Skip to content

ஸூரா ஸூரத்துந் நஹ்ல் - Word by Word

An-Nahl

(an-Naḥl)

bismillaahirrahmaanirrahiim

اَتٰىٓ اَمْرُ اللّٰهِ فَلَا تَسْتَعْجِلُوْهُ ۗسُبْحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا يُشْرِكُوْنَ ١

atā
أَتَىٰٓ
வந்தது (வந்தே தீரும்)
amru
أَمْرُ
கட்டளை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
falā tastaʿjilūhu
فَلَا تَسْتَعْجِلُوهُۚ
அவசரமாக தேடாதீர்கள்/அதை
sub'ḥānahu
سُبْحَٰنَهُۥ
அவன் மிகப் பரிசுத்தமானவன்
wataʿālā
وَتَعَٰلَىٰ
இன்னும் முற்றிலும் உயர்ந்தவன்
ʿammā yush'rikūna
عَمَّا يُشْرِكُونَ
அவர்கள் இணைவைப்பதை விட்டு
(இதோ) அல்லாஹ்வுடைய கட்டளை வந்துவிட்டது! அதைப் பற்றி நீங்கள் அவசரப்பட வேண்டாம். அவன் மிகப் பரிசுத்தமானவன்; அவர்கள் இணைவைப்பவற்றை விட மிக்க மேலானவன். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧)
Tafseer

يُنَزِّلُ الْمَلٰۤىِٕكَةَ بِالرُّوْحِ مِنْ اَمْرِهٖ عَلٰى مَنْ يَّشَاۤءُ مِنْ عِبَادِهٖٓ اَنْ اَنْذِرُوْٓا اَنَّهٗ لَآ اِلٰهَ اِلَّآ اَنَا۠ فَاتَّقُوْنِ ٢

yunazzilu
يُنَزِّلُ
இறக்குகிறான்
l-malāikata
ٱلْمَلَٰٓئِكَةَ
வானவர்களை
bil-rūḥi
بِٱلرُّوحِ
உயிருடன்
min amrihi
مِنْ أَمْرِهِۦ
தன் கட்டளைப்படி
ʿalā
عَلَىٰ
மீது
man
مَن
எவர்
yashāu
يَشَآءُ
நாடுகின்றான்
min ʿibādihi
مِنْ عِبَادِهِۦٓ
தன் அடியார்களில்
an andhirū
أَنْ أَنذِرُوٓا۟
என்று/எச்சரியுங்கள்
annahu
أَنَّهُۥ
நிச்சயமாக செய்தி
لَآ
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
illā
إِلَّآ
தவிர
anā
أَنَا۠
என்னை
fa-ittaqūni
فَٱتَّقُونِ
ஆகவே, அஞ்சுங்கள்
அவன் மலக்குகளுக்கு வஹீ கொடுத்து, தன் அடியார்களில் தான் விரும்பியவர்களிடம் அனுப்பி வைத்து "வணக்கத்திற்குரியவன் என்னைத் தவிர வேறெவனுமில்லை; நீங்கள் எனக்கே பயப்படுங்கள்" என்று எச்சரிக்கை செய்யுமாறு அவருக்குக் கட்டளையிட்டான். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௨)
Tafseer

خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّۗ تَعٰلٰى عَمَّا يُشْرِكُوْنَ ٣

khalaqa
خَلَقَ
படைத்தான்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை
wal-arḍa
وَٱلْأَرْضَ
இன்னும் பூமியை
bil-ḥaqi
بِٱلْحَقِّۚ
உண்மையான நோக்கத்திற்கே
taʿālā
تَعَٰلَىٰ
முற்றிலும் உயர்ந்தவன்
ʿammā yush'rikūna
عَمَّا يُشْرِكُونَ
அவர்கள் இணைவைப்பதை விட்டு
வானங்களையும் பூமியையும் தக்க காரணத்தின் மீதே அவன் படைத்திருக்கின்றான்; அவர்கள் இணை வைப்பவைகளை விட அவன் மிக்க மேலானவன். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௩)
Tafseer

