குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௨௨
Qur'an Surah Al-Hijr Verse 22
ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاَرْسَلْنَا الرِّيٰحَ لَوَاقِحَ فَاَنْزَلْنَا مِنَ السَّمَاۤءِ مَاۤءً فَاَسْقَيْنٰكُمُوْهُۚ وَمَآ اَنْتُمْ لَهٗ بِخَازِنِيْنَ (الحجر : ١٥)
- wa-arsalnā
- وَأَرْسَلْنَا
- And We have sent
- இன்னும் அனுப்புகிறோம்
- l-riyāḥa
- ٱلرِّيَٰحَ
- the winds
- காற்றுகளை
- lawāqiḥa
- لَوَٰقِحَ
- fertilizing
- கருக்கொள்ள வைக்கக் கூடியதாக
- fa-anzalnā
- فَأَنزَلْنَا
- and We sent down
- இறக்குகிறோம்
- mina l-samāi
- مِنَ ٱلسَّمَآءِ
- from the sky
- மேகத்திலிருந்து
- māan
- مَآءً
- water
- மழை நீரை
- fa-asqaynākumūhu
- فَأَسْقَيْنَٰكُمُوهُ
- and We gave it to you to drink
- புகட்டுகிறோம்/உங்களுக்கு/அதை
- wamā antum
- وَمَآ أَنتُمْ
- And not you
- இல்லை/நீங்கள்
- lahu
- لَهُۥ
- of it
- அதை
- bikhāzinīna
- بِخَٰزِنِينَ
- (are) retainers
- சேகரிப்பவர்களாக
Transliteration:
Wa arsalnar riyaaha la waaqiha fa anzalnaa minas samaaa'i maaa'an fa asqai naakumoohu wa maaa antum lahoo bikhaazineen(QS. al-Ḥijr:22)
English Sahih International:
And We have sent the fertilizing winds and sent down water from the sky and given you drink from it. And you are not its retainers. (QS. Al-Hijr, Ayah ௨௨)
Abdul Hameed Baqavi:
மேகம் கருக்கொள்ளும்படியான காற்றையும் நாமே அனுப்பி வைக்கிறோம். அம்மேகத்திலிருந்து மழையையும் நாமே பொழியச் செய்கிறோம். அதனை நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். (மழையின் நீரை மேகத்தில்) நீங்கள் சேகரித்து வைக்கவில்லை; (நாம்தான் சேகரிக்கிறோம்.) (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௨௨)
Jan Trust Foundation
இன்னும் காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம்; பின்னர் வானத்திலிருந்து நாம் மழை பொழிவித்து, அதனை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம் - நீங்கள் அதனைச் சேகரித்து வைப்பவர்களும் இல்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(மேகத்தை) கருக்கொள்ள வைக்கக்கூடிய காற்றுகளை அனுப்புகிறோம். அம்மேகத்திலிருந்து மழை நீரை இறக்கி, அதை உங்களுக்குப் புகட்டுகிறோம். அதை நீங்கள் சேகரிப்பவர்களாக இல்லை.