Skip to content

ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் - Page: 9

Al-Hijr

(al-Ḥijr)

௮௧

وَاٰتَيْنٰهُمْ اٰيٰتِنَا فَكَانُوْا عَنْهَا مُعْرِضِيْنَۙ ٨١

waātaynāhum
وَءَاتَيْنَٰهُمْ
கொடுத்தோம்/அவர்களுக்கு
āyātinā
ءَايَٰتِنَا
நம் அத்தாட்சிகளை
fakānū
فَكَانُوا۟
இருந்தனர்
ʿanhā
عَنْهَا
அவற்றை
muʿ'riḍīna
مُعْرِضِينَ
புறக்கணித்தவர்களாக
நாம் அவர்களுக்கு நம்முடைய பல அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தும், அவைகளை அவர்கள் புறக்கணித்துக் கொண்டே வந்தார்கள். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௮௧)
Tafseer
௮௨

وَكَانُوْا يَنْحِتُوْنَ مِنَ الْجِبَالِ بُيُوْتًا اٰمِنِيْنَ ٨٢

wakānū
وَكَانُوا۟
இன்னும் இருந்தனர்
yanḥitūna
يَنْحِتُونَ
குடைகின்றனர்
mina l-jibāli buyūtan
مِنَ ٱلْجِبَالِ بُيُوتًا
மலைகளில்/வீடுகளை
āminīna
ءَامِنِينَ
அச்சமற்றவர்களாக
அச்சமற்று வாழலாம் எனக்கருதி அவர்கள் மலைகளைக் குடைந்து வீடுகள் அமைத்தார்கள். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௮௨)
Tafseer
௮௩

فَاَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُصْبِحِيْنَۙ ٨٣

fa-akhadhathumu
فَأَخَذَتْهُمُ
அவர்களைப் பிடித்தது
l-ṣayḥatu
ٱلصَّيْحَةُ
சப்தம்
muṣ'biḥīna
مُصْبِحِينَ
பொழுது விடிந்தவர்களாக இருக்க
அவர்களையும் விடியற்காலையில் (பெரும்) சப்தம் பிடித்துக்கொண்டது. ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௮௩)
Tafseer
௮௪

فَمَآ اَغْنٰى عَنْهُمْ مَّا كَانُوْا يَكْسِبُوْنَۗ ٨٤

famā aghnā
فَمَآ أَغْنَىٰ
தடுக்கவில்லை
ʿanhum
عَنْهُم
அவர்களை விட்டும்
mā kānū
مَّا كَانُوا۟
எவை/இருந்தனர்
yaksibūna
يَكْسِبُونَ
செய்வார்கள்
அவர்கள் (தங்களை பாதுகாத்துக் கொள்ள) செய்திருந்தவைகளில் ஒன்றுமே அவர்களுக்குப் பலனளிக்கவில்லை. ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௮௪)
Tafseer
௮௫

وَمَا خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَآ اِلَّا بِالْحَقِّۗ وَاِنَّ السَّاعَةَ لَاٰتِيَةٌ فَاصْفَحِ الصَّفْحَ الْجَمِيْلَ ٨٥

wamā khalaqnā
وَمَا خَلَقْنَا
நாம் படைக்கவில்லை
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை
wal-arḍa
وَٱلْأَرْضَ
இன்னும் பூமியை
wamā baynahumā
وَمَا بَيْنَهُمَآ
இன்னும் அவை இரண்டிற்கு மத்தியிலுள்ளவை
illā bil-ḥaqi
إِلَّا بِٱلْحَقِّۗ
உண்மையான நோக்கத்திற்கே தவிர
wa-inna l-sāʿata
وَإِنَّ ٱلسَّاعَةَ
நிச்சயம்/மறுமை
laātiyatun
لَءَاتِيَةٌۖ
வரக்கூடியதே
fa-iṣ'faḥi
فَٱصْفَحِ
ஆகவே புறக்கணிப்பீராக
l-ṣafḥa
ٱلصَّفْحَ
புறக்கணிப்பாக
l-jamīla
ٱلْجَمِيلَ
அழகியது
வானங்களையும் பூமியையும், இவைகளுக்கு மத்தியில் உள்ளவைகளையும் தக்க காரணமின்றி நாம் படைக்கவில்லை. (நபியே! இவர்களுடைய தண்டனைக்குரிய) காலம் நிச்சயமாக வரக்கூடியதே! (அதுவரையில் இத்துஷ்டர்களின் விஷமத்தை) நீங்கள் கண்ணியமான முறையில் புறக்கணித்து வாருங்கள். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௮௫)
Tafseer
௮௬

