Skip to content

ஸூரா ஸூரத்துந் நஹ்ல் - Page: 10

An-Nahl

(an-Naḥl)

௯௧

وَاَوْفُوْا بِعَهْدِ اللّٰهِ اِذَا عَاهَدْتُّمْ وَلَا تَنْقُضُوا الْاَيْمَانَ بَعْدَ تَوْكِيْدِهَا وَقَدْ جَعَلْتُمُ اللّٰهَ عَلَيْكُمْ كَفِيْلًا ۗاِنَّ اللّٰهَ يَعْلَمُ مَا تَفْعَلُوْنَ ٩١

wa-awfū
وَأَوْفُوا۟
முழுமையாக நிறைவேற்றுங்கள்
biʿahdi
بِعَهْدِ
ஒப்பந்தத்தை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
idhā ʿāhadttum
إِذَا عَٰهَدتُّمْ
நீங்கள்ஒப்பந்தம்செய்தால்
walā tanquḍū
وَلَا تَنقُضُوا۟
முறிக்காதீர்கள்
l-aymāna
ٱلْأَيْمَٰنَ
சத்தியங்களை
baʿda
بَعْدَ
பின்பு
tawkīdihā
تَوْكِيدِهَا
அவற்றை உறுதிபடுத்துவது
waqad jaʿaltumu
وَقَدْ جَعَلْتُمُ
ஆக்கிவிட்டீர்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
kafīlan
كَفِيلًاۚ
பொறுப்பாளனாக
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
yaʿlamu
يَعْلَمُ
அறிவான்
mā tafʿalūna
مَا تَفْعَلُونَ
எதை/செய்வீர்கள்
நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றுங்கள். அல்லாஹ்வை சாட்சியாக வைத்து சத்தியம் செய்து அதனை உறுதிப்படுத்தி பின்னர், அந்தச் சத்தியத்தை நீங்கள் முறித்துவிடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய செயலை நன்கறிவான். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௯௧)
Tafseer
௯௨

وَلَا تَكُوْنُوْا كَالَّتِيْ نَقَضَتْ غَزْلَهَا مِنْۢ بَعْدِ قُوَّةٍ اَنْكَاثًاۗ تَتَّخِذُوْنَ اَيْمَانَكُمْ دَخَلًا ۢ بَيْنَكُمْ اَنْ تَكُوْنَ اُمَّةٌ هِيَ اَرْبٰى مِنْ اُمَّةٍ ۗاِنَّمَا يَبْلُوْكُمُ اللّٰهُ بِهٖۗ وَلَيُبَيِّنَنَّ لَكُمْ يَوْمَ الْقِيٰمَةِ مَا كُنْتُمْ فِيْهِ تَخْتَلِفُوْنَ ٩٢

walā takūnū
وَلَا تَكُونُوا۟
ஆகிவிடாதீர்கள்
ka-allatī
كَٱلَّتِى
எவள்/போன்று
naqaḍat
نَقَضَتْ
பிரித்தாள்
ghazlahā
غَزْلَهَا
தான் நெய்த நூலை
min baʿdi quwwatin
مِنۢ بَعْدِ قُوَّةٍ
பின்பு/உறுதி பெறுதல்
ankāthan
أَنكَٰثًا
திரிகளாக
tattakhidhūna
تَتَّخِذُونَ
ஆக்கிக்கொள்கிறீர்களா?
aymānakum
أَيْمَٰنَكُمْ
உங்கள் சத்தியங்களை
dakhalan
دَخَلًۢا
ஏமாற்றமாக, வஞ்சகமாக
baynakum
بَيْنَكُمْ
உங்களுக்கிடையில்
an takūna
أَن تَكُونَ
இருப்பதற்காக
ummatun
أُمَّةٌ
ஒரு சமுதாயம்
hiya
هِىَ
அது
arbā
أَرْبَىٰ
பலம்வாய்ந்தவர்களாக
min
مِنْ
விட
ummatin
أُمَّةٍۚ
ஒரு சமுதாயத்தை
innamā yablūkumu
إِنَّمَا يَبْلُوكُمُ
நிச்சயமாக சோதிக்கிறான்/ உங்களை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
bihi
بِهِۦۚ
இதன் மூலம்
walayubayyinanna
وَلَيُبَيِّنَنَّ
நிச்சயம் தெளிவுபடுத்துவான்
lakum
لَكُمْ
உங்களுக்கு
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
mā kuntum
مَا كُنتُمْ
எதை/இருந்தீர்கள்
fīhi
فِيهِ
அதில்
takhtalifūna
تَخْتَلِفُونَ
தர்க்கிப்பீர்கள்
(மனிதர்களே! உறுதிப்படுத்திய சத்தியத்தை முறித்து) நீங்கள் ஒரு பெண்ணுக்கு ஒப்பாகிவிடவேண்டாம். அவள் மிகக் கஷ்டப்பட்டு நூற்ற நூலை, தானே தறித்து துண்டு துண்டாக்கி விடுகிறாள். அன்றி, ஒரு வகுப்பாரைவிட மற்றொரு வகுப்பார் பலம் வாய்ந்தவர்களாக ஆகவும் உங்கள் சத்தியத்தைக் காரணமாக்கிக் கொள்ளாதீர்கள். இவ்விஷயத்தில் (நீங்கள் சரியாக நடக்கின்றீர்களா இல்லையா? என்று) நிச்சயமாக அல்லாஹ் உங்களை சோதிக்கிறான். தவிர, நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்தவைகளையும் மறுமை நாளில் அவன் உங்களுக்குத் தெளிவாக விவரித்துக் காண்பிப்பான். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௯௨)
Tafseer
௯௩

