Skip to content

ஸூரா ஸூரத்துந் நஹ்ல் - Page: 2

An-Nahl

(an-Naḥl)

௧௧

يُنْۢبِتُ لَكُمْ بِهِ الزَّرْعَ وَالزَّيْتُوْنَ وَالنَّخِيْلَ وَالْاَعْنَابَ وَمِنْ كُلِّ الثَّمَرٰتِۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَةً لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ ١١

yunbitu
يُنۢبِتُ
முளைக்கவைக்கிறான்
lakum
لَكُم
உங்களுக்கு
bihi
بِهِ
அதைக் கொண்டு
l-zarʿa
ٱلزَّرْعَ
பயிர்களை
wal-zaytūna
وَٱلزَّيْتُونَ
இன்னும் ஜைதூனை
wal-nakhīla
وَٱلنَّخِيلَ
இன்னும் பேரீச்ச மரத்தை
wal-aʿnāba
وَٱلْأَعْنَٰبَ
இன்னும் திராட்சைகளை
wamin
وَمِن
இன்னும் இருந்து
kulli
كُلِّ
எல்லா
l-thamarāti
ٱلثَّمَرَٰتِۗ
கனிவர்க்கங்கள்
inna
إِنَّ
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
இவற்றில்
laāyatan
لَءَايَةً
அத்தாட்சி
liqawmin
لِّقَوْمٍ
மக்களுக்கு
yatafakkarūna
يَتَفَكَّرُونَ
சிந்திக்கின்றார்கள்
அதனைக் கொண்டே விவசாயப் பயிர்களையும், ஜைத்தூன், பேரீச்சை, திராட்சை ஆகிய எல்லா கனிவர்க்கங்களையும் அவன் உங்களுக்கு உற்பத்தி செய்கிறான். நிச்சயமாக இதில் சிந்திக்கக் கூடிய மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௧)
Tafseer
௧௨

وَسَخَّرَ لَكُمُ الَّيْلَ وَالنَّهَارَۙ وَالشَّمْسَ وَالْقَمَرَ ۗوَالنُّجُوْمُ مُسَخَّرٰتٌۢ بِاَمْرِهٖ ۗاِنَّ فِي ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّعْقِلُوْنَۙ ١٢

wasakhara
وَسَخَّرَ
இன்னும் வசப்படுத்தினான்
lakumu
لَكُمُ
உங்களுக்கு
al-layla
ٱلَّيْلَ
இரவை
wal-nahāra
وَٱلنَّهَارَ
இன்னும் பகலை
wal-shamsa
وَٱلشَّمْسَ
இன்னும் சூரியனை
wal-qamara
وَٱلْقَمَرَۖ
இன்னும் சந்திரனை
wal-nujūmu
وَٱلنُّجُومُ
இன்னும் நட்சத்திரங்கள்
musakharātun
مُسَخَّرَٰتٌۢ
வசப்படுத்தப்பட்டவை
bi-amrihi
بِأَمْرِهِۦٓۗ
அவனுடைய கட்டளையைக் கொண்டு
inna
إِنَّ
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
இவற்றில்
laāyātin
لَءَايَٰتٍ
பல அத்தாட்சிகள்
liqawmin
لِّقَوْمٍ
மக்களுக்கு
yaʿqilūna
يَعْقِلُونَ
சிந்தித்து புரிகின்றனர்
அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்களுக்காக (படைத்துத்) தன் அதிகாரத்துக்குள் வைத்திருக்கிறான். (அவ்வாறே) நட்சத்திரங்கள் அனைத்தும் அவனுடைய கட்டளைக்கு உட்பட்டவையாகவே இருக்கின்றன. நிச்சயமாக இதிலும் சிந்தித்து அறியக்கூடிய மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௨)
Tafseer
௧௩

وَمَا ذَرَاَ لَكُمْ فِى الْاَرْضِ مُخْتَلِفًا اَلْوَانُهٗ ۗاِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَةً لِّقَوْمٍ يَّذَّكَّرُوْنَ ١٣

wamā
وَمَا
இன்னும் எது?
dhara-a
ذَرَأَ
படைத்தான்
lakum
لَكُمْ
உங்களுக்காக
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
mukh'talifan
مُخْتَلِفًا
மாறுபட்டது
alwānuhu
أَلْوَٰنُهُۥٓۗ
அதன் நிறங்கள்
inna
إِنَّ
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
இதில்
laāyatan
لَءَايَةً
ஓர் அத்தாட்சி
liqawmin
لِّقَوْمٍ
மக்களுக்கு
yadhakkarūna
يَذَّكَّرُونَ
நல்லுபதேசம் பெறுகின்றனர்
பூமியில் உங்களுக்காக அவன் படைத்திருப்பவைகள் விதவிதமான நிறங்களும் (வகைகளும்) உடையவைகளாக இருக்கின்றன. நல்லுணர்ச்சி பெறும் மக்களுக்கு நிச்சயமாக இதிலும் ஓர் அத்தாட்சி இருக்கின்றது. ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௩)
Tafseer
௧௪