خَلَقَ الْاِنْسَانَ مِنْ نُّطْفَةٍ فَاِذَا هُوَ خَصِيْمٌ مُّبِيْنٌ ٤

khalaqa
خَلَقَ
படைத்தான்
l-insāna
ٱلْإِنسَٰنَ
மனிதனை
min
مِن
இருந்து
nuṭ'fatin
نُّطْفَةٍ
இந்திரியம்
fa-idhā huwa
فَإِذَا هُوَ
அவனோ
khaṣīmun
خَصِيمٌ
வாதி, எதிரி
mubīnun
مُّبِينٌ
பகிரங்கமான
அவனே ஒரு துளி இந்திரியத்தைக் கொண்டு மனிதனைப் படைக்கிறான்; அவ்வாறிருந்தும் அவன் (இறைவனுடன்) பகிரங்கமான எதிரியாய் இருக்கிறான். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௪)
Tafseer

وَالْاَنْعَامَ خَلَقَهَا لَكُمْ فِيْهَا دِفْءٌ وَّمَنَافِعُ وَمِنْهَا تَأْكُلُوْنَ ٥

wal-anʿāma
وَٱلْأَنْعَٰمَ
இன்னும் கால்நடைகளை
khalaqahā
خَلَقَهَاۗ
படைத்தான்/அவற்றை
lakum
لَكُمْ
உங்களுக்காக
fīhā
فِيهَا
அவற்றில்
dif'on
دِفْءٌ
ஆடை
wamanāfiʿu
وَمَنَٰفِعُ
இன்னும் பலன்கள்
wamin'hā
وَمِنْهَا
இன்னும் அவற்றிலிருந்து
takulūna
تَأْكُلُونَ
புசிக்கின்றீர்கள்
(மனிதர்களே!) கால்நடைகளையும் உங்களுக்காக அவனே படைத்திருக்கிறான். அவற்றில் (குளிரைத் தடுக்கும்) பொருள்களும் பல பயன்களும் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் புசிக்கிறீர்கள். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௫)
Tafseer

وَلَكُمْ فِيْهَا جَمَالٌ حِيْنَ تُرِيْحُوْنَ وَحِيْنَ تَسْرَحُوْنَۖ ٦

walakum
وَلَكُمْ
இன்னும் உங்களுக்கு
fīhā
فِيهَا
அவற்றில்
jamālun
جَمَالٌ
அழகு
ḥīna
حِينَ
நேரத்தில்
turīḥūna
تُرِيحُونَ
மாலையில் ஓட்டி வருகிறீர்கள்
waḥīna tasraḥūna
وَحِينَ تَسْرَحُونَ
இன்னும் நேரத்தில்/மேய்க்க ஓட்டிச் செல்கிறீர்கள்
நீங்கள் அவற்றை (மேய்த்து) மாலையில் ஓட்டி வரும் பொழுதும் (மேய்ச்சலுக்குக்) காலையில் ஓட்டிச் செல்லும்பொழுதும் அவை உங்களுக்கு அழகாய் இருக்கின்றன. ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௬)
Tafseer

وَتَحْمِلُ اَثْقَالَكُمْ اِلٰى بَلَدٍ لَّمْ تَكُوْنُوْا بٰلِغِيْهِ اِلَّا بِشِقِّ الْاَنْفُسِۗ اِنَّ رَبَّكُمْ لَرَءُوْفٌ رَّحِيْمٌۙ ٧

wataḥmilu
وَتَحْمِلُ
அவை சுமக்கின்றன
athqālakum
أَثْقَالَكُمْ
சுமைகளை/உங்கள்
ilā baladin
إِلَىٰ بَلَدٍ
ஊருக்கு
lam takūnū
لَّمْ تَكُونُوا۟
நீங்கள் இல்லை
bālighīhi
بَٰلِغِيهِ
அடைபவர்களாக/அதை
illā
إِلَّا
தவிர
bishiqqi l-anfusi
بِشِقِّ ٱلْأَنفُسِۚ
மிகுந்த சிரமத்துடன்
inna
إِنَّ
நிச்சயமாக
rabbakum
رَبَّكُمْ
உங்கள் இறைவன்
laraūfun
لَرَءُوفٌ
மகா இரக்கமுள்ளவன்
raḥīmun
رَّحِيمٌ
மகா கருணையாளன்
மிகக் கஷ்டத்துடனன்றி நீங்கள் செல்ல முடியாத ஊர்களுக்கு அவை (உங்களையும்) உங்களுடைய பளுவான சுமைகளையும் சுமந்து செல்கின்றன. நிச்சயமாக உங்கள் இறைவன் (உங்கள் மீது) மிக்க இரக்கமுடையவனும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௭)
Tafseer