وَلَوْ شَاۤءَ اللّٰهُ لَجَعَلَكُمْ اُمَّةً وَّاحِدَةً وَّلٰكِنْ يُّضِلُّ مَنْ يَّشَاۤءُ وَيَهْدِيْ مَنْ يَّشَاۤءُۗ وَلَتُسْـَٔلُنَّ عَمَّا كُنْتُمْ تَعْمَلُوْنَ ٩٣

walaw shāa
وَلَوْ شَآءَ
நாடியிருந்தால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
lajaʿalakum
لَجَعَلَكُمْ
உங்களை ஆக்கியிருப்பான்
ummatan
أُمَّةً
ஒரு சமுதாயமாக
wāḥidatan
وَٰحِدَةً
ஒரே
walākin
وَلَٰكِن
எனினும்
yuḍillu
يُضِلُّ
வழிகெடுக்கின்றான்
man yashāu
مَن يَشَآءُ
எவரை/நாடுகின்றான்
wayahdī
وَيَهْدِى
இன்னும் நேர்வழி செலுத்துகின்றான்
man yashāu
مَن يَشَآءُۚ
எவரை/நாடுகின்றான்
walatus'alunna
وَلَتُسْـَٔلُنَّ
நிச்சயம் விசாரிக்கப்படுவீர்கள்
ʿammā kuntum
عَمَّا كُنتُمْ
எதைப்பற்றி/ இருந்தீர்கள்
taʿmalūna
تَعْمَلُونَ
செய்வீர்கள்
அல்லாஹ் நாடியிருந்தால் உங்கள் அனைவரையும் ஒரே (மார்க்கத்தைப் பின்பற்றும்) வகுப்பினராக ஆக்கியிருப்பான். எனினும், (இறைவன்) தான் நாடியவர்களை (அவர்களுடைய பாவத்தின் காரணமாக) தவறான வழியில் அவன் விட்டுவிடுகிறான். தான் நாடியவர்களை (அவர்களின் நற்செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்துகிறான். நீங்கள் செய்து கொண்டிருந்த செயல்களைப் பற்றி நிச்சயமாக நீங்கள் (மறுமையில்) கேட்கப்படுவீர்கள். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௯௩)
Tafseer
௯௪

وَلَا تَتَّخِذُوْٓا اَيْمَانَكُمْ دَخَلًا ۢ بَيْنَكُمْ فَتَزِلَّ قَدَمٌۢ بَعْدَ ثُبُوْتِهَا وَتَذُوْقُوا السُّوْۤءَ بِمَا صَدَدْتُّمْ عَنْ سَبِيْلِ اللّٰهِ ۚوَلَكُمْ عَذَابٌ عَظِيْمٌ ٩٤