وَهُوَ الَّذِيْ سَخَّرَ الْبَحْرَ لِتَأْكُلُوْا مِنْهُ لَحْمًا طَرِيًّا وَّتَسْتَخْرِجُوْا مِنْهُ حِلْيَةً تَلْبَسُوْنَهَاۚ وَتَرَى الْفُلْكَ مَوَاخِرَ فِيْهِ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ١٤

wahuwa alladhī
وَهُوَ ٱلَّذِى
அவன்தான்
sakhara
سَخَّرَ
வசப்படுத்தினான்
l-baḥra
ٱلْبَحْرَ
கடலை
litakulū
لِتَأْكُلُوا۟
நீங்கள் புசிப்பதற்காக
min'hu
مِنْهُ
அதிலிருந்து
laḥman
لَحْمًا
ஒரு மாமிசத்தை
ṭariyyan
طَرِيًّا
பசுமையானது, மென்மையானது, புதியது, சதையுடையது
watastakhrijū
وَتَسْتَخْرِجُوا۟
இன்னும் வெளியெடுப்பதற்காக
min'hu
مِنْهُ
அதிலிருந்து
ḥil'yatan
حِلْيَةً
ஆபரணங்களை
talbasūnahā
تَلْبَسُونَهَا
அணிகிறீர்கள் / அவற்றை
watarā
وَتَرَى
இன்னும் பார்க்கிறீர்
l-ful'ka
ٱلْفُلْكَ
கப்பல்களை
mawākhira
مَوَاخِرَ
பிளந்து செல்பவையாக
fīhi
فِيهِ
அதில்
walitabtaghū
وَلِتَبْتَغُوا۟
இன்னும் நீ தேடுவதற்காக
min faḍlihi
مِن فَضْلِهِۦ
அவனுடைய அருளை
walaʿallakum tashkurūna
وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
இன்னும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
அவன்தான் நீங்கள் மீன்களைப் (பிடித்துச் சமைத்துப்) புசிக்கவும், நீங்கள் ஆபரணமாக அணியக்கூடிய பொருள்களை எடுத்துக்கொள்ளவும் கடலை (உங்களுக்கு) வசதியாக்கித் தந்தான். (பல இடங்களுக்கும் சென்று வர்த்தகத்தின் மூலம்) இறைவனின் அருளை நீங்கள் தேடிக்கொள்ளும் பொருட்டு (கடலில் பயணம் செய்யும்பொழுது) கப்பல் கடலைப் பிளந்துகொண்டு செல்வதை நீங்கள் காண்கிறீர்கள். (இதற்காக இறைவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்திக் கொண்டிருப்பீர்களாக! ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௪)
Tafseer
௧௫

وَاَلْقٰى فِى الْاَرْضِ رَوَاسِيَ اَنْ تَمِيْدَ بِكُمْ وَاَنْهٰرًا وَّسُبُلًا لَّعَلَّكُمْ تَهْتَدُوْنَۙ ١٥

wa-alqā
وَأَلْقَىٰ
அவன் அமைத்தான்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
rawāsiya
رَوَٰسِىَ
மலைகளை
an tamīda
أَن تَمِيدَ
அசையாதிருப்பதற்காக
bikum
بِكُمْ
உங்களைக் கொண்டு
wa-anhāran
وَأَنْهَٰرًا
இன்னும் நதிகளை
wasubulan
وَسُبُلًا
இன்னும் பாதைகளை
laʿallakum tahtadūna
لَّعَلَّكُمْ تَهْتَدُونَ
நீங்கள் வழி பெறுவதற்காக
உங்களைச் சுமந்திருக்கும் பூமி அசையாதிருப்பதற்காகப் (பெரிய) பெரிய மலைகளை அதன் மீது வைத்தான். நீங்கள் (உங்கள் போக்குவரத்துக்கு) ஆறுகளையும் நேரான வழிகளையும் அறிவதற்காகப் பல பாதைகளை அமைத்தான். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௫)
Tafseer
௧௬

