Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௪௭

Qur'an Surah Al-Hijr Verse 47

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௪௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَنَزَعْنَا مَا فِيْ صُدُوْرِهِمْ مِّنْ غِلٍّ اِخْوَانًا عَلٰى سُرُرٍ مُّتَقٰبِلِيْنَ (الحجر : ١٥)

wanazaʿnā
وَنَزَعْنَا
And We (will) remove
நீக்கிவிடுவோம்
mā fī ṣudūrihim
مَا فِى صُدُورِهِم
what (is) in their breasts
எதை/நெஞ்சங்களில்/அவர்களுடைய
min ghillin
مِّنْ غِلٍّ
of rancor
குரோதத்தை
ikh'wānan
إِخْوَٰنًا
(they will be) brothers
சகோதரர்களாக
ʿalā sururin
عَلَىٰ سُرُرٍ
on thrones
கட்டில்கள் மீது
mutaqābilīna
مُّتَقَٰبِلِينَ
facing each other
ஒருவர் ஒருவரை முகம் நோக்கியவர்களாக

Transliteration:

Wa naza'naa ma fee sudoorihim min ghillin ikhwaanan 'alaa sururim mutaqaabileen (QS. al-Ḥijr:47)

English Sahih International:

And We will remove whatever is in their breasts of resentment, [so they will be] brothers, on thrones facing each other. (QS. Al-Hijr, Ayah ௪௭)

Abdul Hameed Baqavi:

(ஒருவருக்கு ஒருவர் மீது இம்மையில்) அவர்களின் மனதில் இருந்த குரோதங்களை நாம் நீக்கிவிடுவோம். (அவர்களும்) மெய்யான சகோதரர்களாக ஒருவர் ஒருவரை முகம் நோக்கி கட்டில்களில் (உல்லாசமாகச் சாய்ந்து) இருப்பார்கள். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௪௭)

Jan Trust Foundation

மேலும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்; (எல்லோரும்) சகோதரர்களாக ஒருவரையொருவர் முன்னோக்கி அரியாசனங்களில் (ஆனந்தமாக) அமர்ந்திருப்பார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுடைய நெஞ்சங்களில் இருந்த குரோதத்தை நாம் நீக்கிவிடுவோம். (அவர்கள் அங்கு) சகோதரர்களாக, ஒருவர் ஒருவரை முகம் நோக்கியவர்களாக கட்டில்கள் மீது (சாய்ந்து) இருப்பார்கள்.