Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௧௮

Qur'an Surah Al-Hijr Verse 18

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِلَّا مَنِ اسْتَرَقَ السَّمْعَ فَاَتْبَعَهٗ شِهَابٌ مُّبِيْنٌ (الحجر : ١٥)

illā
إِلَّا
Except
எனினும்
mani
مَنِ
(one) who
எவன்
is'taraqa l-samʿa
ٱسْتَرَقَ ٱلسَّمْعَ
steals the hearing
ஒட்டுக் கேட்பான்
fa-atbaʿahu
فَأَتْبَعَهُۥ
then follows him
பின்தொடர்ந்தது/அவனை
shihābun
شِهَابٌ
a burning flame
ஓர் எரி நட்சத்திரம்
mubīnun
مُّبِينٌ
clear
தெளிவானது

Transliteration:

Illaa manis taraqas sam'a fa atba'ahoo shihaabum mubeen (QS. al-Ḥijr:18)

English Sahih International:

Except one who steals a hearing and is pursued by a clear burning flame. (QS. Al-Hijr, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

ஆகவே, (மலக்குகளின்) யாதொரு வார்த்தையைத் திருட்டுத்தனமாகக் கேட்டுப் போவதையன்றி (ஷைத்தான் அவற்றை நெருங்க முடியாது. அவ்வாறு ஷைத்தான் நெருங்கினால் சுடர் வீசும்) எரிகின்ற நெருப்பு ஜுவாலை அதனை (விரட்டிப்) பின் தொடர்ந்து செல்லும். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௧௮)

Jan Trust Foundation

திருட்டுத்தனமாக ஒட்டுக் கேட்கும் ஷைத்தானைத்தவிர; (அப்போது) பிரகாசமான தீப்பந்தம் அந்த ஷைத்தானை (விரட்டிப்) பின் பற்றும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எனினும், எவன் ஒட்டுக் கேட்பானோ, அவனை தெளிவானதோர் எரி நட்சத்திரம் பின் தொடரும்.