Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௮௫

Qur'an Surah Al-Hijr Verse 85

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௮௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَآ اِلَّا بِالْحَقِّۗ وَاِنَّ السَّاعَةَ لَاٰتِيَةٌ فَاصْفَحِ الصَّفْحَ الْجَمِيْلَ (الحجر : ١٥)

wamā khalaqnā
وَمَا خَلَقْنَا
And not We created
நாம் படைக்கவில்லை
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
the heavens
வானங்களை
wal-arḍa
وَٱلْأَرْضَ
and the earth
இன்னும் பூமியை
wamā baynahumā
وَمَا بَيْنَهُمَآ
and whatever (is) between them
இன்னும் அவை இரண்டிற்கு மத்தியிலுள்ளவை
illā bil-ḥaqi
إِلَّا بِٱلْحَقِّۗ
except in truth
உண்மையான நோக்கத்திற்கே தவிர
wa-inna l-sāʿata
وَإِنَّ ٱلسَّاعَةَ
And indeed the Hour
நிச்சயம்/மறுமை
laātiyatun
لَءَاتِيَةٌۖ
(is) surely coming
வரக்கூடியதே
fa-iṣ'faḥi
فَٱصْفَحِ
So overlook
ஆகவே புறக்கணிப்பீராக
l-ṣafḥa
ٱلصَّفْحَ
(with) forgiveness
புறக்கணிப்பாக
l-jamīla
ٱلْجَمِيلَ
gracious
அழகியது

Transliteration:

Wa maa khalaqnas samaawaati wal arda wa maa bainahumaaa illaa bilhaqq; wa innas Saa'ata la aatiyatun fasfahis safhal jameel (QS. al-Ḥijr:85)

English Sahih International:

And We have not created the heavens and earth and that between them except in truth. And indeed, the Hour is coming; so forgive with gracious forgiveness. (QS. Al-Hijr, Ayah ௮௫)

Abdul Hameed Baqavi:

வானங்களையும் பூமியையும், இவைகளுக்கு மத்தியில் உள்ளவைகளையும் தக்க காரணமின்றி நாம் படைக்கவில்லை. (நபியே! இவர்களுடைய தண்டனைக்குரிய) காலம் நிச்சயமாக வரக்கூடியதே! (அதுவரையில் இத்துஷ்டர்களின் விஷமத்தை) நீங்கள் கண்ணியமான முறையில் புறக்கணித்து வாருங்கள். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௮௫)

Jan Trust Foundation

நாம் வானங்களையும், பூமியையும், இவை இரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் உண்மையைக் கொண்டே அல்லாது படைக்கவில்லை. (நபியே! இவர்களுடைய தண்டனைக்குரிய) காலம் நிச்சயமாக வருவதாகவே உள்ளது; ஆதலால் (இவர்களின் தவறுகளை) முற்றாகப் புறக்கணித்துவிடும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வானங்களையும் பூமியையும், அவை இரண்டிற்கு மத்திலுள்ளவற்றையும் உண்மையான நோக்கத்திற்கே தவிர நாம் படைக்கவில்லை. நிச்சயம் (குறிப்பிட்ட) மறுமை வரக்கூடியதே! ஆகவே, அழகிய புறக்கணிப்பாக (அவர்களை) புறக்கணிப்பீராக.