Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௯௭

Qur'an Surah Al-Hijr Verse 97

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௯௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَقَدْ نَعْلَمُ اَنَّكَ يَضِيْقُ صَدْرُكَ بِمَا يَقُوْلُوْنَۙ (الحجر : ١٥)

walaqad
وَلَقَدْ
And verily
திட்டவட்டமாக
naʿlamu
نَعْلَمُ
We know
அறிவோம்
annaka
أَنَّكَ
that [you]
நிச்சயமாக நீர்
yaḍīqu
يَضِيقُ
(is) straitened
நெருக்கடிக்குள்ளாகிறது
ṣadruka
صَدْرُكَ
your breast
உம் நெஞ்சு
bimā yaqūlūna
بِمَا يَقُولُونَ
by what they say
அவர்கள் கூறுவதால்

Transliteration:

Wa laqad na'lamu annak yadeequ sadruka bimaa yaqooloon (QS. al-Ḥijr:97)

English Sahih International:

And We already know that your breast is constrained by what they say. (QS. Al-Hijr, Ayah ௯௭)

Abdul Hameed Baqavi:

(நபியே! உங்களைப் பற்றி) அவர்கள் (கேவலமாகக்) கூறுபவை உங்கள் உள்ளத்தை நெருக்குகிறதென்பதை நிச்சயமாக நாம் அறிவோம். (அதை நீங்கள் ஒரு சிறிதும் பொருட்படுத்தாதீர்கள்.) (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௯௭)

Jan Trust Foundation

(நபியே!) இவர்கள் (இழிவாகப்) பேசுவது உம் நெஞ்சத்தை எப்படி நெருக்குகிறது என்பதை நாம் அறிவோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) நிச்சயமாக நீர் (உம்மைப் பற்றி) அவர்கள் (தரக் குறைவாக) கூறுவதால் உம் நெஞ்சம் நெருக்கடிக்குள்ளாகிறது என்பதை திட்டவட்டமாக அறிவோம்.