Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௭௧

Qur'an Surah Al-Hijr Verse 71

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௭௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ هٰٓؤُلَاۤءِ بَنٰتِيْٓ اِنْ كُنْتُمْ فٰعِلِيْنَۗ (الحجر : ١٥)

qāla hāulāi
قَالَ هَٰٓؤُلَآءِ
He said "These
கூறினார்/இவர்கள்
banātī
بَنَاتِىٓ
(are) my daughters
என் பெண் மக்கள்
in kuntum
إِن كُنتُمْ
if you would be
நீங்கள் இருந்தால்
fāʿilīna
فَٰعِلِينَ
doers"
செய்பவர்களாக

Transliteration:

Qaala haaa'ulaaa'i banaateee in kuntum faa'ileen (QS. al-Ḥijr:71)

English Sahih International:

[Lot] said, "These are my daughters – if you would be doers [of lawful marriage]." (QS. Al-Hijr, Ayah ௭௧)

Abdul Hameed Baqavi:

அதற்கவர் "இதோ! என்னுடைய பெண் மக்கள் இருக்கின்றனர். நீங்கள் (ஏதும்) செய்தே தீரவேண்டுமென்று கருதினால் (இவர்களை திருமணம்) செய்துகொள்ளலாம்" என்று கூறினார். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௭௧)

Jan Trust Foundation

அதற்கவர், “இதோ! என் புதல்வியர் இருக்கிறார்கள். நீங்கள் (ஏதும்) செய்தே தீர வேண்டுமெனக் கருதினால் (இவர்களை திருமணம்) செய்து கொள்ளலாம்” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“(இதோ!) இவர்கள் என் பெண் மக்கள். நீங்கள் (நான் ஏவுவதை) செய்பவர்களாக இருந்தால் (இவர்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்)” என்று கூறினார்.