwā
مَثْوَى
தங்குமிடம்
l-mutakabirīna
ٱلْمُتَكَبِّرِينَ
பெருமையடிப்பவர்களின்
(பின்னும் இவர்களை நோக்கி) "நரகத்தின் வாயில்களில் நீங்கள் புகுந்து என்றென்றுமே அதில் நிலைத்து விடுங்கள்" (என்று கூறுவார்கள்.) பெருமை அடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் மகா கெட்டது. ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௨௯)
Tafseer
௩௦

۞ وَقِيْلَ لِلَّذِيْنَ اتَّقَوْا مَاذَآ اَنْزَلَ رَبُّكُمْ ۗقَالُوْا خَيْرًا ۚلِلَّذِيْنَ اَحْسَنُوْا فِيْ هٰذِهِ الدُّنْيَا حَسَنَةٌ ۗوَلَدَارُ الْاٰخِرَةِ خَيْرٌ ۗوَلَنِعْمَ دَارُ الْمُتَّقِيْنَۙ ٣٠

waqīla
وَقِيلَ
இன்னும் கூறப்பட்டது
lilladhīna
لِلَّذِينَ
எவர்களுக்கு
ittaqaw
ٱتَّقَوْا۟
அஞ்சினார்கள்
mādhā
مَاذَآ
என்ன?
anzala
أَنزَلَ
இறக்கினான்
rabbukum
رَبُّكُمْۚ
உங்கள் இறைவன்
qālū
قَالُوا۟
கூறினார்கள்
khayran
خَيْرًاۗ
நன்மையை
lilladhīna
لِّلَّذِينَ
எவர்களுக்கு
aḥsanū
أَحْسَنُوا۟
நல்லறம் புரிந்தனர்
fī hādhihi
فِى هَٰذِهِ
இந்த
l-dun'yā
ٱلدُّنْيَا
உலகில்
ḥasanatun
حَسَنَةٌۚ
நன்மை
waladāru
وَلَدَارُ
வீடுதான்
l-ākhirati
ٱلْءَاخِرَةِ
மறுமையின்
khayrun
خَيْرٌۚ
மிக மேலானது
walaniʿ'ma
وَلَنِعْمَ
மிகச் சிறந்தது
dāru
دَارُ
வீடு
l-mutaqīna
ٱلْمُتَّقِينَ
அஞ்சுபவர்களின்
இறை அச்சமுடையவர்களை நோக்கி (இக்குர்ஆனைப் பற்றி) "உங்கள் இறைவன் என்ன இறக்கிவைத்தான்" என்று கேட்கப்பட்டால், அதற்கவர்கள், "நன்மையையே (இறக்கி வைத்தான்)" என்று கூறுவார்கள். (ஏனென்றால்) நன்மை செய்தவர்களுக்கு இவ்வுலகிலும் நன்மைதான். (அவர்களுடைய) மறுமையின் வீடும் மிக்க மேலானது. இறை அச்சமுடைய வர்களின் வீடு எவ்வளவு நேர்த்தியானது! ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௩௦)
Tafseer