walā tattakhidhū
وَلَا تَتَّخِذُوٓا۟
ஆக்கிக் கொள்ளாதீர்கள்
aymānakum
أَيْمَٰنَكُمْ
உங்கள் சத்தியங்களை
dakhalan
دَخَلًۢا
ஏமாற்றமாக
baynakum
بَيْنَكُمْ
உங்களுக்கு மத்தியில்
fatazilla
فَتَزِلَّ
சருகிவிடும்
qadamun baʿda
قَدَمٌۢ بَعْدَ
ஒரு பாதம்/பின்பு
thubūtihā
ثُبُوتِهَا
அது நிலைபெறுதல்
watadhūqū
وَتَذُوقُوا۟
இன்னும் அனுபவிப்பீர்கள்
l-sūa
ٱلسُّوٓءَ
துன்பத்தை
bimā ṣadadttum
بِمَا صَدَدتُّمْ
நீங்கள் தடுத்த காரணத்தால்
ʿan sabīli
عَن سَبِيلِ
பாதையை விட்டு
l-lahi
ٱللَّهِۖ
அல்லாஹ்வின்
walakum
وَلَكُمْ
இன்னும் உங்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
ஒரு வேதனை
ʿaẓīmun
عَظِيمٌ
மகத்தானது
உங்களுக்குள் நீங்கள் (விஷமம் செய்வதற்காக) உங்களுடைய சத்தியத்தைக் காரணமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அவ்வாறு செய்தால் நிலைபெற்ற (உங்களுடைய) பாதம் பெயர்ந்து உறுதி குலைந்துவிடும். தவிர, (சத்தியத்தை முறிப்பதினால்) அல்லாஹ்வின் பாதையை விட்டும் நீங்கள் தடுத்துக் கொள்வதன் காரணமாக பல துன்பங்களையும் நீங்கள் அனுபவிக்கும்படி நேரிடும். அன்றி, கடுமையான வேதனையும் உங்களுக்குக் கிடைக்கும். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௯௪)
Tafseer
௯௫

وَلَا تَشْتَرُوْا بِعَهْدِ اللّٰهِ ثَمَنًا قَلِيْلًاۗ اِنَّمَا عِنْدَ اللّٰهِ هُوَ خَيْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ٩٥

walā tashtarū
وَلَا تَشْتَرُوا۟
வாங்காதீர்கள்
biʿahdi
بِعَهْدِ
ஒப்பந்தத்திற்கு பகரமாக
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
thamanan
ثَمَنًا
ஒரு விலையை
qalīlan
قَلِيلًاۚ
சொற்பமானது
innamā
إِنَّمَا
நிச்சயமாக/எது
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடத்தில்
huwa khayrun
هُوَ خَيْرٌ
அது/மிக மேலானது
lakum
لَّكُمْ
உங்களுக்கு
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
taʿlamūna
تَعْلَمُونَ
அறிவீர்கள்
அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை ஒரு சொற்ப விலைக்கு நீங்கள் விற்றுவிடாதீர்கள். நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் இருப்பதுதான் உங்களுக்கு மிக மேலானதாகும். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௯௫)
Tafseer
௯௬

مَا عِنْدَكُمْ يَنْفَدُ وَمَا عِنْدَ اللّٰهِ بَاقٍۗ وَلَنَجْزِيَنَّ الَّذِيْنَ صَبَرُوْٓا اَجْرَهُمْ بِاَحْسَنِ مَا كَانُوْا يَعْمَلُوْنَ ٩٦

mā ʿindakum
مَا عِندَكُمْ
எது/உங்களிடம்
yanfadu
يَنفَدُۖ
தீர்ந்துவிடும்
wamā
وَمَا
இன்னும் எது
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
bāqin
بَاقٍۗ
நிரந்தரமானவை
walanajziyanna
وَلَنَجْزِيَنَّ
நிச்சயமாக கூலி கொடுப்போம்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ṣabarū
صَبَرُوٓا۟
பொறுத்தனர்
ajrahum
أَجْرَهُم
அவர்களின் கூலியை
bi-aḥsani
بِأَحْسَنِ
மிக அழகிய முறையில்
mā kānū yaʿmalūna
مَا كَانُوا۟ يَعْمَلُونَ
எவை/இருந்தனர்/செய்வார்கள்
உங்களிடமுள்ள (பொருள்கள்) யாவும் செலவழிந்துவிடும்; அல்லாஹ்விடத்தில் உள்ளவைகளோ (என்றென்றும்) நிலை பெற்றிருக்கும். எவர்கள் (கஷ்டங்களை) உறுதியாகச் சகித்துக் கொண்டார்களோ அவர்கள் (செய்யும் பல நற்காரியங்களுக்கு அவர்கள்) செய்ததைவிட மிக்க அழகான கூலியையே நாம் அவர் களுக்குக் கொடுப்போம். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௯௬)
Tafseer
௯௭

