Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௩

Qur'an Surah Al-Hijr Verse 3

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ذَرْهُمْ يَأْكُلُوْا وَيَتَمَتَّعُوْا وَيُلْهِهِمُ الْاَمَلُ فَسَوْفَ يَعْلَمُوْنَ (الحجر : ١٥)

dharhum
ذَرْهُمْ
Leave them
விடுவீராக/அவர்களை
yakulū
يَأْكُلُوا۟
(to) eat
அவர்கள் புசிக்கட்டும்
wayatamattaʿū
وَيَتَمَتَّعُوا۟
and enjoy
இன்னும் அவர்கள் சுகம் அனுபவிக்கட்டும்
wayul'hihimu
وَيُلْهِهِمُ
and diverted them
இன்னும் மறக்கடிக்கட்டும்/அவர்களை
l-amalu
ٱلْأَمَلُۖ
the hope
ஆசை
fasawfa yaʿlamūna
فَسَوْفَ يَعْلَمُونَ
then soon they will come to know
(பின்னர்) அறிவார்கள்

Transliteration:

Zarhum yaakuloo wa tatamatta'oo wa yulhihimul amalu fasawfa ya'lamoon (QS. al-Ḥijr:3)

English Sahih International:

Let them eat and enjoy themselves and be diverted by [false] hope, for they are going to know. (QS. Al-Hijr, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அவர்கள் (நன்கு) புசித்துக்கொண்டும், (தங்கள் இஷ்டப்படி) சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்க (தற்சமயம்) நீங்கள் அவர்களை விட்டுவிடுங்கள். அவர்களுடைய (வீண்) நம்பிக்கைகள் (மறுமையை அவர்களுக்கு) மறக்கடித்து விட்டன. இதன் (பலனை) பின்னர் அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௩)

Jan Trust Foundation

(இம்மையில் தம் விருப்பம் போல்) புசித்துக் கொண்டும், சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்க அவர்களை விட்டு விடுவீராக; அவர்களுடைய வீணான ஆசைகள் (மறுமையிலிருந்தும்) அவர்களைப் பராக்காக்கி விட்டன; (இதன் பலனைப் பின்னர்) அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) அவர்களை விடுவீராக! அவர்கள் புசிக்கட்டும், இன்னும் அவர்கள் சுகம் அனுபவிக்கட்டும். அவர்களுடைய ஆசை அவர்களை மறக்கடிக்கட்டும். பின்னர் (அவர்கள் தங்களது கெட்ட முடிவை) அறிவார்கள்.