وَعَلٰمٰتٍۗ وَبِالنَّجْمِ هُمْ يَهْتَدُوْنَ ١٦

waʿalāmātin
وَعَلَٰمَٰتٍۚ
இன்னும் பல அடையாளங்களை
wabil-najmi hum
وَبِٱلنَّجْمِ هُمْ
இன்னும் நட்சத்திரங்களைக் கொண்டு/அவர்கள்
yahtadūna
يَهْتَدُونَ
வழி பெறுகின்றனர்
(பகலில் திசைகளை அறிவிக்கக்கூடிய மலைகள் போன்ற) அடையாளங்களைக் கொண்டும் (இரவில்) நட்சத்திரங்களைக் கொண்டும் (பயணிகள்) தங்கள் வழியை அறிந்து கொள்கின்றனர். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௬)
Tafseer
௧௭

اَفَمَنْ يَّخْلُقُ كَمَنْ لَّا يَخْلُقُۗ اَفَلَا تَذَكَّرُوْنَ ١٧

afaman
أَفَمَن
ஆவானா?/எவன்
yakhluqu
يَخْلُقُ
படைப்பான்
kaman
كَمَن
எவனைப் போல்
lā yakhluqu
لَّا يَخْلُقُۗ
படைக்கமாட்டான்
afalā tadhakkarūna
أَفَلَا تَذَكَّرُونَ
நீங்கள் நல்லுபதேசம் பெற வேண்டாமா?
(இணைவைத்து வணங்குபவர்களே! இவை அனைத்தையும்) படைத்த வல்லவன் (நீங்கள் வணங்கும்) ஒன்றையுமே படைக்க முடியாதவைகளைப் போலாவானா! இவ்வளவு கூட நீங்கள் கவனிக்க வேண்டாமா? ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௭)
Tafseer
௧௮

وَاِنْ تَعُدُّوْا نِعْمَةَ اللّٰهِ لَا تُحْصُوْهَا ۗاِنَّ اللّٰهَ لَغَفُوْرٌ رَّحِيْمٌ ١٨

wa-in taʿuddū
وَإِن تَعُدُّوا۟
நீங்கள் எண்ணினால்
niʿ'mata l-lahi
نِعْمَةَ ٱللَّهِ
அருளை/ அல்லாஹ்வின்
lā tuḥ'ṣūhā
لَا تُحْصُوهَآۗ
நீங்கள் எண்ணி முடிக்கமாட்டீர்கள்/அதை
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
laghafūrun
لَغَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
மகா கருணையாளன்
அல்லாஹ்வின் அரு(ள்க)ளை நீங்கள் கணக்கிட்டால் அவற்றை உங்களால் எண்ணிட முடியாது. நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், பெரும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௮)
Tafseer
௧௯

وَاللّٰهُ يَعْلَمُ مَا تُسِرُّوْنَ وَمَا تُعْلِنُوْنَ ١٩

wal-lahu yaʿlamu
وَٱللَّهُ يَعْلَمُ
அல்லாஹ் நன்கறிவான்
mā tusirrūna
مَا تُسِرُّونَ
எதை/மறைக்கிறீர்கள்
wamā tuʿ'linūna
وَمَا تُعْلِنُونَ
எதை/வெளிப்படுத்துகிறீர்கள்
நீங்கள் மனதில் மறைத்துக் கொள்வதையும் (அதற்கு மாறாக) நீங்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௯)
Tafseer
௨௦

وَالَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَا يَخْلُقُوْنَ شَيْـًٔا وَّهُمْ يُخْلَقُوْنَۗ ٢٠

wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
yadʿūna
يَدْعُونَ
அழைக்கிறார்கள்
min dūni
مِن دُونِ
அன்றி
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
lā yakhluqūna
لَا يَخْلُقُونَ
படைக்க மாட்டார்கள்
shayan
شَيْـًٔا
எதையும்
wahum
وَهُمْ
அவர்களோ
yukh'laqūna
يُخْلَقُونَ
படைக்கப்படுகிறார்கள்
(நபியே!) அல்லாஹ்வையன்றி எவற்றை அவர்கள் (இறைவனென) அழைக்கின்றார்களோ அவற்றால் யாதொன்றையும் படைக்க முடியாது. அவைகளும் (அவனால்) படைக்கப் பட்டவைகளாகும். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௨௦)
Tafseer