اِنَّ رَبَّكَ هُوَ الْخَلّٰقُ الْعَلِيْمُ ٨٦

inna rabbaka huwa
إِنَّ رَبَّكَ هُوَ
நிச்சயமாக/உம் இறைவன்தான்
l-khalāqu
ٱلْخَلَّٰقُ
மகா படைப்பாளன்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
நன்கறிந்தவன்
நிச்சயமாக உங்களது இறைவனே (அனைத்தையும்) படைத்தவனும், இவர்கள் அனைவரையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௮௬)
Tafseer
௮௭

وَلَقَدْ اٰتَيْنٰكَ سَبْعًا مِّنَ الْمَثَانِيْ وَالْقُرْاٰنَ الْعَظِيْمَ ٨٧

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
ātaynāka
ءَاتَيْنَٰكَ
கொடுத்தோம்/உமக்கு
sabʿan
سَبْعًا
ஏழு வசனங்களை
mina l-mathānī
مِّنَ ٱلْمَثَانِى
மீண்டும் மீண்டும் ஓதப்படுகின்ற வசனங்களில்
wal-qur'āna
وَٱلْقُرْءَانَ
இன்னும் குர்ஆனை
l-ʿaẓīma
ٱلْعَظِيمَ
மகத்துவமிக்கது
(நபியே!) நிச்சயமாக நாம் உங்களுக்கு திரும்பத் திரும்ப ஓதக்கூடிய ஏழு வசனங்களை (உடைய "அல்ஹம்து" என்னும் அத்தியாயத்தை)யும், இந்த மகத்தான குர்ஆனையும் அளித்திருக்கிறோம். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௮௭)
Tafseer
௮௮

لَا تَمُدَّنَّ عَيْنَيْكَ اِلٰى مَا مَتَّعْنَا بِهٖٓ اَزْوَاجًا مِّنْهُمْ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَاخْفِضْ جَنَاحَكَ لِلْمُؤْمِنِيْنَ ٨٨

lā tamuddanna
لَا تَمُدَّنَّ
கண்டிப்பாக நீட்டாதீர்
ʿaynayka
عَيْنَيْكَ
உம் இரு கண்களை
ilā
إِلَىٰ
பக்கம்
mā mattaʿnā
مَا مَتَّعْنَا
எதை/சுகமளித்தோம்
bihi
بِهِۦٓ
அதைக் கொண்டு
azwājan
أَزْوَٰجًا
சில வகையினர்களுக்கு
min'hum
مِّنْهُمْ
இவர்களில்
walā taḥzan
وَلَا تَحْزَنْ
இன்னும் கவலைப்படாதீர்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
wa-ikh'fiḍ
وَٱخْفِضْ
இன்னும் தாழ்த்துவீராக
janāḥaka
جَنَاحَكَ
உமது புஜத்தை
lil'mu'minīna
لِلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு
(பாவிகளாகிய) இவர்கள் (இவ்வுலகில்) பல வகைகளிலும் சுகமனுபவிக்க இவர்களுக்கு நாம் கொடுத்திருப்பவைகளின் பக்கம் நீங்கள் உங்கள் இரு கண்களையும் நீட்டாதீர்கள்; நீங்கள் இவர்களுக்காக கவலையும் படாதீர்கள். எனினும், நீங்கள்நம்பிக்கையாளர்களுக்கு உங்களது பணிவான அன்பைக் காட்டுங்கள். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௮௮)
Tafseer
௮௯

وَقُلْ اِنِّيْٓ اَنَا النَّذِيْرُ الْمُبِيْنُۚ ٨٩

waqul
وَقُلْ
கூறுவீராக
innī anā
إِنِّىٓ أَنَا
நிச்சயமாக நான்தான்
l-nadhīru
ٱلنَّذِيرُ
எச்சரிப்பாளன்
l-mubīnu
ٱلْمُبِينُ
தெளிவானவன்
அன்றி, "நிச்சயமாக நான் பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவன்" என்றும் கூறுங்கள். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௮௯)
Tafseer
௯௦

كَمَآ اَنْزَلْنَا عَلَى الْمُقْتَسِمِيْنَۙ ٩٠

kamā anzalnā
كَمَآ أَنزَلْنَا
நாம் இறக்கியது போன்றே
ʿalā
عَلَى
மீது
l-muq'tasimīna
ٱلْمُقْتَسِمِينَ
பிரித்தவர்கள்
(நபியே! முன்னுள்ள வேதங்களைப்) பலவாறாகப் பிரித்தவர்கள் மீது முன்னர் நாம் (வேதனையை) இறக்கியவாறே, ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௯௦)
Tafseer