وَّالْخَيْلَ وَالْبِغَالَ وَالْحَمِيْرَ لِتَرْكَبُوْهَا وَزِيْنَةًۗ وَيَخْلُقُ مَا لَا تَعْلَمُوْنَ ٨

wal-khayla
وَٱلْخَيْلَ
இன்னும் குதிரைகளை
wal-bighāla
وَٱلْبِغَالَ
இன்னும் கோவேறு கழுதைகளை
wal-ḥamīra
وَٱلْحَمِيرَ
இன்னும் கழுதைகளை
litarkabūhā
لِتَرْكَبُوهَا
நீங்கள் ஏறிசெல்வதற்க்காக /அவற்றில்
wazīnatan
وَزِينَةًۚ
அலங்காரத்திற்காக
wayakhluqu
وَيَخْلُقُ
இன்னும் படைப்புகள்
مَا
எவற்றை
lā taʿlamūna
لَا تَعْلَمُونَ
அறியமாட்டீர்கள்
குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்வதற்காகவும் (உங்களுக்கு) அலங்காரமாகவும் (அவன் படைத்திருக்கிறான்.) இன்னும் நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைப்பான். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௮)
Tafseer

وَعَلَى اللّٰهِ قَصْدُ السَّبِيْلِ وَمِنْهَا جَاۤىِٕرٌ ۗوَلَوْ شَاۤءَ لَهَدٰىكُمْ اَجْمَعِيْنَ ࣖ ٩

waʿalā l-lahi
وَعَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் பொறுப்பு
qaṣdu l-sabīli
قَصْدُ ٱلسَّبِيلِ
நேர்/வழி
wamin'hā
وَمِنْهَا
இன்னும் அவற்றில்
jāirun
جَآئِرٌۚ
கோணலானது
walaw shāa
وَلَوْ شَآءَ
அவன் நாடினால்
lahadākum
لَهَدَىٰكُمْ
நேர்வழி நடத்தி இருப்பான்/உங்களை
ajmaʿīna
أَجْمَعِينَ
அனைவரையும்
(மனிதர்களே! உங்களுக்கு இரு வழிகள் இருக்கின்றன. ஒன்று,) அல்லாஹ்வை நாடிச்செல்லக்கூடிய நேரானவழி; மற்றொன்று) கோணலான வழி. அவன் நாடினால் உங்கள் அனைவரையும் நேரான வழியில் செலுத்திவிடுவான். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௯)
Tafseer
௧௦

هُوَ الَّذِيْٓ اَنْزَلَ مِنَ السَّمَاۤءِ مَاۤءً لَّكُمْ مِّنْهُ شَرَابٌ وَّمِنْهُ شَجَرٌ فِيْهِ تُسِيْمُوْنَ ١٠

huwa
هُوَ
அவன்
alladhī
ٱلَّذِىٓ
எத்தகையவன்
anzala
أَنزَلَ
இறக்கினான்
mina l-samāi
مِنَ ٱلسَّمَآءِ
மேகத்திலிருந்து
māan
مَآءًۖ
மழை நீரை
lakum
لَّكُم
உங்களுக்கு
min'hu
مِّنْهُ
அதில்
sharābun
شَرَابٌ
குடிநீர்
wamin'hu
وَمِنْهُ
இன்னும் அதிலிருந்து
shajarun
شَجَرٌ
மரங்கள்
fīhi
فِيهِ
அவற்றில்
tusīmūna
تُسِيمُونَ
மேய்க்கிறீர்கள்
அவன்தான் மேகத்திலிருந்து உங்களுக்கு மழை பொழியச் செய்கிறான். அதில்தான் நீங்கள் அருந்தக்கூடிய நீரும் இருக்கிறது; அதைக்கொண்டே (வளர்ந்த) புற்பூண்டுகளும் இருக்கின்றன. அதிலே (உங்கள் கால்நடைகளை) மேய்க்கின்றீர்கள். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௦)
Tafseer