مَنْ عَمِلَ صَالِحًا مِّنْ ذَكَرٍ اَوْ اُنْثٰى وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهٗ حَيٰوةً طَيِّبَةًۚ وَلَنَجْزِيَنَّهُمْ اَجْرَهُمْ بِاَحْسَنِ مَا كَانُوْا يَعْمَلُوْنَ ٩٧

man
مَنْ
எவர்கள்
ʿamila
عَمِلَ
செய்தார்(கள்)
ṣāliḥan
صَٰلِحًا
நல்லதை
min
مِّن
இருந்து
dhakarin
ذَكَرٍ
ஆண்கள்
aw
أَوْ
அல்லது
unthā
أُنثَىٰ
பெண்கள்
wahuwa
وَهُوَ
அவர்(கள்)
mu'minun
مُؤْمِنٌ
நம்பிக்கை கொண்டவர்(களாக)
falanuḥ'yiyannahu
فَلَنُحْيِيَنَّهُۥ
நிச்சயம் வாழச்செய்வோம்/அவர்களை
ḥayatan
حَيَوٰةً
வாழ்க்கை
ṭayyibatan
طَيِّبَةًۖ
நல்ல(து)
walanajziyannahum
وَلَنَجْزِيَنَّهُمْ
நிச்சயம் கொடுப்போம்/அவர்களுக்கு
ajrahum
أَجْرَهُم
அவர்களின் கூலியை
bi-aḥsani
بِأَحْسَنِ
மிக அழகிய முறையில்
mā kānū yaʿmalūna
مَا كَانُوا۟ يَعْمَلُونَ
எவை/இருந்தனர்/செய்வார்கள்
ஆணாயினும், பெண்ணாயினும் நம்பிக்கை கொண்டு நற்செயல்களை எவர் செய்தாலும் நிச்சயமாக நாம் அவர்களை (இம்மையில்) நல்ல வாழ்க்கையாக வாழச்செய்வோம். அன்றி (மறுமையிலோ) அவர்கள் செய்து கொண்டிருந்ததை விட மிக்க அழகான கூலியையே நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கொடுப்போம். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௯௭)
Tafseer
௯௮

فَاِذَا قَرَأْتَ الْقُرْاٰنَ فَاسْتَعِذْ بِاللّٰهِ مِنَ الشَّيْطٰنِ الرَّجِيْمِ ٩٨

fa-idhā qarata
فَإِذَا قَرَأْتَ
நீர் ஓதினால்
l-qur'āna
ٱلْقُرْءَانَ
குர்ஆனை
fa-is'taʿidh
فَٱسْتَعِذْ
பாதுகாவல் கோருங்கள்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்விடம்
mina
مِنَ
விட்டு
l-shayṭāni
ٱلشَّيْطَٰنِ
ஷைத்தானை
l-rajīmi
ٱلرَّجِيمِ
விரட்டப்பட்டவன்
(நபியே!) நீங்கள் குர்ஆனை ஓத ஆரம்பித்தால் (அதற்கு முன்னதாக) விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டு காக்கும்படி அல்லாஹ்விடம் கோரிக்கொள்ளுங்கள். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௯௮)
Tafseer
௯௯

اِنَّهٗ لَيْسَ لَهٗ سُلْطٰنٌ عَلَى الَّذِيْنَ اٰمَنُوْا وَعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ ٩٩

innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
laysa
لَيْسَ
இல்லை
lahu
لَهُۥ
அவனுக்கு
sul'ṭānun
سُلْطَٰنٌ
அதிகாரம்
ʿalā
عَلَى
மீது
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
waʿalā
وَعَلَىٰ
இன்னும் மீது
rabbihim
رَبِّهِمْ
தங்கள் இறைவன்
yatawakkalūna
يَتَوَكَّلُونَ
நம்பிக்கை வைப்பார்கள்
எவர்கள் நம்பிக்கை கொண்டு தங்கள் இறைவனிடமே பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறார்களோ அவர்களிடத்தில் நிச்சயமாக (இந்த) ஷைத்தானுக்கு யாதொரு அதிகாரமும் இல்லை. ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௯௯)
Tafseer
௧௦௦

اِنَّمَا سُلْطٰنُهٗ عَلَى الَّذِيْنَ يَتَوَلَّوْنَهٗ وَالَّذِيْنَ هُمْ بِهٖ مُشْرِكُوْنَ ࣖ ١٠٠

innamā sul'ṭānuhu
إِنَّمَا سُلْطَٰنُهُۥ
அவனுடைய அதிகாரமெல்லாம்
ʿalā alladhīna
عَلَى ٱلَّذِينَ
மீது/எவர்கள்
yatawallawnahu
يَتَوَلَّوْنَهُۥ
நட்புவைப்பார்கள்/ அவனுடன்
wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
hum
هُم
அவர்கள்
bihi
بِهِۦ
அவனுக்கு
mush'rikūna
مُشْرِكُونَ
இணைவைப்பவர்கள்
அவனுடைய அதிகாரமெல்லாம் அவனுடன் சம்பந்தம் வைப்பவர்களிடமும் அல்லாஹ்வுக்கு இணை வைப்பவர்களிடமுமே செல்லும். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௦௦)
Tafseer